| 1 | ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர். | எண் 13:1-14 |
| 2 | பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர். | யோபு 38:4-6 யோபு 38:28-6 யோபு 38:29-6 நீதி 8:25 நீதி 8:26 |
| 3 | நீர் மனுஷரை நீர்த்துளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள் என்கிறீர். | சங் 104:29 சங் 146:4 ஆதி 3:19 ஆதி 6:6 ஆதி 6:7 எண் 14:35 யோபு 12:10 யோபு 34:14 யோபு 34:15 பிரச 12:7 |
| 4 | உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது. | 2பேது 3:8 |
| 5 | அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டு போகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். | யோபு 9:26 யோபு 22:16 யோபு 27:20 யோபு 27:21 ஏசா 8:7 ஏசா 8:8 எரே 46:7 எரே 46:8 |
| 6 | அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோகும். | சங் 92:7 யோபு 14:2 மத் 6:30 |
| 7 | நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம். | சங் 90:9 சங் 90:11 சங் 39:11 சங் 59:13 எண் 17:12 எண் 17:13 உபா 2:14-16 எபிரெ 3:10 எபிரெ 3:11 எபிரெ 3:17-19 எபிரெ 4:1 எபிரெ 4:2 |
| 8 | எங்கள் அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர். | சங் 10:11 சங் 50:21 சங் 139:1-4 யோபு 34:21 எரே 9:13-16 எரே 16:17 எரே 23:24 எசே 8:12 வெளிப் 20:12 |
| 9 | எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒரு கதையைப்போல் எங்கள் வருஷங்களைக் கழித்துப்போட்டோம். | சங் 78:33 |
| 10 | எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கரமாய்க் கடந்து போகிறது நாங்களும் பறந்துபோகிறோம். | ஆதி 47:9 உபா 34:7 |
| 11 | உமது கோபத்தின் வல்லமையையும், உமக்குப் பயப்படத்தக்க விதமாய் உமது உக்கிரத்தையும் அறிந்து கொள்ளுகிறவன் யார்? | லேவி 26:18 லேவி 26:21 லேவி 26:24 லேவி 26:28 உபா 28:59 உபா 29:20-29 ஏசா 33:14 நாகூ 1:6 லூக் 12:5 2கொரி 5:11 வெளிப் 6:17 |
| 12 | நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். | சங் 39:4 உபா 32:29 பிரச 9:10 லூக் 12:35-40 யோவா 9:4 எபே 5:16 எபே 5:17 |
| 13 | கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும். | சங் 6:4 சங் 80:14 எரே 12:15 யோவே 2:13 யோவே 2:14 சகரி 1:16 |
| 14 | நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும். | சங் 36:7 சங் 36:8 சங் 63:3-5 சங் 65:4 சங் 103:3-5 எரே 31:15 சகரி 9:17 |
| 15 | தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும். | சங் 30:5 சங் 126:5 சங் 126:6 ஏசா 12:1 ஏசா 40:1 ஏசா 40:2 ஏசா 61:3 ஏசா 65:18 ஏசா 65:19 எரே 31:12 எரே 31:13 மத் 5:4 யோவா 16:20 வெளிப் 7:14-17 |
| 16 | உமது கிரியை உமது ஊழியக்காரருக்கும், உமது மகிமை அவர்கள் பிள்ளைகளுக்கும் விளங்குவதாக. | சங் 44:1 எண் 14:15-24 ஆபகூ 3:2 |
| 17 | எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள் மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும். | சங் 27:4 சங் 50:2 சங் 80:3 சங் 80:7 சங் 110:3 2கொரி 3:18 1யோவா 3:2 |