இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 88

                   
புத்தகங்களைக் காட்டு
1என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.சங் 53:1
2என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.சங் 79:11 சங் 141:1 சங் 141:2 1இரா 8:31 புலம் 3:8
3என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.சங் 88:14 சங் 88:15 சங் 22:11-21 சங் 69:17-21 சங் 77:2 சங் 143:3 சங் 143:4 யோபு 6:2-4 ஏசா 53:3 ஏசா 53:10 ஏசா 53:11 புலம் 3:15-19 மத் 26:37-39 மாற் 14:33 மாற் 14:34
4நான் குழியில் இறங்குகிறவர்களோடு எண்ணப்பட்டு, பெலனற்ற மனுஷனைப்போலானேன்.சங் 28:1 சங் 30:9 சங் 143:7 யோபு 17:1 ஏசா 38:17 ஏசா 38:18 எசே 26:20 யோனா 2:6 2கொரி 1:9
5மரித்தவர்களில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுப்புண்டுபோய்ப் பிரேதக்குழிகளிலே கிடக்கிறவர்களைப்போலானேன்.ஏசா 14:9-12 ஏசா 38:10-12 எசே 32:18-32
6என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்.சங் 40:2 சங் 86:13 உபா 32:22
7உம்முடைய கோபம் என்னை இருத்துகிறது; உம்முடைய அலைகள் எல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா)சங் 38:1 சங் 90:7 சங் 102:10 யோபு 6:4 யோபு 10:16 யோவா 3:36 ரோம 2:5-9 1பேது 2:24 வெளிப் 6:16 வெளிப் 6:17
8எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்; நான் வெளியே புறப்படக்கூடாதபடி அடைபட்டிருக்கிறேன்.சங் 88:18 சங் 31:11 சங் 143:4 1சாமு 23:18-20 யோபு 19:13-19 யோவா 11:57
9துக்கத்தினால் என் கண் தொய்ந்துபோயிற்று; கர்த்தாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என் கைகளை விரிக்கிறேன்.சங் 38:10 சங் 42:3 சங் 102:9 யோபு 16:20 யோபு 17:7 புலம் 3:48 புலம் 3:49 யோவா 11:35
10மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா)சங் 6:5 சங் 30:9 சங் 115:17 சங் 118:17 ஏசா 38:18 ஏசா 38:19 மாற் 5:35 மாற் 5:36
11பிரேதக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?சங் 55:23 சங் 73:18 யோபு 21:30 யோபு 26:6 நீதி 15:11 மத் 7:13 ரோம 9:22 2பேது 2:1
12இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?சங் 143:3 யோபு 10:21 யோபு 10:22 ஏசா 8:22 மத் 8:12 யூதா 1:13 யூதா 1:5 யூதா 31:12 பிரச 2:16 பிரச 8:10 பிரச 9:5
13நானோ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.சங் 5:3 சங் 119:147 சங் 119:148 மாற் 1:35
14கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?சங் 43:2 சங் 77:7-9 மத் 27:46
15சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.சங் 73:14 யோபு 17:1 யோபு 17:11-16 ஏசா 53:3
16உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; உம்முடைய பயங்கரங்கள் என்னை அதம்பண்ணுகிறது.சங் 38:1 சங் 38:2 சங் 89:46 சங் 90:7 சங் 90:11 சங் 102:10 ஏசா 53:4-6 ரோம 8:32 கலா 3:13 வெளிப் 6:17
17அவைகள் நாடோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து, ஏகமாய் என்னை வளைந்து கொள்ளுகிறது.சங் 22:16 சங் 42:7 சங் 69:1 சங் 69:2 சங் 116:3 யோபு 16:12 யோபு 16:13 யோபு 30:14 யோபு 30:15 புலம் 3:5-7 மத் 27:39-44
18சிநேகிதனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள்.சங் 88:8 சங் 31:11 சங் 38:11 யோபு 19:12-15
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.