இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 79

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவனே, புறஜாதியார் உமது சுதந்தரத்தில் வந்து, உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள்.சங் 74:1
2உமது ஊழியக்காரரின் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், உமது பரிசுத்தவான்களின் மாம்சத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள்.எரே 7:33 எரே 15:3 எரே 16:4 எரே 34:20
3எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை.சங் 79:10 மத் 23:35 ரோம 8:36 வெளிப் 16:6 வெளிப் 17:6 வெளிப் 18:24
4எங்கள் அயலாருக்கு நிந்தையும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமானோம்.சங் 44:13 சங் 44:14 சங் 80:6 சங் 89:41 உபா 28:37 எரே 24:9 எரே 25:18 எரே 42:18 புலம் 2:15 புலம் 2:16 புலம் 5:1 எசே 35:12 எசே 36:3 எசே 36:15
5எதுவரைக்கும் கர்த்தாவே! நீர் என்றைக்கும் கோபமாயிருப்பீரோ? உம்முடைய எரிச்சல் அக்கினியைப் போல் எரியுமோ?சங் 13:1 சங் 13:2 சங் 74:1 சங் 74:9 சங் 74:10 சங் 80:4 சங் 89:46 வெளிப் 6:10
6உம்மை அறியாத ஜாதிகள்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத ராஜ்யங்கள்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்.சங் 69:24 ஏசா 42:25 வெளிப் 16:1-21
7அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே.சங் 80:13 ஏசா 9:12 எரே 50:7 எரே 51:34 எரே 51:35 சகரி 1:15
8பூர்வகாலத்து அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாதேயும்; உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாய் எங்களுக்கு நேரிடுவதாக; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம்.சங் 25:7 சங் 130:3 யாத் 32:34 1இரா 17:18 ஏசா 64:9 ஓசி 8:13 ஓசி 9:9 வெளிப் 18:5
9எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து, உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும்.சங் 115:1 2நாளா 14:11 மல்கி 2:2 எபே 1:6
10அவர்களுடைய தேவன் எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்? உமது ஊழியக்காரருடைய சிந்துண்ட இரத்தத்தின் பழிவாங்குதல் ஜாதிகளுக்குள்ளே எங்கள் கண்களுக்கு முன்பாக விளங்கும்படி செய்யும்.சங் 42:3 சங் 42:10 சங் 115:2 யோவே 2:17 மீகா 7:10
11கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்; கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது புயபலத்தினால் உயிரோடே காத்தருளும்.சங் 12:5 சங் 69:33 சங் 102:20 யாத் 2:23 யாத் 2:24 ஏசா 42:7
12ஆண்டவரே, எங்கள் அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ஏழத்தனையாக அவர்கள் மடியிலே திரும்பப்பண்ணும்.ஆதி 4:15 லேவி 26:21 லேவி 26:28 ஏசா 65:5-7 எரே 32:18 லூக் 6:38
13அப்பொழுது, உம்முடைய ஜனங்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.சங் 74:1 சங் 95:7 சங் 100:3
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.