| 1 | கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன். | 1இரா 4:31 1நாளா 2:6 |
| 2 | கிருபை என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருக்கும்; உமது உண்மையை வானங்களிலே ஸ்தாபிப்பீர் என்றேன். | சங் 36:5 சங் 103:17 நெகே 1:5 நெகே 9:17 நெகே 9:31 லூக் 1:50 எபே 1:6 எபே 1:7 எபே 1:5 எபே 1:37 எபே 119:89 எபே 146:6 எண் 23:19 மத் 24:35 எபிரெ 6:18 |
| 3 | என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடே உடன்படிக்கைபண்ணி, என் தாசனாகிய தாவீதை நோக்கி: | சங் 89:28 சங் 89:34 சங் 89:39 2சாமு 7:10-16 2சாமு 23:5 1இரா 8:16 ஏசா 55:3 எரே 30:9 எரே 33:20 எரே 33:21 எசே 34:23 எசே 34:24 ஓசி 3:5 லூக் 1:32 லூக் 1:33 |
| 4 | என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா) | சங் 89:1 சங் 89:29 சங் 89:36 சங் 72:17 சங் 132:12 2சாமு 7:12-16 2சாமு 7:29-16 1இரா 9:5 1நாளா 17:10-14 1நாளா 22:10 ஏசா 9:6 ஏசா 9:7 சகரி 12:8 லூக் 1:32 லூக் 1:33 லூக் 20:41-44 அப் 13:32-37 ரோம 1:3 ரோம 1:4 ரோம 15:12 பிலிப் 2:9-11 வெளிப் 22:16 |
| 5 | கர்த்தாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும். | சங் 19:1 சங் 50:6 சங் 97:6 ஏசா 44:23 லூக் 2:10-15 எபே 3:10 1பேது 1:12 வெளிப் 5:11-14 வெளிப் 7:10-12 |
| 6 | ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்? | சங் 89:8 சங் 40:5 சங் 71:19 சங் 73:25 சங் 86:8 சங் 113:5 யாத் 15:11 எரே 10:6 |
| 7 | தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர். | சங் 76:7-11 லேவி 10:3 ஏசா 6:2-7 ஏசா 66:2 எரே 10:7 எரே 10:10 மத் 10:28 லூக் 12:4 லூக் 12:5 அப் 5:11 எபிரெ 12:28 எபிரெ 12:29 வெளிப் 15:3 வெளிப் 15:4 |
| 8 | சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது. | சங் 84:12 யோசு 22:22 ஏசா 28:22 |
| 9 | தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர். | சங் 29:10 சங் 65:7 சங் 66:5 சங் 66:6 சங் 93:3 சங் 93:4 சங் 107:25-29 யோபு 38:8-11 நாகூ 1:4 மத் 8:24-27 மத் 14:32 மாற் 4:39 மாற் 4:41 |
| 10 | நீர் ராகாபை வெட்டுண்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; உமது வல்லமையான புயத்தினால் உம்முடைய சத்துருக்களைச் சிதறடித்தீர். | சங் 78:43-72 சங் 105:27-45 யாத் 7:1-15 |
| 11 | வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவரையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர். | சங் 24:1 சங் 24:2 சங் 50:12 சங் 115:16 ஆதி 1:1 ஆதி 2:1 1நாளா 29:11 யோபு 41:11 1கொரி 10:26 1கொரி 10:28 |
| 12 | வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; தாபோரும் எர்மோனும் உம்முடைய நாமம் விளங்கக் கெம்பீரிக்கும். | யோபு 26:7 |
| 13 | உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது. | சங் 89:10 சங் 62:11 தானி 4:34 தானி 4:35 மத் 6:13 |
| 14 | நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும். | சங் 45:6 சங் 45:7 சங் 97:2 சங் 99:4 சங் 145:17 உபா 32:4 வெளிப் 15:3 |
| 15 | கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள். | சங் 90:6 சங் 98:4-6 சங் 100:1 லேவி 25:9 எண் 10:10 எண் 23:21 ஏசா 52:7 ஏசா 52:8 நாகூ 1:15 லூக் 2:10-14 ரோம 10:15 ரோம 10:18 |
| 16 | அவர்கள் உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள். | சங் 89:12 சங் 29:5 சங் 29:7 சங் 33:21 சங் 44:8 லூக் 1:47 பிலிப் 4:4 |
