1மவுனமாயிருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ? மனுபுத்திரரே, நியாயமாய்த் தீர்ப்புசெய்வீர்களோ?சங் 57:1 சங் 59:1 2மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்; பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள்.சங் 21:11 பிரச 3:16 ஏசா 59:4-6 எரே 22:16 எரே 22:17 எசே 22:12 எசே 22:27 மீகா 3:1-3 மீகா 3:9-12 யோவா 11:47-53 3துன்மார்க்கர் கர்ப்பத்திலே உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பிப்போகிறார்கள்.சங் 51:5 யோபு 15:14 நீதி 22:15 ஏசா 48:8 எபே 2:3 4சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.சங் 140:3 பிரச 10:11 ரோம 3:13 யாக் 3:8 5பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டுவிரியனைப்போல் இருக்கிறார்கள்.உபா 18:11 ஏசா 19:3 6தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; கர்த்தாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.சங் 3:7 சங் 10:15 யோபு 4:10 யோபு 4:11 யோபு 29:17 எசே 30:21-26 7கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன் அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாய்ப் போகக்கடவது.சங் 22:14 சங் 64:7 சங் 64:8 சங் 112:10 யாத் 15:15 யோசு 2:9-11 யோசு 7:5 2சாமு 17:10 ஏசா 13:7 8கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; ஸ்திரீயின் முதிராப் பிண்டத்தைப்போல் சூரியனைக் காணாதிருப்பார்களாக.சங் 37:35 சங் 37:36 மத் 24:35 யாக் 1:10 9முள் நெருப்பினால் உங்கள் பானைகளில் சூடேறுமுன்னே பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல் காற்றினால் அடித்துக்கொண்டுபோவார்.சங் 118:12 பிரச 7:6 10பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.சங் 52:6 சங் 64:10 சங் 68:1-3 சங் 107:42 நியா 5:31 நீதி 11:10 வெளிப் 11:17 வெளிப் 11:18 வெளிப் 18:20 வெளிப் 19:1-6 11அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான்.சங் 73:13-15 சங் 92:15 மல்கி 3:14 ரோம 2:5