| 1 | நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார். | சங் 39:1 சங் 62:1 1நாளா 16:41 1நாளா 16:42 1நாளா 25:3 1நாளா 25:6 |
| 2 | என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று. | சங் 18:6 சங் 50:15 சங் 88:1-3 சங் 102:1 சங் 102:2 சங் 130:1 சங் 130:2 ஆதி 32:7-12 ஆதி 32:28-12 2இரா 19:3 2இரா 19:4 2இரா 19:15-20 ஏசா 26:9 ஏசா 26:16 யோனா 2:1 யோனா 2:2 2கொரி 12:7 2கொரி 12:8 எபிரெ 5:7 |
| 3 | நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என் ஆவி தொய்ந்து போயிற்று. (சேலா) | யோபு 6:4 யோபு 23:15 யோபு 23:16 யோபு 31:23 எரே 17:17 |
| 4 | நான் தூங்காதபடி என் கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறேன். | சங் 6:6 எஸ்தர் 6:1 யோபு 7:13-15 |
| 5 | பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன். | சங் 74:12-18 சங் 143:5 உபா 32:7 ஏசா 51:9 ஏசா 63:9-15 மீகா 7:14 மீகா 7:15 |
| 6 | இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது. | சங் 42:8 யோபு 35:10 ஆபகூ 3:17 ஆபகூ 3:18 யோனா 1:2 அப் 16:25 |
| 7 | ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயை செய்யாதிருப்பாரோ? | சங் 13:1 சங் 13:2 சங் 37:24 சங் 74:1 சங் 89:38 சங் 89:46 எரே 23:24-26 புலம் 3:31 புலம் 3:32 ரோம 11:1 ரோம 11:2 |
| 8 | அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ? | ஏசா 27:11 லூக் 16:25 லூக் 16:26 |
| 9 | தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா) | ஏசா 40:27 ஏசா 49:14 ஏசா 49:15 ஏசா 63:15 |
| 10 | அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன். | சங் 31:22 சங் 73:22 சங் 116:11 யோபு 42:3 புலம் 3:18-23 மாற் 9:24 |
| 11 | கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; | சங் 77:10 சங் 28:5 சங் 78:11 சங் 111:4 1நாளா 16:12 ஏசா 5:12 |
| 12 | உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன். | சங் 104:34 சங் 143:5 |
| 13 | தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்? | சங் 27:4 சங் 63:2 சங் 68:25 சங் 73:17 |
| 14 | அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர். | சங் 72:18 சங் 86:10 சங் 105:5 சங் 136:4 யாத் 15:11 வெளிப் 15:3 |
| 15 | யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் புத்திரராகிய உம்முடைய ஜனங்களை, உமது புயத்தினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா) | சங் 136:11 சங் 136:12 யாத் 6:6 உபா 9:26 உபா 9:29 ஏசா 63:9 |
| 16 | ஜலங்கள் உம்மைக் கண்டது; தேவனே, ஜலங்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; ஆழங்களும் கலங்கினது. | சங் 114:3-6 யாத் 14:21 யோசு 3:15 யோசு 3:16 ஆபகூ 3:8-10 ஆபகூ 3:15-10 |
| 17 | மேகங்கள் ஜலங்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது. | சங் 68:8 சங் 68:9 |
| 18 | உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது. | சங் 29:3-9 யாத் 19:16 யோபு 37:1-5 வெளிப் 11:19 |
| 19 | உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமற்போயிற்று. | சங் 29:10 சங் 97:2 நெகே 9:11 நாகூ 1:3 நாகூ 1:4 ஆபகூ 3:15 |
| 20 | மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர். | சங் 78:52 சங் 80:1 யாத் 13:21 யாத் 14:19 ஏசா 63:11 ஏசா 63:12 ஓசி 12:13 அப் 7:35 அப் 7:36 |