| 1 | என் ஜனங்களே, என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள். | சங் 49:1-3 சங் 51:4 நியா 5:3 நீதி 8:4-6 ஏசா 51:4 ஏசா 55:3 மத் 13:9 |
| 2 | என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன். | சங் 49:4 மத் 13:13 மத் 13:34 மத் 13:35 |
| 3 | அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். | சங் 44:1 சங் 48:8 யாத் 12:26 யாத் 12:27 யாத் 13:8 யாத் 13:14 யாத் 13:15 |
| 4 | பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதியங்களையும் விவரிப்போம். | சங் 145:4-6 உபா 4:9 உபா 6:7 யோவே 1:3 |
| 5 | அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து, அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். | சங் 81:5 சங் 119:152 சங் 147:19 உபா 4:45 உபா 6:7 உபா 11:19 ஏசா 8:20 ரோம 3:2 1யோவா 5:9-12 |
| 6 | இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்; | சங் 48:13 சங் 71:18 சங் 102:18 சங் 145:4 எஸ்தர் 9:28 |
| 7 | தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறவாமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்; | சங் 40:4 சங் 62:5 சங் 91:14 சங் 130:6 சங் 130:7 சங் 146:5 எரே 17:7 எரே 17:8 1பேது 1:21 |
| 8 | இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார். | சங் 68:6 சங் 106:7 யாத் 32:9 யாத் 33:3 யாத் 33:5 யாத் 34:9 உபா 9:6 உபா 9:13 உபா 31:27 2இரா 17:14 எசே 2:3-8 எசே 20:8 எசே 20:18 மத் 23:31-33 அப் 7:51 |
| 9 | ஆயுதமணிந்த வில்வீரரான எப்பிராயீம் புத்திரர் யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள். | உபா 1:41-44 யோசு 17:16-18 1சாமு 4:10 1சாமு 31:1 |
| 10 | அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும், | உபா 31:16 உபா 31:20 நியா 2:10-12 2இரா 17:14 2இரா 17:15 நெகே 9:26-29 எரே 31:32 |
| 11 | அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள். | சங் 78:7 சங் 106:13 சங் 106:21 சங் 106:22 உபா 32:18 எரே 2:32 |
| 12 | அவர்களுடைய பிதாக்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார். | சங் 78:42-50 சங் 105:27-38 சங் 135:9 யாத் 7:1-12 உபா 4:34 உபா 6:22 நெகே 9:10 |
| 13 | கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படிச்செய்தார். | சங் 66:6 சங் 106:9 சங் 106:10 சங் 136:13-15 யாத் 14:1-15 ஏசா 63:13 1கொரி 10:2 1கொரி 10:3 |
| 14 | பகலிலே மேகத்தினாலும், இராமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார். | சங் 105:39 யாத் 13:21 யாத் 13:22 யாத் 14:24 யாத் 40:35-38 நெகே 9:12 நெகே 9:19 |
| 15 | வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார். | சங் 105:41 சங் 114:8 யாத் 17:6 எண் 20:11 ஏசா 41:18 ஏசா 43:20 யோவா 7:37 யோவா 7:38 1கொரி 10:4 வெளிப் 22:1 வெளிப் 22:17 |
| 16 | கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார். | சங் 105:41 உபா 8:15 உபா 9:21 |
| 17 | என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, வறண்ட வெளியிலே உன்னதமானவருக்குக் கோபம் மூட்டினார்கள். | சங் 78:32 சங் 95:8-10 சங் 106:13-32 உபா 9:8 உபா 9:12-22 எபிரெ 3:16-19 |
| 18 | தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக்கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். | சங் 106:14 சங் 106:15 யாத் 16:2 யாத் 16:3 எண் 11:4 1கொரி 10:6 யாக் 4:2 யாக் 4:3 |
| 19 | அவர்கள் தேவனுக்கு விரோதமாய்ப் பேசி: தேவன் வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ? | யாத் 16:8-10 எண் 21:5 2நாளா 32:19 யோபு 34:37 ரோம 9:20 வெளிப் 13:6 |
| 20 | இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாய்ப் புரண்டுவந்தது; அவர் அப்பத்தையும் கொடுக்கக்கூடுமோ? தம்முடைய ஜனத்திற்கு மாம்சத்தையும் ஆயத்தப்படுத்துவாரோ? என்றார்கள். | யாத் 17:6 யாத் 17:7 எண் 20:11 |
| 21 | ஆகையால் கர்த்தர் அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசியாமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால், | சங் 78:31 எண் 11:10 1கொரி 10:5 1கொரி 10:11 யூதா 1:5 |
| 22 | யாக்கோபுக்கு விரோதமாய் அக்கினி பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கோபம் மூண்டது. | சங் 106:24 ஏசா 7:9 எபிரெ 3:12 எபிரெ 3:18 எபிரெ 3:19 எபிரெ 11:6 1யோவா 5:10 யூதா 1:5 |