| 17 | நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும். | சங் 28:7 1கொரி 1:30 1கொரி 1:31 2கொரி 12:9 2கொரி 12:10 பிலிப் 4:13 |
| 18 | கர்த்தரால் எங்கள் கேடகமும், இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு. | சங் 47:9 சங் 62:1 சங் 62:2 சங் 62:6 சங் 84:11 சங் 91:1 சங் 91:2 ஆதி 15:1 உபா 33:27-29 |
| 19 | அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான்மேல் வைத்து, ஜனத்தில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன். | 1சாமு 16:1 2சாமு 7:8-17 லூக் 1:70 2பேது 1:21 2பேது 3:2 |
| 20 | என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் பண்ணினேன். | 1சாமு 16:1 1சாமு 16:12 1சாமு 16:13 ஏசா 61:1-3 யோவா 3:34 |
| 21 | என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும். | சங் 18:32-39 சங் 80:15-17 2சாமு 7:8-16 ஏசா 42:1 ஏசா 49:8 |
| 22 | சத்துரு அவனை நெருக்குவதில்லை; நியாயக்கேட்டின் மகன் அவனை ஒடுக்குவதில்லை. | 1நாளா 17:9 மத் 4:1-10 |
| 23 | அவன் சத்துருக்களை அவனுக்கு முன்பாக மடங்கடித்து, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன். | 2சாமு 3:1 2சாமு 7:1 2சாமு 7:9 2சாமு 22:40-44 |
| 24 | என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும்; என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும். | சங் 89:2-5 சங் 89:28-5 சங் 89:33-5 சங் 61:7 யோவா 1:17 2கொரி 1:20 |
| 25 | அவன் கையைச் சமுத்திரத்தின்மேலும், அவன் வலது கரத்தை ஆறுகள்மேலும் ஆளும்படி வைப்பேன். | சங் 2:8 சங் 72:8-11 சங் 80:11 1இரா 4:21 வெளிப் 11:15 |
| 26 | அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான். | 2சாமு 7:14 1நாளா 22:10 மத் 26:39 மத் 26:42 லூக் 23:46 யோவா 11:41 யோவா 20:17 எபிரெ 1:5 |
| 27 | நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப்பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன். | சங் 2:7 ரோம 8:29 கொலோ 1:15 கொலோ 1:18 |
| 28 | என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும். | 2சாமு 7:15 2சாமு 7:16 ஏசா 54:10 ஏசா 55:3 அப் 13:32-34 |
| 29 | அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும் செய்வேன். | சங் 89:4 சங் 89:36 சங் 132:11 1நாளா 17:11 1நாளா 17:12 ஏசா 59:21 எரே 33:17-26 |
| 30 | அவன் பிள்ளைகள் என் நியாயங்களின்படி நடவாமல், என் வேதத்தை விட்டு விலகி; | சங் 132:12 2சாமு 7:14 1நாளா 28:9 2நாளா 7:17-22 |
| 31 | என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் என் நியமங்களை மீறி நடந்தால்; | சங் 55:20 |
| 32 | அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன். | யாத் 32:34 2சாமு 7:14 1இரா 11:6 1இரா 11:14 1இரா 11:31 1இரா 11:39 நீதி 3:11 நீதி 3:12 ஆமோ 3:2 1கொரி 11:31 1கொரி 11:32 எபிரெ 12:6-11 |
| 33 | ஆனாலும் என் கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன். | 2சாமு 7:13 2சாமு 7:15 1இரா 11:13 1இரா 11:32 1இரா 11:36 ஏசா 54:8-10 எரே 33:20-26 புலம் 3:31 புலம் 3:32 1கொரி 15:25 |
| 34 | என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன். | லேவி 26:44 எரே 14:21 எரே 33:20 |
