| 1 | தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது? | சங் 78:1 |
| 2 | நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் வாசமாயிருந்த சீயோன் பர்வதத்தையும் நினைத்தருளும். | யாத் 15:16 உபா 9:29 அப் 20:28 |
| 3 | நெடுங்காலமாகப் பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளப்பண்ணும்; பரிசுத்தஸ்தலத்திலே சத்துரு அனைத்தையும் கெடுத்துப்போட்டான். | சங் 44:23 சங் 44:26 யோசு 10:24 2சாமு 22:39-43 ஏசா 10:6 ஏசா 25:10 ஏசா 63:3-6 மீகா 1:3 |
| 4 | உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள். | 2நாளா 36:17 புலம் 2:7 லூக் 13:1 வெளிப் 13:6 |
| 5 | கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பேர்பெற்றவனானான். | 1இரா 5:6 2நாளா 2:14 எரே 46:22 எரே 46:23 |
| 6 | இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் வாச்சிகளாலும் சம்மட்டிகளாலும் தகர்த்துப்போடுகிறார்கள். | 1இரா 6:18 1இரா 6:29 1இரா 6:32 1இரா 6:35 |
| 7 | உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, உமது நாமத்தின் வாசஸ்தலத்தைத் தரைமட்டும் இடித்து, அசுத்தப்படுத்தினார்கள். | 2இரா 25:9 ஏசா 64:11 மத் 22:7 |
| 8 | அவர்களை ஏகமாய் நிர்த்தூளியாக்குவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி, தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள். | சங் 83:4 சங் 137:7 எஸ்தர் 3:8 எஸ்தர் 3:9 |
| 9 | எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை; இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை. | யாத் 12:13 யாத் 13:9 யாத் 13:10 நியா 6:17 எசே 20:12 எபிரெ 2:4 |
| 10 | தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ? | சங் 13:1 சங் 13:2 சங் 79:4 சங் 79:5 சங் 89:46 சங் 89:50 சங் 89:51 தானி 12:6 வெளிப் 6:10 |
| 11 | உமது வலதுகரத்தை என் முடக்கிக்கொள்ளுகிறீர்; அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும். | ஏசா 64:12 புலம் 2:3 |
| 12 | பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா. | சங் 44:4 யாத் 19:5 யாத் 19:6 எண் 23:21 எண் 23:22 ஏசா 33:22 |
| 13 | தேவரீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர். | சங் 66:6 சங் 78:13 சங் 106:8 சங் 106:9 சங் 136:13-18 யாத் 14:21 நெகே 9:11 ஏசா 11:15 ஏசா 11:16 |
| 14 | தேவரீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, அதை வனாந்தரத்து ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர். | சங் 104:25 சங் 104:26 யோபு 3:8 யோபு 41:1-34 ஏசா 27:1 வெளிப் 20:2 |
| 15 | ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; மகா நதிகளையும் வற்றிப்போகப்பண்ணினீர். | சங் 105:41 யாத் 17:5 யாத் 17:6 எண் 20:11 ஏசா 48:21 |
| 16 | பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர். | சங் 136:7-9 ஆதி 1:3-5 |
| 17 | பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டம்பண்ணினீர்; கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினீர். | சங் 24:1 சங் 24:2 உபா 32:8 அப் 17:26 |
| 18 | கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும். | சங் 74:22 சங் 89:50 சங் 89:51 சங் 137:7 ஏசா 62:6 ஏசா 62:7 வெளிப் 16:19 |
| 19 | உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவைத் துஷ்டருடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடாதேயும்; உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறவாதேயும். | சங் 68:13 உன்ன 2:14 உன்ன 4:1 உன்ன 6:9 ஏசா 60:8 மத் 10:16 |
| 20 | உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்; பூமியின் இருளான இடங்கள் கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே. | சங் 89:28 சங் 89:34-36 சங் 89:39-36 சங் 105:8 சங் 106:45 ஆதி 17:7 ஆதி 17:8 யாத் 24:6-8 லேவி 26:40-45 உபா 9:27 2சாமு 23:5 எரே 33:20-26 லூக் 1:72-75 எபிரெ 8:10 |
| 21 | துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்பவிடாதிரும்; சிறுமையும் எளிமையுமானவன் உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும். | சங் 9:18 சங் 12:5 சங் 102:19-21 சங் 109:22 ஏசா 45:17 |
| 22 | தேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; மதியீனனாலே நாடோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும். | சங் 9:19 சங் 9:20 சங் 79:9 சங் 79:10 |
| 23 | உம்முடைய சத்துருக்களின் ஆரவாரத்தை மறவாதேயும்; உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் அமளி எப்பொழுதும் அதிகரிக்கிறது. | சங் 10:11 சங் 10:12 சங் 13:1 |