இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 64

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும்.சங் 27:7 சங் 55:1 சங் 55:2 சங் 130:1 சங் 130:2 சங் 141:1 சங் 143:1-3 புலம் 3:55 புலம் 3:56
2துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், அக்கிரமக்காரருடைய கலகத்துக்கும் என்னை விலக்கி மறைத்தருளும்.சங் 27:5 சங் 31:20 சங் 143:9 ஏசா 32:2
3அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி,சங் 57:4 நீதி 12:18 நீதி 30:14 ஏசா 54:17 எரே 9:3 யாக் 3:6-8
4மறைவுகளில் உத்தமன்மேல் எய்யும் பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றிச் சடிதியில் அவன்மேல் எய்கிறார்கள்.சங் 10:8 சங் 10:9 நெகே 4:11 ஆபகூ 3:14
5அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைபண்ணி, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.யாத் 15:9 எண் 22:6 நீதி 1:11-14 ஏசா 41:6 வெளிப் 11:10
6அவர்கள் நியாயக்கேடுகளை ஆய்ந்துதேடி, தந்திரமான யோசனை நிறைவேறும்படி பிரயத்தனம்பண்ணுகிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாயிருக்கிறது.சங் 35:11 1சாமு 22:9 1சாமு 24:9 1சாமு 25:10 தானி 6:4 தானி 6:5 மத் 26:59 யோவா 18:29 யோவா 18:30 யோவா 19:7
7ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள்.சங் 7:12 சங் 7:13 சங் 18:14 உபா 32:23 உபா 32:42 யோபு 6:4 புலம் 3:12 புலம் 3:13
8அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற யாவரும் ஓடிப்போவார்கள்.சங் 59:12 சங் 140:9 யோபு 15:6 நீதி 12:13 நீதி 18:7 மத் 21:41 லூக் 19:22
9எல்லா மனுஷரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, அவர் கிரியையை உணர்ந்து கொள்வார்கள்.சங் 40:3 சங் 53:5 சங் 119:20 எரே 50:28 எரே 51:10 வெளிப் 11:13
10நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்.சங் 32:11 சங் 33:1 சங் 40:3 சங் 58:10 சங் 68:2 சங் 68:3 பிலிப் 4:4
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.