| 1 | தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும். | சங் 59:1 |
| 2 | பூமியை அதிரப்பண்ணி, அதை வெடிப்பாக்கினீர்; அதின் வெடிப்புகளைப் பொருந்தப்பண்ணும்; அது அசைகின்றது. | சங் 104:32 சங் 114:7 2சாமு 22:8 யோபு 9:6 ஏசா 5:25 எரே 4:24 எரே 10:10 ஆமோ 8:8 ஆபகூ 3:10 மத் 27:51 |
| 3 | உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர். | சங் 71:20 நெகே 9:32 தானி 9:12 |
| 4 | சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா) | சங் 20:5 யாத் 17:15 உன்ன 2:4 ஏசா 11:12 ஏசா 49:22 ஏசா 59:19 |
| 5 | உமது பிரியர் விடுவிக்கப்படும்படி, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எனக்குச் செவிகொடுத்தருளும். | சங் 60:12 சங் 22:8 சங் 108:6-13 உபா 7:7 உபா 7:8 உபா 33:3 மத் 3:17 மத் 17:5 |
| 6 | தேவன் தமது பரிசுத்தத்தைக் கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன். | சங் 89:19 சங் 89:35 சங் 108:7-13 சங் 132:11 2சாமு 3:18 2சாமு 5:2 எரே 23:9 ஆமோ 4:2 |
| 7 | கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன். | யோசு 17:1 யோசு 17:5 யோசு 17:6 1நாளா 12:19 1நாளா 12:37 |
| 8 | மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள். | 2சாமு 8:2 1நாளா 18:1 1நாளா 18:2 |
| 9 | அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழி காட்டுகிறவர் யார்? | நியா 1:12 நியா 1:24 நியா 1:25 1நாளா 11:6 1நாளா 11:17-19 |
| 10 | எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீர் அல்லவோ? | சங் 20:7 சங் 44:5-9 சங் 118:9 சங் 118:10 ஏசா 8:17 ஏசா 12:1 ஏசா 12:2 |
| 11 | இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா. | சங் 25:22 சங் 130:8 |
| 12 | தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார். | சங் 18:32-42 சங் 144:1 எண் 24:18 எண் 24:19 யோசு 1:9 யோசு 14:12 2சாமு 10:12 1நாளா 19:13 |