இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 149

                   
புத்தகங்களைக் காட்டு
1அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக.சங் 148:1
2இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள்.சங் 100:1-3 சங் 135:3 சங் 135:4 உபா 7:6 உபா 7:7 உபா 12:7 1சாமு 12:22 யோபு 35:10 ஏசா 54:5
3அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணக்கடவர்கள்.சங் 150:4 யாத் 15:20 நியா 11:34 2சாமு 6:16 எரே 31:13
4கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.சங் 22:8 சங் 35:27 சங் 117:2 சங் 147:11 நீதி 11:20 ஏசா 62:4 ஏசா 62:5 எரே 32:41 செப் 3:17
5பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.சங் 23:1 சங் 118:15 சங் 145:10 ரோம 5:2 1பேது 1:8
6ஜாதிகளிடத்தில் பழிவாங்கவும், ஜனங்களை தண்டிக்கவும்,சங் 96:4 நெகே 9:5 தானி 4:37 லூக் 2:14 வெளிப் 19:6
7அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இருப்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்பேரில் செலுத்தவும்,சங் 137:8 சங் 137:9 எண் 31:2 எண் 31:3 நியா 5:23 1சாமு 15:2 1சாமு 15:3 1சாமு 15:18-23 சகரி 9:13-16 சகரி 14:17-19 வெளிப் 19:11-21
8அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்.யோசு 10:23 யோசு 10:24 யோசு 12:7 நியா 1:6 நியா 1:7
9இந்தக் கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டாகும். அல்லேலூயா.சங் 137:8 உபா 7:1 உபா 7:2 உபா 32:42 உபா 32:43 ஏசா 14:22 ஏசா 14:23 வெளிப் 17:14-16
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.