1உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்.சங் 9:1 சங் 86:12 சங் 86:13 சங் 103:1 சங் 103:2 சங் 111:1 1கொரி 14:15 எபே 5:19 2உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.சங் 5:7 சங் 28:2 சங் 99:5 சங் 99:9 1இரா 8:29 1இரா 8:30 தானி 6:10 3நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;சங் 18:6 சங் 34:4-6 சங் 77:1 சங் 77:2 ஏசா 65:24 4கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.சங் 72:11 சங் 102:15 சங் 102:22 ஏசா 49:23 ஏசா 60:3-5 ஏசா 60:16-5 வெளிப் 11:15 வெளிப் 21:24 5கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள்.ஏசா 52:7-10 ஏசா 65:14 ஏசா 66:10-14 எரே 31:11 எரே 31:12 செப் 3:14 செப் 3:15 மத் 21:5-9 லூக் 19:37 லூக் 19:38 6கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.சங் 51:17 சங் 113:5 சங் 113:6 1சாமு 2:7 1சாமு 2:8 நீதி 3:34 ஏசா 57:15 ஏசா 66:2 லூக் 1:51-53 லூக் 14:11 லூக் 18:14 யாக் 4:6 1பேது 5:5 1பேது 5:6 7நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.சங் 23:3 சங் 23:4 சங் 41:7 சங் 41:8 சங் 66:10-12 யோபு 13:15 யோபு 19:25 யோபு 19:26 ஏசா 57:16 8கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.சங் 57:2 ஏசா 26:12 எரே 32:39 எரே 32:40 யோவா 15:2 ரோம 5:10 ரோம 8:28-30 பிலிப் 1:6 1தெச 5:24