| 35 | ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய்சொல்லேன். | சங் 110:4 சங் 132:11 ஆமோ 4:2 ஆமோ 8:7 எபிரெ 6:13 எபிரெ 6:17 |
| 36 | அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும். | சங் 89:4 சங் 89:29 2சாமு 7:16 ஏசா 53:10 ஏசா 59:21 யோவா 12:34 |
| 37 | சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா) | சங் 72:7 சங் 104:19 ஆதி 1:14-18 எரே 31:35 எரே 31:36 |
| 38 | ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்; நீர் அபிஷேகம்பண்ணுவித்தவன்மேல் உக்கிரமானீர். | சங் 44:9-26 சங் 60:1 சங் 60:10 சங் 77:7 1நாளா 28:9 எரே 12:1 ஓசி 9:17 |
| 39 | உமது அடியானுடன் நீர் பண்ணின உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவன் கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர். | சங் 89:34-36 சங் 77:10 சங் 116:11 யோவா 13:7 |
| 40 | அவன் மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, அவன் அரணான ஸ்தலங்களைப் பாழாக்கினீர். | சங் 80:12 யோபு 1:10 ஏசா 5:5 ஏசா 5:6 |
| 41 | வழிநடக்கிற யாவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; தன் அயலாருக்கு நிந்தையானான். | சங் 44:10-14 சங் 80:13 ஏசா 10:6 எரே 50:17 |
| 42 | அவன் சத்துருக்களின் வலது கையை நீர் உயர்த்தி, அவன் விரோதிகள் யாவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர். | லேவி 26:17 லேவி 26:25 உபா 28:25 உபா 28:43 புலம் 2:17 யோவா 16:20 வெளிப் 11:10 |
| 43 | அவன் பட்டயத்தின் கருக்கை மழுக்கிப்போட்டு, அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர். | எசே 30:21-25 |
| 44 | அவன் மகிமையை அற்றுப்போகப்பண்ணி, அவன் சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர். | 1சாமு 4:21 1சாமு 4:22 1இரா 12:16-20 1இரா 14:25-28 புலம் 4:1 புலம் 4:2 2தெச 2:3-10 |
| 45 | அவன் வாலிபநாட்களைக் குறுக்கி, அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா) | சங் 89:28 சங் 89:29 2நாளா 10:19 ஏசா 63:18 |
| 46 | எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ? | சங் 13:1 சங் 13:2 சங் 79:5 சங் 85:5 சங் 90:13 |
| 47 | என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனுபுத்திரர் யாவரையும் வீணாகச் சிருஷ்டிக்கவேண்டியதென்ன? | சங் 39:5 சங் 39:6 சங் 119:84 யோபு 7:7 யோபு 9:25 யோபு 9:26 யோபு 10:9 |
| 48 | மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா) | சங் 49:7-9 யோபு 30:23 பிரச 3:19 பிரச 3:20 பிரச 8:8 பிரச 9:5 பிரச 12:7 எபிரெ 9:27 |
| 49 | ஆண்டவரே, நீர் தாவீதுக்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்பண்ணின உமது பூர்வ கிருபைகள் எங்கே? | சங் 77:9 சங் 77:10 ஏசா 63:7-15 |
| 50 | ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும், நீர் அபிஷேகம் பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால், | சங் 44:13-16 சங் 69:9 சங் 69:19 சங் 69:20 சங் 74:18 சங் 74:22 சங் 79:10-12 ரோம 15:3 |
| 51 | கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான ஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும். | மத் 5:10-12 அப் 5:41 1கொரி 4:12 1கொரி 4:13 எபிரெ 10:33 எபிரெ 11:36 |
| 52 | கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென். ஆமென். | சங் 41:13 சங் 72:18 சங் 72:19 சங் 106:48 நெகே 9:5 ஆபகூ 3:17-19 மத் 6:13 1தீமோ 1:17 |