1அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.சங் 105:45 2நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்.சங் 63:4 சங் 71:14 சங் 71:15 சங் 104:33 சங் 145:1 சங் 145:2 வெளிப் 7:9-17 3பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.சங் 62:9 சங் 118:8 சங் 118:9 ஏசா 2:22 ஏசா 31:3 ஏசா 37:6 எரே 17:5 எரே 17:6 4அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோகும்.சங் 104:29 ஆதி 2:7 ஆதி 6:17 யோபு 14:10 யோபு 17:1 யோபு 27:3 தானி 5:23 5யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.சங் 33:12 சங் 84:12 சங் 144:15 உபா 33:29 6அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.சங் 33:6 சங் 136:5 சங் 136:6 சங் 148:5 சங் 148:6 ஆதி 1:1 எரே 10:11 எரே 10:12 எரே 32:17 யோவா 1:3 கொலோ 1:16 வெளிப் 14:7 7அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்.சங் 9:16 சங் 10:14 சங் 10:15 சங் 10:18 சங் 12:5 சங் 72:4 சங் 103:6 நீதி 22:22 நீதி 22:23 நீதி 23:10 நீதி 23:11 ஏசா 9:4 மல்கி 3:5 8குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார். நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார்.ஏசா 35:5 ஏசா 42:16 ஏசா 42:18 மத் 9:30 மத் 11:5 லூக் 18:41 லூக் 18:42 யோவா 9:7-33 அப் 26:18 எபே 1:18 1பேது 2:9 9பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.சங் 68:5 உபா 10:18 உபா 10:19 உபா 16:11 நீதி 15:25 எரே 49:11 ஓசி 14:3 மல்கி 3:5 யாக் 1:27 10கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்பண்ணுகிறார். அல்லேலூயா.சங் 10:16 சங் 145:13 யாத் 15:18 ஏசா 9:7 தானி 2:44 தானி 6:26 தானி 7:14 வெளிப் 11:15