1தேவனே, என் கூப்பிடுதலைக் கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும்.சங் 5:1-3 சங் 17:1 சங் 28:2 சங் 55:1 சங் 55:2 சங் 130:2 பிலிப் 4:6 2என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.சங் 42:6 சங் 139:9 சங் 139:10 உபா 4:29 யோனா 2:2-4 3நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர்.சங் 4:6 சங் 4:7 சங் 116:2 சங் 140:7 ஏசா 46:3 ஏசா 46:4 2கொரி 1:10 4நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா)சங் 61:7 சங் 15:1 சங் 23:6 சங் 27:4 சங் 90:1 சங் 91:1 சங் 92:13 வெளிப் 3:12 5தேவனே, நீர் என் பொருத்தனைகளைக் கேட்டீர்; உமது நாமத்திற்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர்.சங் 56:12 சங் 65:1 சங் 66:19 6ராஜாவின் நாட்களோடே நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.சங் 21:4 சங் 21:6 சங் 72:15-17 ஏசா 53:10 7அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.சங் 41:12 ஏசா 9:6 ஏசா 9:7 லூக் 1:33 எபிரெ 7:21-25 எபிரெ 9:24 8இப்படியே தினமும் என் பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்.சங் 30:12 சங் 79:13 சங் 145:1 சங் 145:2 சங் 146:2