இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 91

                   
புத்தகங்களைக் காட்டு
1உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.சங் 27:5 சங் 31:20 சங் 32:7 சங் 52:8 சங் 61:3 சங் 61:4 சங் 90:1 ஏசா 8:14 எசே 11:16 ஓசி 14:5 ஓசி 14:6 1யோவா 4:15 1யோவா 4:16
2நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.சங் 91:9 சங் 18:2 சங் 46:1 சங் 71:3 சங் 142:5 உபா 32:30 உபா 32:31 உபா 33:27-29 நீதி 18:10
3அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்.சங் 124:7 சங் 141:9 நீதி 7:23 பிரச 9:12 ஓசி 9:8 ஆமோ 3:5 1தீமோ 6:9 2தீமோ 2:26
4அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.சங் 17:8 சங் 57:1 சங் 61:4 உபா 32:11 ரூத் 2:12 மத் 23:37
5இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,சங் 3:6 சங் 27:1-3 சங் 46:2 சங் 112:7 யோபு 5:19-27 நீதி 28:1 ஏசா 43:2 மத் 8:26 எபிரெ 13:6
6இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.சங் 121:5 சங் 121:6 யாத் 12:29 யாத் 12:30 2இரா 19:35
7உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.சங் 32:6 ஆதி 7:23 யாத் 12:12 யாத் 12:13 எண் 14:37 எண் 14:38 யோசு 14:10
8உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.சங் 37:34 சங் 58:10 சங் 58:11 சங் 92:11 நீதி 3:25 நீதி 3:26 மல்கி 1:5
9எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.சங் 91:2 சங் 142:4 சங் 142:5 சங் 146:5 சங் 146:6
10ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.சங் 121:7 நீதி 12:21 ரோம 8:25
11உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.சங் 34:7 சங் 71:3 2இரா 6:16 2இரா 6:17 மத் 4:6 லூக் 4:10 லூக் 4:11 எபிரெ 1:14
12உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.ஏசா 46:3 ஏசா 63:9
13சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.நியா 14:5 நியா 14:6 யோபு 5:23 1சாமு 17:37 தானி 6:22 2தீமோ 4:17
14அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.சங் 91:9 1நாளா 29:3 யோவா 14:23 யோவா 16:27 ரோம 8:28 யாக் 1:12 யாக் 2:5
15அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.சங் 10:17 சங் 18:3 சங் 18:4 சங் 18:15 ஏசா 58:9 ஏசா 65:24 எரே 29:12 எரே 29:13 எரே 33:3 ரோம 10:12 ரோம 10:13 எபிரெ 5:7
16நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என், இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.சங் 21:4 ஆதி 25:8 யோபு 5:26 நீதி 3:2 நீதி 3:16 நீதி 22:4 ஏசா 65:20-22
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.