1கர்த்தரை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 105:1 சங் 106:1 சங் 107:1 சங் 118:1 சங் 119:68 2நாளா 7:3 2நாளா 7:6 எஸ்றா 3:11 எரே 33:11 2தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 82:1 சங் 97:7 சங் 97:9 யாத் 18:11 உபா 10:17 யோசு 22:22 2நாளா 2:5 தானி 2:47 3கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.1தீமோ 6:15 வெளிப் 17:14 வெளிப் 19:16 4ஒருவராய் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 72:18 சங் 86:10 யாத் 15:11 யோபு 5:9 வெளிப் 15:3 5வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 33:6 சங் 104:24 ஆதி 1:1 நீதி 3:19 நீதி 3:20 நீதி 8:22-29 எரே 51:15 6தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 24:2 சங் 104:2 சங் 104:3 ஆதி 1:9 யோபு 26:7 யோபு 37:18 ஏசா 40:22 ஏசா 44:24 எரே 10:12 சகரி 12:1 2பேது 3:5-7 7பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;சங் 74:16 சங் 74:17 சங் 104:19 ஆதி 1:14-19 உபா 4:19 8பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 148:3 எரே 31:35 மத் 5:45 9இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;சங் 8:3 சங் 89:36 சங் 89:37 யோபு 31:26 10எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 78:51 சங் 105:36 சங் 135:8 யாத் 11:5 யாத் 11:6 யாத் 12:12 யாத் 12:29 எபிரெ 11:28 11அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 78:52 சங் 105:37 யாத் 12:51 யாத் 13:3 யாத் 13:17 1சாமு 12:6-8 12பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.யாத் 6:6 யாத் 13:14 யாத் 15:6 உபா 11:2-4 ஏசா 51:9 ஏசா 51:10 எரே 32:21 அப் 7:36 13சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 66:5 சங் 66:6 சங் 74:13 சங் 78:13 சங் 106:9-11 யாத் 14:21 யாத் 14:22 யாத் 14:29 ஏசா 63:12 ஏசா 63:13 எபிரெ 11:29 14அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 78:13 சங் 106:9 யாத் 14:22 15பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 78:53 சங் 135:9 யாத் 14:27 யாத் 14:28 யாத் 15:4 யாத் 15:5 யாத் 15:10 யாத் 15:11 நெகே 9:10 நெகே 9:11 16தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 77:20 யாத் 13:18 யாத் 15:22 எண் 9:17-22 உபா 8:2 உபா 8:15 நெகே 9:12 நெகே 9:19 ஏசா 49:10 ஏசா 63:11-14 17பெரிய ராஜாக்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 135:10 சங் 135:11 யோசு 12:1-24 18பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.19எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.எண் 21:21 எண் 21:23 உபா 2:30-36 உபா 29:7 20பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.எண் 21:33 உபா 3:1-29 21அவர்கள் தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 44:2 சங் 44:3 சங் 78:55 சங் 105:44 சங் 135:12 எண் 32:33-42 உபா 3:12-17 யோசு 12:1-7 யோசு 13:1-21 நெகே 9:22-24 22அதைத் தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 47:4 23நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 102:17 சங் 106:43-45 ஆதி 8:1 உபா 32:36 ஏசா 63:9 எசே 16:3-13 லூக் 1:48 லூக் 1:52 24நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.யாத் 15:13 உபா 15:15 நீதி 23:10 நீதி 23:11 ஏசா 63:9 லூக் 1:68-74 தீத் 2:14 25மாம்ச தேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 104:27 சங் 145:15 சங் 147:9 26பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 136:1-3 சங் 115:3 சங் 123:1 யோனா 1:9 வெளிப் 11:13