இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 67

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய்,சங் 4:1 சங் 6:1 சங் 76:1
2தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். (சேலா)சங் 98:2 சங் 98:3 எஸ்தர் 8:15-17 சகரி 8:20-23 அப் 9:31
3தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.சங் 67:5 சங் 45:17 சங் 74:21 சங் 119:175 சங் 142:7 ஏசா 38:18 ஏசா 38:19
4தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள். (சேலா)சங் 97:1 சங் 138:4 சங் 138:5 உபா 32:43 ஏசா 24:14-16 ஏசா 42:10-12 ஏசா 54:1 ரோம 15:10 ரோம 15:11 கலா 4:27
5தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.சங் 67:3 மத் 6:9 மத் 6:10
6பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.சங் 85:9-12 லேவி 26:4 ஏசா 1:19 ஏசா 30:23 ஏசா 30:24 எசே 34:26 எசே 34:27 ஓசி 2:21 ஓசி 2:22 1கொரி 3:6-9
7தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.சங் 29:11 சங் 72:17 ஆதி 12:2 ஆதி 12:3 அப் 2:28 கலா 3:9 கலா 3:14
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.