இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 72

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.சங் 127:1
2அவர் உம்முடைய ஜனங்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.சங் 72:12-14 சங் 45:6 சங் 45:7 1இரா 3:5-10 ஏசா 11:3-5 ஏசா 32:1 ஏசா 32:17 எரே 33:15 வெளிப் 19:11
3பர்வதங்கள் ஜனத்திற்குச் சமாதானத்தைத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடிருக்கும்.சங் 72:16 ஏசா 32:16 ஏசா 32:17 ஏசா 52:7 எசே 34:13 எசே 34:14 யோவே 3:18
4ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.சங் 72:12-14 சங் 109:31 ஏசா 11:4 எசே 34:15 எசே 34:16 சகரி 11:7 சகரி 11:11 மத் 11:5
5சூரியனும் சந்திரனுமுள்ளமட்டும், அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள்.1சாமு 12:18 1இரா 3:28
6புல்லறுப்புண்ட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.உபா 32:2 2சாமு 23:4 நீதி 16:15 நீதி 19:12 ஏசா 5:6 ஏசா 14:3-5 எசே 34:23-26 ஓசி 6:3 ஓசி 14:5-7
7அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.சங் 132:15-18 ஏசா 11:6-9 ஏசா 32:3-8 ஏசா 32:15-20 ஏசா 35:1-10 ஏசா 54:11-17 ஏசா 55:10-13 ஏசா 60:1 ஏசா 60:22 ஏசா 61:3-6 ஏசா 61:10-6 ஏசா 61:11-6 மல்கி 4:2 அப் 4:32
8ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.சங் 2:8 சங் 80:11 சங் 89:25 சங் 89:36 யாத் 23:31 1இரா 4:21-24 சகரி 9:10 வெளிப் 11:15
9வனாந்தரத்தார் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய சத்துருக்கள் மண்ணை நக்குவார்கள்.1இரா 9:18 1இரா 9:20 1இரா 9:21 ஏசா 35:1 ஏசா 35:2
10தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.சங் 45:12 சங் 68:29 1இரா 10:1 1இரா 10:10 1இரா 10:25 2நாளா 9:21 ஏசா 43:6 ஏசா 49:7 ஏசா 60:3 ஏசா 60:6 ஏசா 60:9 மத் 2:11
11சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.சங் 2:10-12 சங் 138:4 சங் 138:5 ஏசா 49:22 ஏசா 49:23 வெளிப் 11:15 வெளிப் 17:14 வெளிப் 21:24 வெளிப் 21:26
12கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.சங் 72:4 சங் 10:17 சங் 82:3 சங் 82:4 சங் 102:17 சங் 102:20 யோபு 29:12 ஏசா 41:17 லூக் 4:18 லூக் 7:22 2கொரி 8:9 எபிரெ 7:25 வெளிப் 3:17 வெளிப் 3:18
13பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.சங் 109:31 யோபு 5:15 யோபு 5:16 எசே 34:16 மத் 5:3 மத் 18:11 யாக் 2:5 யாக் 2:6
14அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.சங் 25:22 சங் 130:8 ஆதி 48:16 2சாமு 4:9 லூக் 1:68-75 தீத் 2:14
15அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்பண்ணப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.சங் 21:4 யோவா 11:25 யோவா 14:19 1யோவா 1:2 வெளிப் 1:18
16பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார் செழித்தோங்குவார்கள்.யோபு 8:7 ஏசா 30:23 ஏசா 32:15 ஏசா 32:20 மத் 13:31-33 மாற் 16:15 மாற் 16:16 அப் 1:15 அப் 2:41 அப் 4:4 1கொரி 3:6-9 வெளிப் 7:9
17அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும்; மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா ஜாதிகளும் அவரைப் பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள்.சங் 45:17 சங் 89:36 ஏசா 7:14 மத் 1:21 மத் 1:23 லூக் 1:31-33 பிலிப் 2:10
18இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.சங் 41:13 சங் 68:35 சங் 106:48 1நாளா 29:10 1நாளா 29:20
19அவருடைய மகிமைபொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.நெகே 9:5 வெளிப் 5:13
20ஈசாயின் புத்திரனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.2சாமு 23:1 யோபு 31:40 எரே 51:64 லூக் 24:51
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.