| 1 | கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத்தீவிரியும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும். | சங் 40:13 சங் 69:17 சங் 69:18 சங் 70:5 சங் 71:12 சங் 143:7 யோபு 7:21 |
| 2 | என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது. | நீதி 15:8 |
| 3 | கர்த்தாவே, என் வாய்க்குக் காவல்வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும். | சங் 17:3-5 சங் 39:1 சங் 71:8 மீகா 7:5 யாக் 1:26 யாக் 3:2 |
| 4 | அக்கிரமஞ்செய்கிற மனுஷரோடே ஆகாமியக் கிரியைகளை நடப்பிக்கும்படி என் இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இணங்கவொட்டாதேயும்; அவர்களுடைய ருசியுள்ள பதார்த்தங்களில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக. | சங் 119:36 உபா 2:30 உபா 29:4 1இரா 8:58 1இரா 22:22 ஏசா 63:17 மத் 6:13 யாக் 1:13 |
| 5 | நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன். | 1சாமு 25:31-34 2சாமு 12:7-13 2நாளா 16:7-10 2நாளா 25:16 நீதி 6:23 நீதி 9:8 நீதி 9:9 நீதி 15:5 நீதி 15:22 நீதி 19:25 நீதி 25:12 நீதி 27:5 நீதி 27:6 கலா 2:11-14 கலா 6:1 வெளிப் 3:19 |
| 6 | அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலைச் சார்புகளிலிருந்து தள்ளுண்டுபோகிறபோது, என் வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள். | 1சாமு 31:1-8 2சாமு 1:17-27 1நாளா 10:1-7 |
| 7 | பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்கள் எலும்புகள் பாதாளவாய்க்கு நேராய்ச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. | சங் 44:22 1சாமு 22:18 1சாமு 22:19 ரோம 8:36 2கொரி 1:9 எபிரெ 11:37 வெளிப் 11:8 வெளிப் 11:9 |
| 8 | ஆனாலும் ஆண்டவராகிய கர்த்தாவே, என் கண்கள் உம்மை நோக்கியிருக்கிறது; உம்மை நம்யிருக்கிறேன்; என் ஆத்துமாவை வெறுமையாக விடாதேயும். | சங் 25:15 சங் 123:1 சங் 123:2 2நாளா 20:12 |
| 9 | அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரரின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி இரட்சியும். | சங் 119:110 சங் 140:5 சங் 142:3 நீதி 13:14 எரே 18:22 லூக் 20:20 |
| 10 | துன்மார்க்கர் தங்கள் வலைகளில் அகப்படுவார்களாக; நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன். | சங் 7:15 சங் 7:16 சங் 35:8 சங் 37:14 சங் 37:15 சங் 64:7 சங் 64:8 சங் 140:9 எஸ்தர் 7:10 நீதி 11:8 |