| 1 | அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள். | சங் 89:5 சங் 146:1 ஏசா 49:13 லூக் 2:13 லூக் 2:14 வெளிப் 19:1-6 |
| 2 | அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள். | சங் 103:20 சங் 103:21 யோபு 38:7 ஏசா 6:2-4 எசே 3:12 வெளிப் 5:11-13 |
| 3 | சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள். | சங் 8:1-3 சங் 19:1-6 சங் 89:36 சங் 89:37 சங் 136:7-9 ஆதி 1:14-16 ஆதி 8:22 உபா 4:19 எரே 33:20 |
| 4 | வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள். | சங் 113:6 1இரா 8:27 2கொரி 12:2 |
| 5 | அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது. | சங் 33:6-9 சங் 95:5 ஆதி 1:1 ஆதி 1:2 ஆதி 1:6 எரே 10:11-13 ஆமோ 9:6 வெளிப் 4:11 |
| 6 | அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார். | சங் 89:37 சங் 93:1 சங் 119:90 சங் 119:91 யோபு 38:10 யோபு 38:11 யோபு 38:33 நீதி 8:27-29 ஏசா 54:9 எரே 31:35 எரே 31:36 எரே 33:25 |
| 7 | பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; மகாமச்சங்களே, சகல ஆழங்களே, | சங் 74:13 சங் 74:14 சங் 104:25 சங் 104:26 ஆதி 1:21 யோபு 41:1-34 ஏசா 27:1 ஏசா 43:20 ஏசா 51:9 ஏசா 51:10 |
| 8 | அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே, | சங் 147:15-18 ஆதி 19:24 யாத் 9:23-25 லேவி 10:2 எண் 16:35 யோசு 10:11 யோபு 37:2-6 யோபு 38:22-37 ஏசா 66:16 யோவே 2:30 ஆமோ 7:4 வெளிப் 16:8 வெளிப் 16:9 வெளிப் 16:21 |
| 9 | மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே, | சங் 65:12 சங் 65:13 சங் 96:11-13 சங் 97:4 சங் 97:5 சங் 98:7-9 சங் 114:3-7 ஏசா 42:11 ஏசா 44:23 ஏசா 49:13 ஏசா 55:12 ஏசா 55:13 ஏசா 64:1 எசே 36:1-15 |
| 10 | காட்டுமிருகங்களே, சகல நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே, | சங் 50:10 சங் 50:11 சங் 103:22 சங் 150:6 ஆதி 1:20-25 |
| 11 | பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே, | சங் 2:10-12 சங் 22:27-29 சங் 66:1-4 சங் 68:31 சங் 68:32 சங் 72:10 சங் 72:11 சங் 86:9 சங் 102:15 சங் 138:4 சங் 138:5 நீதி 8:15 நீதி 8:16 ஏசா 49:23 ஏசா 60:3 வெளிப் 21:24 |
| 12 | வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள். | சங் 8:2 சங் 68:25 எரே 31:13 சகரி 9:17 மத் 21:15 மத் 21:16 லூக் 19:37 தீத் 2:4-6 |
| 13 | அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது. | சங் 8:1 சங் 8:9 சங் 99:3 சங் 99:4 சங் 99:9 உன்ன 5:9 உன்ன 5:16 ஏசா 6:3 சகரி 9:17 பிலிப் 3:8 |
| 14 | அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா. | சங் 75:10 சங் 89:17 சங் 92:10 சங் 112:9 1சாமு 2:1 லூக் 1:52 |