| 1 | கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும். | சங் 43:1 சங் 59:1-3 சங் 71:4 |
| 2 | அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள். | சங் 2:1 சங் 2:2 சங் 21:11 சங் 36:4 சங் 38:12 சங் 62:3 சங் 64:5 சங் 64:6 நீதி 12:20 ஓசி 7:6 மீகா 2:1-3 நாகூ 1:11 |
| 3 | சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா) | சங் 52:2 சங் 52:3 சங் 57:4 சங் 59:7 சங் 64:3 சங் 64:4 நீதி 12:18 ஏசா 59:3-5 ஏசா 59:13-5 எரே 9:3 எரே 9:5 யாக் 3:6-8 |
| 4 | கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். | சங் 17:8 சங் 17:9 சங் 36:11 சங் 37:32 சங் 37:33-40 சங் 55:1-3 சங் 71:4 |
| 5 | அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய் வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா) | சங் 10:4-12 சங் 17:8-13 சங் 35:7 சங் 36:11 சங் 57:6 சங் 119:69 சங் 119:85 சங் 119:110 சங் 123:3 சங் 123:4 சங் 141:9 சங் 141:10 சங் 142:3 நீதி 29:5 எரே 18:18 எரே 18:20 எரே 18:22 லூக் 11:53 லூக் 11:54 லூக் 20:20-23 |
| 6 | நான் கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும். | சங் 16:2 சங் 16:5 சங் 16:6 சங் 31:14 சங் 91:2 சங் 119:57 சங் 142:5 புலம் 3:24 சகரி 13:9 |
| 7 | ஆண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என் தலையை மூடினீர். | சங் 18:1 சங் 18:2 சங் 18:35 சங் 27:1 சங் 28:7 சங் 28:8 சங் 59:17 சங் 62:2 சங் 62:7 சங் 89:26 சங் 95:1 உபா 33:27-29 ஏசா 12:2 |
| 8 | கர்த்தாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாதபடிசெய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டாதேயும். (சேலா) | சங் 27:12 சங் 94:20 சங் 94:21 2சாமு 15:31 யோபு 5:12 யோபு 5:13 |
| 9 | என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக. | சங் 7:16 சங் 64:8 சங் 94:23 எஸ்தர் 5:14 எஸ்தர் 7:10 நீதி 10:6 நீதி 10:11 நீதி 12:13 நீதி 18:7 மத் 27:25 |
| 10 | நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; அக்கினியிலும், அவர்கள் எழுந்திருக்கக்கூடாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக. | சங் 11:6 சங் 18:13 சங் 18:14 சங் 21:9 சங் 120:4 ஆதி 19:24 யாத் 9:23 யாத் 9:24 வெளிப் 16:8 வெளிப் 16:9 |
| 11 | பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும். | சங் 12:3 சங் 12:4 நீதி 6:17 நீதி 12:13 நீதி 17:20 நீதி 18:21 |
| 12 | சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன். | சங் 9:4 சங் 10:17 சங் 10:18 சங் 22:24 சங் 72:4 சங் 72:12-14 சங் 102:17 1இரா 8:45 1இரா 8:49 நீதி 22:22 நீதி 23:10 நீதி 23:11 ஏசா 11:4 எரே 22:16 மத் 11:5 |
| 13 | நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் பண்ணுவார்கள். | சங் 32:11 சங் 33:1 ஏசா 3:10 |