இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 80

                   
புத்தகங்களைக் காட்டு
1இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.சங் 45:1 சங் 60:1 சங் 69:1
2எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களை இரட்சிக்க வந்தருளும்.எண் 2:18-24 எண் 10:22-24
3தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.சங் 80:7 சங் 80:19 சங் 85:4 1இரா 18:37 எரே 31:18 எரே 31:19 புலம் 5:21
4சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.சங் 85:5 ஏசா 58:2 ஏசா 58:3 ஏசா 58:6-9 புலம் 3:44 மத் 15:22-28 லூக் 18:1-8
5கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்குப் போஜனமாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.சங் 42:3 சங் 102:9 யோபு 6:7 ஏசா 30:20 எசே 4:16 எசே 4:17
6எங்கள் அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; எங்கள் சத்துருக்கள் எங்களைப் பரியாசம் பண்ணுகிறார்கள்.எரே 15:10
7சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.சங் 80:3 சங் 80:19 சங் 51:10 லூக் 1:16
8நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர்.ஏசா 5:1-7 ஏசா 27:2 ஏசா 27:3 எரே 2:21 எசே 15:6 எசே 17:6 எசே 19:10 மத் 21:33-41 யோவா 15:1-8
9அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.சங் 105:44 யாத் 23:28-30 யோசு 23:13-15 யோசு 24:12 நெகே 9:22-25
10அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது.சங் 104:16
11அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது.சங் 72:8 ஆதி 15:18 யாத் 23:31 1இரா 4:21 1இரா 4:24 1நாளா 18:3
12இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?சங் 89:40 சங் 89:41 ஏசா 5:5 ஏசா 18:5 ஏசா 18:6 நாகூ 2:2 லூக் 20:16
13காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.2இரா 18:1-19 2இரா 24:1-25 2நாளா 32:1-33 2நாளா 36:1-23 எரே 4:7 எரே 39:1-3 எரே 51:34 எரே 52:7 எரே 52:12-14
14சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்;சங் 7:7 சங் 90:13 ஏசா 63:15 ஏசா 63:17 யோவே 2:14 மல்கி 3:7 அப் 15:16
15உம்முடைய வலதுகரம் நாட்டின கொடியையும், உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் கடாட்சித்தருளும்.சங் 80:8 ஏசா 5:1 ஏசா 5:2 எரே 2:21 மாற் 12:1 யோவா 15:1
16அது அக்கினியால் சுடப்பட்டும் வெட்டுண்டும் போயிற்று; உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள்.சங் 79:5 ஏசா 27:11 எசே 20:47 எசே 20:48 யோவா 15:6
17உமது கரம் உமது வலதுபாரிசத்துப் புருஷன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனுஷகுமாரன்மீதிலும் இருப்பதாக.சங் 80:15 சங் 89:21 சங் 110:1 ஏசா 53:5 தானி 7:13 தானி 7:14 யோவா 5:21-29
18அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம்.சங் 79:13 யோவா 6:66-69 எபிரெ 10:38 எபிரெ 10:39
19சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.சங் 80:3 சங் 80:7 எரே 3:22 எரே 3:23
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.