| 1 | அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரரே, துதியுங்கள். | சங் 33:1 சங் 33:2 சங் 96:1-4 சங் 106:1 சங் 107:8 சங் 107:15 சங் 111:1 சங் 112:1 சங் 113:1 சங் 117:1 சங் 117:2 சங் 150:6 |
| 2 | கர்த்தருடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள். | 1நாளா 16:37-42 1நாளா 23:30 நெகே 9:5 லூக் 2:37 |
| 3 | கர்த்தர் நல்லவர்; அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அது இன்பமானது. | சங் 106:1 சங் 107:1 சங் 118:1 சங் 119:68 சங் 136:1 சங் 145:7 சங் 145:8 மத் 19:17 |
| 4 | கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார். | சங் 33:12 உபா 7:6 உபா 7:7 உபா 10:15 1சாமு 12:22 ஏசா 41:8 ஏசா 43:20 ஏசா 43:21 சகரி 2:10-12 1பேது 2:9 |
| 5 | கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன். | சங் 48:1 சங் 86:8-10 சங் 89:6 சங் 95:3 சங் 96:4 சங் 96:5 சங் 97:9 உபா 10:17 ஏசா 40:22 ஏசா 40:25 எரே 10:10 எரே 10:11 தானி 3:29 தானி 6:26 தானி 6:27 |
| 6 | வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார். | சங் 33:9 சங் 33:11 சங் 115:3 ஏசா 46:10 தானி 4:35 ஆமோ 4:13 ஆமோ 9:6 மத் 28:18 |
| 7 | அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார். | சங் 148:8 ஆதி 2:5 ஆதி 2:6 1இரா 18:1 1இரா 18:41-45 யோபு 5:10 எரே 10:13 எரே 14:22 எரே 51:16 சகரி 10:1 |
| 8 | அவர் எகிப்திலே மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார். | சங் 78:51 சங் 105:36 சங் 136:10 யாத் 12:12 யாத் 12:29 யாத் 12:30 யாத் 13:15 |
| 9 | எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார். | சங் 78:43-50 சங் 105:27-29 யாத் 7:1-15 உபா 4:34 நெகே 9:10 ஏசா 51:9 ஏசா 51:10 எரே 32:20 எரே 32:21 அப் 7:36 |
| 10 | அவர் அநேகம் ஜாதிகளை அடித்து, பலத்த ராஜாக்களைக் கொன்று; | சங் 44:2 சங் 44:3 சங் 136:17-22 |
| 11 | எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் சகல ராஜ்யங்களையும் அழித்து, | எண் 21:21-35 உபா 2:30-37 உபா 3:1-11 நெகே 9:22 |
| 12 | அவர்கள் தேசத்தைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார். | சங் 44:1-3 சங் 78:55 சங் 136:21 சங் 136:22 எண் 33:54 யோசு 11:23 யோசு 12:7 |
| 13 | கர்த்தாவே, உம்முடைய நாமம் என்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும். | சங் 8:1 சங் 8:9 சங் 72:17 சங் 102:12 சங் 102:21 யாத் 3:15 யாத் 34:5-7 ஓசி 12:5 மத் 6:9 மத் 6:13 |
| 14 | கர்த்தர் தம்முடைய ஜனத்தின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார். | சங் 7:8 சங் 50:4 சங் 96:13 |
| 15 | அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. | சங் 115:4-8 உபா 4:28 ஏசா 37:19 ஏசா 40:19 ஏசா 40:20 ஏசா 44:9-20 ஏசா 46:6 ஏசா 46:7 எரே 10:3-11 ஆபகூ 2:18 ஆபகூ 2:19 அப் 17:29 |
| 16 | அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. | ஏசா 6:10 மத் 13:14-16 |
| 17 | அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை. |
| 18 | அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள். | சங் 97:7 சங் 115:8 ஏசா 44:18-20 எரே 10:8 2கொரி 4:4 |
| 19 | இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். | சங் 115:9-11 சங் 118:1-4 சங் 145:10 சங் 147:19 சங் 147:20 சங் 148:14 வெளிப் 19:5 |
| 20 | லேவி குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; கர்த்தருக்குப் பயந்தவர்களே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். |
| 21 | எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா. | சங் 76:2 சங் 134:3 2நாளா 6:6 |