இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 145

                   
புத்தகங்களைக் காட்டு
1ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்.சங் 100:1
2நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.சங் 72:15 சங் 119:164 வெளிப் 7:15
3கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.சங் 48:1 சங் 96:4 சங் 147:5 யோபு 5:9 யோபு 9:10 வெளிப் 15:3
4தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.சங் 44:1 சங் 44:2 சங் 71:18 சங் 78:3-7 யாத் 12:26 யாத் 12:27 யாத் 13:14 யாத் 13:15 உபா 6:7 யோசு 4:21-24 ஏசா 38:19
5உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங்குறித்துப் பேசுவேன்.சங் 40:9 சங் 40:10 சங் 66:3 சங் 66:4 சங் 71:17-19 சங் 71:24-19 சங் 96:3 சங் 104:1 சங் 104:2 சங் 105:2 ஏசா 12:4 தானி 4:1-3 தானி 4:37-3
6ஜனங்கள் உம்முடைய பயங்கரமான கிரியைகளின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்.சங் 22:22 சங் 22:23 சங் 22:27 சங் 22:31 சங் 98:2 சங் 98:3 சங் 113:3 சங் 126:2 சங் 126:3 யோசு 2:9-11 யோசு 9:9 யோசு 9:10 எஸ்றா 1:2 எரே 50:28 தானி 3:28 தானி 3:29 தானி 6:25-27 ஆபகூ 2:14
7அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.சங் 36:5-8 ஏசா 63:7 மத் 12:34 மத் 12:35 2கொரி 9:11 2கொரி 9:12 1பேது 2:9 1பேது 2:10
8கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.சங் 86:5 சங் 86:15 சங் 100:5 சங் 103:8 சங் 116:5 யாத் 34:6 யாத் 34:7 எண் 14:18 தானி 9:9 யோனா 4:2 மீகா 7:18-20 ரோம 5:20 ரோம 5:21 எபே 1:6 எபே 1:8 எபே 2:4
9கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது.சங் 25:8 சங் 36:6 சங் 36:7 சங் 65:9-13 சங் 104:27 யோனா 4:11 நாகூ 1:7 மத் 5:45 அப் 14:17 அப் 17:25
10கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள்.சங் 19:1 சங் 96:11-13 சங் 98:3-9 சங் 103:22 சங் 104:24 சங் 148:1-13 ஏசா 43:20 ஏசா 44:23 ரோம 1:19 ரோம 1:20
11மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்யத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு;சங் 2:6-8 சங் 45:6 சங் 45:7 சங் 72:1-20 சங் 93:1 சங் 93:2 சங் 96:10-13 சங் 97:1-12 சங் 99:1-4 1நாளா 29:11 1நாளா 29:12 ஏசா 9:6 ஏசா 9:7 ஏசா 24:23 ஏசா 33:21 ஏசா 33:22 தானி 7:13 தானி 7:14 சகரி 9:9 மத் 6:13 மாற் 11:9 மாற் 11:10 வெளிப் 5:12 வெளிப் 5:13 வெளிப் 11:15-17
12உமது ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.சங் 98:1 சங் 105:5 சங் 106:2 சங் 110:2 சங் 110:3 சங் 145:6-12 சங் 136:4-26 தானி 4:34 தானி 4:35 மத் 28:18 அப் 2:8-11 எபே 1:19-21 எபே 3:7 எபே 3:8 வெளிப் 12:10 வெளிப் 19:15 வெளிப் 19:16
13உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.சங் 146:10 ஏசா 9:7 தானி 2:44 தானி 7:14 தானி 7:27 1தீமோ 1:17 வெளிப் 11:15
14கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.சங் 37:24 சங் 94:18 சங் 119:117 லூக் 22:31 லூக் 22:32
15எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்.சங் 145:9 சங் 104:21 சங் 104:27 சங் 136:25 சங் 147:8 சங் 147:9 ஆதி 1:30 யோபு 38:39-41 யோவே 2:22 மத் 6:26 லூக் 12:24 அப் 17:25
16நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.சங் 104:28 சங் 107:9 சங் 132:15 யோபு 38:27
17கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.சங் 50:6 சங் 89:14 சங் 97:2 சங் 99:3 சங் 99:4 சங் 103:6 ஆதி 18:25 உபா 32:4 1சாமு 2:2 1சாமு 2:3 ஏசா 45:21 செப் 3:5 சகரி 9:9 ரோம 3:5 ரோம 3:6 ரோம 3:25 ரோம 3:26 வெளிப் 4:8 வெளிப் 15:3 வெளிப் 15:4 வெளிப் 16:5-7 வெளிப் 19:2 வெளிப் 19:11
18தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.சங் 34:18 சங் 46:1 சங் 46:5 உபா 4:7 1இரா 18:27 1இரா 18:28 ஏசா 58:9 யோவா 14:23 யாக் 4:8
19அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.சங் 20:4 சங் 34:9 சங் 36:7 சங் 36:8 சங் 37:4 சங் 37:19 மத் 5:6 லூக் 1:53 யோவா 15:7 யோவா 15:16 யோவா 16:24 எபே 3:16-20 1யோவா 5:15
20கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.சங் 31:23 சங் 37:28 சங் 97:10 யாத் 20:6 யோவா 10:27-29 ரோம 8:28-30 யாக் 2:5 1பேது 1:5-8
21என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.சங் 145:1 சங் 145:2 சங் 145:5 சங் 30:12 சங் 51:15 சங் 71:8 சங் 71:15 சங் 71:23 சங் 71:24 சங் 89:1
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.