இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 65

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது; பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும்.சங் 21:13 சங் 115:1 சங் 115:2
2ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.சங் 66:19 சங் 102:17 சங் 145:18 சங் 145:19 1இரா 18:29 1இரா 18:37 2நாளா 33:13 ஏசா 65:24 எரே 29:12 எரே 29:13 தானி 9:17-19 லூக் 11:9 லூக் 11:10 அப் 10:31 1யோவா 5:14 1யோவா 5:15
3அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது; தேவரீரோ எங்கள் மீறுதல்களை நிவிர்த்தியாக்குகிறீர்.சங் 38:4 சங் 40:12 2சாமு 12:7-13 மீகா 7:8 மீகா 7:9 ரோம 7:23-25 கலா 5:17
4உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.சங் 33:12 சங் 84:4
5பூமியின் கடையாந்தரங்களிலும் தூரமான சமுத்திரங்களிலுமுள்ளவர்கள் எல்லாரும் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்தரவு அருளுகிறீர்.சங் 45:4 சங் 47:2 சங் 47:3 சங் 66:3 சங் 76:3-9 உபா 4:34 உபா 10:21 ஏசா 37:36
6வல்லமையை இடைகட்டிக்கொண்டு, உம்முடைய பலத்தினால் பர்வதங்களை உறுதிப்படுத்தி,சங் 24:2 சங் 119:90 மீகா 6:2 ஆபகூ 3:6
7சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறீர்.சங் 89:9 சங் 107:29 யோனா 1:4 யோனா 1:15 மத் 8:26 மத் 8:27
8கடையாந்தர இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களினிமித்தம் பயப்படுகிறார்கள்; காலையையும் மாலையையும் களிகூரப்பண்ணுகிறீர்.சங் 2:8
9தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர்.சங் 104:13 சங் 104:14 உபா 11:11 உபா 11:12 ரூத் 1:6 யோபு 37:6-13 எரே 14:22 அப் 14:17
10அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்.சங் 147:8 1கொரி 3:6 1கொரி 3:7
11வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.சங் 5:12 சங் 103:4 நீதி 14:18 எபிரெ 2:7-9
12வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது.சங் 104:10-13 யோபு 38:26 யோபு 38:27
13மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.சங் 104:24-28 சகரி 9:17 அப் 14:17
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.