| 23 | அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து, | சங் 33:9 ஏசா 5:6 |
| 24 | மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். | சங் 68:9 சங் 105:40 யாத் 16:4 யாத் 16:14 உபா 8:3 நெகே 9:15 நெகே 9:20 யோவா 6:31-71 1கொரி 10:3 |
| 25 | தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார். | சங் 103:20 |
| 26 | ஆகாசத்திலே கீழ்காற்றை வரப்பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து, | சங் 135:7 எண் 11:31 |
| 27 | மாம்சத்தைத் தூளத்தனையாயும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலத்தனையாயும் வருஷிக்கப்பண்ணி, | யாத் 16:12 யாத் 16:13 எண் 11:18 எண் 11:19 எண் 11:32 |
| 28 | அவைகளை அவர்கள் பாளயத்தின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கப்பண்ணினார். |
| 29 | அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார். | சங் 106:15 எண் 11:20 |
| 30 | அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே. | எண் 11:33 எண் 11:34 எண் 22:20-22 நீதி 1:32 லூக் 16:19-23 |
| 31 | தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று. |
| 32 | இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள். | எண் 14:1-45 எண் 16:1-17 எண் 21:1-6 எண் 25:1-18 எசே 20:13 |
| 33 | ஆதலால் அவர்கள் நாட்களை விருதாவிலும், அவர்கள் வருஷங்களைப் பயங்கரத்திலும் கழியப்பண்ணினார். | சங் 90:7-9 எண் 14:29 எண் 14:35 எண் 26:64 எண் 26:65 உபா 2:14-16 |
| 34 | அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி; | எண் 21:7 நியா 3:8 நியா 3:9 நியா 3:12-15 நியா 4:3 நியா 10:7-10 ஏசா 26:6 எரே 22:23 ஓசி 5:15 ஓசி 7:14 |
| 35 | தேவன் தங்கள் கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்கள் மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள். | சங் 78:7 சங் 78:11 சங் 78:42 சங் 106:13 சங் 106:21 |
| 36 | ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவருக்கு இச்சகம்பேசி, தங்கள் நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள். | சங் 106:12 சங் 106:13 உபா 5:28 உபா 5:29 ஏசா 29:13 எசே 33:31 ஓசி 11:12 |
| 37 | அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை. | சங் 119:80 ஓசி 7:14 ஓசி 7:16 ஓசி 10:2 அப் 8:21 |
| 38 | அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார். | சங் 106:43-45 யாத் 34:6-9 எண் 14:18-20 எண் 16:44-48 ஏசா 44:21 ஏசா 44:22 |
| 39 | அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார். | சங் 103:14-16 ஆதி 6:3 யோவா 3:6 |
| 40 | எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தர வெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள். | சங் 78:17 சங் 95:8-10 சங் 106:14-33 எண் 14:11 உபா 9:21 உபா 9:22 |
| 41 | அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள். | எண் 14:4 எண் 14:22 உபா 6:16 அப் 7:39 எபிரெ 3:8-11 2பேது 2:21 2பேது 2:22 |
| 42 | அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற் போனார்கள். | சங் 78:11 சங் 78:21 சங் 78:22 சங் 136:10-15 யாத் 13:9 ஏசா 11:11 எரே 32:21 |
| 43 | அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார். | சங் 105:27-38 சங் 135:9 யாத் 3:19 யாத் 3:20 உபா 4:34 உபா 6:22 நெகே 9:10 |
| 44 | அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள ஜலத்தைக் குடிக்கக்கூடாதபடி செய்தார். | சங் 105:29 யாத் 7:17-21 வெளிப் 16:3-6 |
| 45 | அவர்களை அழிக்கும்படி வண்டு ஜாதிகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். | சங் 105:31 யாத் 8:21-24 |
| 46 | அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார். | சங் 105:34 சங் 105:35 யாத் 10:12-15 யோவே 1:4-7 யோவே 2:25 ஆமோ 7:1 ஆமோ 7:2 வெளிப் 9:2-11 |
| 47 | கல்மழையினால் அவர்களுடைய திராட்சச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து, | சங் 105:32 சங் 105:33 யாத் 9:18-34 |
| 48 | அவர்களுடைய மிருகஜீவன்களைக் கல்மழைக்கும், அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார். | யாத் 9:28 |
