இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 137

                   
புத்தகங்களைக் காட்டு
1பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.ஆதி 2:10-14 எஸ்றா 8:21 எஸ்றா 8:31 எசே 1:1
2அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.சங் 33:2 சங் 81:2 ஏசா 24:8 எசே 26:13 ஆமோ 8:10 வெளிப் 18:22
3எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்கள கீதத்தையும் விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.சங் 123:3 சங் 123:4 புலம் 2:15 புலம் 2:16
4கர்த்தரின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?பிரச 3:4 ஏசா 22:12 புலம் 5:14 புலம் 5:15 ஓசி 9:4 ஆமோ 8:3
5எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக.சங் 84:1 சங் 84:2 சங் 84:10 சங் 102:13 சங் 102:14 சங் 122:5-9 நெகே 1:2-4 நெகே 2:2 நெகே 2:3 ஏசா 62:1 ஏசா 62:6 ஏசா 62:7 எரே 51:50 தானி 6:10 தானி 6:11
6நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக.சங் 22:15 ஏசா 41:17 புலம் 4:4 எசே 3:26
7கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.சங் 74:18 சங் 79:8-12 யாத் 17:14 1சாமு 15:2 ஓசி 7:2
8பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.ஏசா 47:1-5 எரே 50:42 எரே 51:33 சகரி 2:7
9உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.ஏசா 13:16 ஓசி 10:14 ஓசி 13:16
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.