1உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது.சங் 57:1 சங் 58:1 2நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாய் நியாயந்தீர்ப்பேன்.சங் 78:70-72 சங் 101:2 2சாமு 2:4 2சாமு 5:3 2சாமு 8:15 2சாமு 23:3 2சாமு 23:4 3பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா)சங் 60:1-3 சங் 78:60-72 1சாமு 31:1-7 ஏசா 24:1-12 4வீம்புக்காரரை நோக்கி, வீம்பு பேசாதேயுங்கள் என்றும்; துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன்.சங் 82:2-8 சங் 94:8 நீதி 1:22 நீதி 8:5 நீதி 9:6 5உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள்; இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள்.யாத் 32:9 உபா 31:27 2நாளா 30:8 ஏசா 48:4 எசே 2:4 அப் 7:51 6கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தரதிசையிலுமிருந்து ஜெயம் வராது.7தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.சங் 50:6 சங் 58:11 8கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.சங் 11:6 சங் 60:3 யோபு 21:20 ஏசா 51:17 ஏசா 51:22 எரே 25:15 எரே 25:17 எரே 25:27 எரே 25:28 வெளிப் 14:9 வெளிப் 14:10 வெளிப் 16:19 9நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.சங் 9:14 சங் 104:33 சங் 145:1 சங் 145:2 10துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.சங் 101:8 எரே 48:25 சகரி 1:20 சகரி 1:21