| 49 | தமது உக்கிரமான கோபத்தையும், மூர்க்கத்தையும், சினத்தையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். | சங் 11:6 யோபு 20:23 ஏசா 42:25 புலம் 4:11 செப் 3:8 ரோம 2:8 ரோம 2:9 |
| 50 | அவர் தம்முடைய கோபத்துக்கு வழிதிறந்து, அவர்கள் ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக் காவாமல், அவர்கள் ஜீவனைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார். | யோபு 27:22 எசே 5:11 எசே 7:4 எசே 7:9 எசே 8:18 எசே 9:10 ரோம 8:32 2பேது 2:4 2பேது 2:5 |
| 51 | எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவரையும் அழித்து; | சங் 105:36 சங் 135:8 சங் 136:10 யாத் 12:12 யாத் 12:29 யாத் 12:30 யாத் 13:15 எபிரெ 11:28 |
| 52 | தம்முடைய ஜனங்களை ஆடுகளைப்போல் புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்; | சங் 77:20 சங் 105:37 நெகே 9:12 ஏசா 63:11-14 |
| 53 | அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினார்; அவர்கள் சத்துருக்களைக் கடல் மூடிப்போட்டது. | யாத் 14:15 யாத் 14:19 யாத் 14:20 எபிரெ 11:29 |
| 54 | அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்தப் பர்வதமட்டுக்கும் அழைத்துக்கொண்டுவந்து, | யாத் 15:13 யாத் 15:17 தானி 9:16-20 தானி 11:45 |
| 55 | அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார். | சங் 44:2 சங் 105:44 சங் 105:45 சங் 135:10-12 சங் 136:18-22 யோசு 6:1-21 நெகே 9:22-25 |
| 56 | ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய், | சங் 78:40 சங் 78:41 உபா 31:16-20 உபா 32:15-21 நியா 2:11 நியா 2:12 2இரா 17:7-23 நெகே 9:25 நெகே 9:26 எசே 16:15-26 |
| 57 | தங்கள் பிதாக்களைப்போல வழிவிலகி, துரோகம்பண்ணி, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு, | சங் 78:41 நியா 3:5-7 நியா 3:12-7 எசே 20:27 எசே 20:28 |
| 58 | தங்கள் மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்கள் விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள். | லேவி 26:30 எண் 33:52 உபா 12:2 உபா 12:4 எசே 20:28 எசே 20:29 |
| 59 | தேவன் அதைக் கேட்டு உக்கிரமாகி, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து, | சங் 11:4 சங் 14:2-5 ஆதி 18:20 ஆதி 18:21 |
| 60 | தாம் மனுஷருக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி, | யோசு 18:1 1சாமு 1:3 1சாமு 4:4-11 எரே 7:12-14 எரே 26:6-9 |
| 61 | தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து, | சங் 132:8 நியா 18:30 1சாமு 5:1 1சாமு 5:2 2நாளா 6:41 |
| 62 | தமது ஜனத்தைப் பட்டயத்துக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார். | 1சாமு 4:2 1சாமு 4:10 1சாமு 4:11 |
| 63 | அவர்கள் வாலிபரை அக்கினி பட்சித்தது, அவர்கள் கன்னியாஸ்திரீகள் வாழ்க்கைப்படாதிருந்தார்கள். | சங் 78:21 உபா 29:20 உபா 32:22 |
| 64 | அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை. | 1சாமு 2:33 1சாமு 2:34 1சாமு 4:11 1சாமு 4:17 1சாமு 22:18 1சாமு 22:19 |
| 65 | அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவனைப்போலவும், திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப்போலவும் விழித்து, | சங் 7:6 சங் 44:23 ஏசா 51:9 |
| 66 | தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரப்பண்ணினார். | 1சாமு 5:6 1சாமு 6:4 யோபு 40:12 |
| 67 | அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல், | 1சாமு 6:21 1சாமு 7:1 2சாமு 6:2 2சாமு 6:17 |
| 68 | யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார். | ஆதி 49:8-10 ரூத் 4:17-22 1சாமு 16:1 2நாளா 6:6 |
| 69 | தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார். | 1இரா 6:2 1இரா 9:8 2நாளா 3:4 |
| 70 | தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார். | சங் 89:19 சங் 89:20 1சாமு 16:11 1சாமு 16:12 2சாமு 3:18 2சாமு 6:21 அப் 13:22 |
| 71 | கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார். | ஆதி 33:13 ஏசா 40:11 |
| 72 | இவன் அவர்களைத் தன் இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன் கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான். | சங் 75:2 சங் 101:1-8 2சாமு 8:15 1இரா 9:4 1இரா 15:5 ஏசா 11:2-4 அப் 13:22 அப் 13:36 |