இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 92

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்,ஏசா 58:13 ஏசா 58:14 எபிரெ 4:9 வெளிப் 4:8-11
2பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,சங் 71:15 சங் 89:1 சங் 89:2 சங் 145:2 ஏசா 63:7 புலம் 3:22 புலம் 3:23 யோவா 1:17
3காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்.சங் 33:2 சங் 57:8 சங் 68:25 சங் 81:2 சங் 81:3 சங் 149:3 சங் 150:3-5 1நாளா 15:16 1நாளா 25:6 2நாளா 23:5 2நாளா 29:25
4கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்தசத்தமிடுவேன்.சங் 64:10 சங் 104:31 சங் 104:34 சங் 106:47 சங் 106:48 சங் 126:3 சங் 145:6 சங் 145:7 ஏசா 61:2-11 ஏசா 65:13 ஏசா 65:14 ஏசா 66:10 ஏசா 66:11 எரே 31:7 எரே 31:11-13 செப் 3:14-16 லூக் 1:47 யோவா 16:22 2கொரி 2:14 வெளிப் 18:20
5கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.சங் 40:5 சங் 66:3 சங் 104:24 சங் 111:2 சங் 145:3 சங் 145:4 வெளிப் 15:3
6மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான்.சங் 32:9 சங் 73:22 சங் 94:8 நீதி 30:2 ஏசா 1:3 எரே 10:14 1கொரி 2:14
7துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.சங் 37:1 சங் 37:2 சங் 37:35 சங் 37:38 சங் 90:5 சங் 90:6 சங் 103:15 சங் 103:16 ஏசா 37:27 ஏசா 40:6 ஏசா 40:7 யாக் 1:10 யாக் 1:11 1பேது 1:24
8கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர்.சங் 56:2 சங் 83:18 சங் 102:26 சங் 102:27 யாத் 18:11 பிரச 5:8 தானி 4:34 தானி 4:35 அப் 12:1 அப் 12:22-24
9கர்த்தாவே, உமது சத்துருக்கள் அழிவார்கள்; உமது சத்துருக்கள் அழிந்தேபோவார்கள்; சகல அக்கிரமக்காரரும் சிதறுண்டுபோவார்கள்.சங் 21:8 சங் 21:9 சங் 37:20 சங் 68:1 சங் 68:2 சங் 73:27 சங் 89:10 நியா 5:31 லூக் 19:27 2தெச 1:7-9
10என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன்.சங் 89:17 சங் 89:24 சங் 112:9 சங் 132:17 சங் 148:14 1சாமு 2:1 1சாமு 2:10 லூக் 1:69
11என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.சங் 37:34 சங் 54:7 சங் 59:10 சங் 91:8 சங் 112:8
12நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.சங் 92:7 சங் 52:8 ஏசா 55:13 ஏசா 65:22 ஓசி 14:5 ஓசி 14:6
13கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.ஏசா 60:21 ரோம 6:5 ரோம 11:17 எபே 3:17
14கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி,சங் 1:3 மத் 3:10 யோவா 15:2-5 கலா 5:22 கலா 5:23 பிலிப் 1:11 யூதா 1:12
15அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.யோவா 10:27-29 யோவா 15:1-3 1கொரி 1:8 1கொரி 1:9 1தெச 5:23 1தெச 5:24 தீத் 1:2 1பேது 1:4 1பேது 1:5
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.