| 1 | கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும். | சங் 31:1 சங் 71:2 2சாமு 7:25 தானி 9:16 1யோவா 1:9 |
| 2 | ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே, அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும். | சங் 130:3 யோபு 14:3 |
| 3 | சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்கு முன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான். | சங் 7:1 சங் 7:2 சங் 17:9-13 சங் 35:4 சங் 54:3 சங் 142:6 |
| 4 | என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. | சங் 55:5 சங் 61:2 சங் 77:3 சங் 102:1 சங் 124:4 சங் 142:3 யோபு 6:27 |
| 5 | பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன். | சங் 42:6 சங் 77:5 சங் 77:6 சங் 77:10-12 சங் 111:4 உபா 8:2 உபா 8:3 1சாமு 17:34-37 1சாமு 17:45-50 ஏசா 63:7-14 மீகா 6:5 |
| 6 | என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. (சேலா) | சங் 44:20 சங் 88:9 யோபு 11:13 |
| 7 | கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்து போகிறது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும். | சங் 13:1-4 சங் 40:13 சங் 40:17 சங் 70:5 சங் 71:12 |
| 8 | அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். | சங் 30:5 சங் 42:8 சங் 46:5 சங் 59:16 ஆதி 32:24-29 ஓசி 6:3 |
| 9 | கர்த்தாவே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன். | சங் 34:2-4 சங் 56:9 சங் 61:3 சங் 61:4 சங் 142:5 நீதி 18:10 எபிரெ 6:18 |
| 10 | உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக. | சங் 25:4 சங் 25:5 சங் 25:8 சங் 25:9 சங் 25:12 சங் 119:5-7 சங் 119:12-7 சங் 119:35-7 சங் 139:24 மீகா 4:2 மத் 28:20 கொலோ 1:9 கொலோ 1:10 1தெச 4:1 1தெச 4:2 எபிரெ 13:21 1யோவா 2:27 |
| 11 | கர்த்தாவே, உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடும். | சங் 85:6 சங் 119:25 சங் 119:37 சங் 119:40 சங் 119:88 சங் 119:107 சங் 138:7 ஆபகூ 3:2 எபே 2:4 எபே 2:5 |
| 12 | உம்முடைய கிருபையின்படி என் சத்துருக்களை அழித்து, என் ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்காரம்பண்ணும்; நான் உமது அடியேன். | சங் 54:5 சங் 55:23 சங் 136:15-20 1சாமு 24:12-15 1சாமு 25:29 1சாமு 26:10 |