| 1 | எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன். | சங் 58:1 சங் 59:1 |
| 2 | எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். | சங் 56:2 சங் 136:2 சங் 136:3 ஏசா 57:15 |
| 3 | என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார்: (சேலா). தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார். | சங் 18:6-50 சங் 144:5-7 மத் 28:2-6 அப் 12:11 |
| 4 | என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது. | சங் 10:9 சங் 17:12 சங் 17:13 சங் 22:13-16 சங் 35:17 சங் 58:6 நீதி 28:15 தானி 6:22-24 |
| 5 | தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. | சங் 57:11 சங் 21:13 சங் 108:4 சங் 108:5 1நாளா 29:1 ஏசா 2:11 ஏசா 2:17 ஏசா 12:4 ஏசா 37:20 மத் 6:9 மத் 6:10 |
| 6 | என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என் ஆத்துமா தொய்ந்துபோயிற்று; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா) | சங் 7:15 சங் 7:16 சங் 9:15 சங் 9:16 சங் 35:7 சங் 35:8 சங் 140:5 1சாமு 23:22-26 நீதி 29:5 மீகா 7:2 |
| 7 | என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன். | சங் 108:1 சங் 108:2 சங் 112:7 |
| 8 | என் மகிமையே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன். | நியா 5:12 ஏசா 52:1 ஏசா 52:9 |
| 9 | ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன். | சங் 2:1 சங் 18:49 சங் 22:22 சங் 22:23 சங் 96:3 சங் 138:1 சங் 138:4 சங் 138:5 சங் 145:10-12 ரோம 15:9 |
| 10 | உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்பரியந்தமும் எட்டுகிறது. | சங் 36:5 சங் 71:19 சங் 85:10 சங் 85:11 சங் 89:1 சங் 89:2 சங் 103:11 சங் 108:4 |
| 11 | தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. | சங் 57:5 சங் 8:1 சங் 8:9 வெளிப் 15:3 வெளிப் 15:4 |