1கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.சங் 32:1 சங் 54:1 சங் 57:1 1நாளா 4:10 2அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.சங் 42:4 சங் 62:8 சங் 102:1 1சாமு 1:15 1சாமு 1:16 ஏசா 26:16 ரோம 8:26 3என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள்.சங் 22:14 சங் 61:2 சங் 102:4 சங் 143:4 மாற் 14:33-36 4வலதுபுறமாய்க் கண்ணோக்கிப் பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை; எனக்கு அடைக்கலமில்லாமற் போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.சங் 31:11 சங் 69:20 சங் 88:8 சங் 88:18 யோபு 19:13-19 மத் 26:56 2தீமோ 4:16 5கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன்.சங் 46:1 சங் 46:7 சங் 46:11 சங் 62:6 சங் 62:7 சங் 91:2 சங் 91:9 சங் 91:10 யோவா 16:32 2தீமோ 4:17 6என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள்.சங் 44:24-26 சங் 79:8 சங் 116:6 சங் 136:23 சங் 143:3 சங் 143:7 7உமது நாமத்தை நான் துதிக்கும்படி, என் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; எனக்கு நீர் தயவு செய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.சங் 142:1 சங் 9:3 சங் 9:14 சங் 31:8 சங் 88:4-8 சங் 143:11 சங் 146:7 ஏசா 61:1 அப் 2:24