இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 130

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.சங் 121:1 சங் 122:1 சங் 123:1 சங் 124:1 சங் 125:1 சங் 126:1 சங் 127:1 சங் 128:1 சங் 129:1
2ஆண்டவரே, என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.சங் 5:1 சங் 5:2 சங் 17:1 சங் 55:1 சங் 55:2 சங் 61:1 சங் 61:2 2நாளா 6:40 நெகே 1:6 நெகே 1:11 ஏசா 37:17 தானி 9:17-19
3கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.சங் 143:2 யோபு 9:2 யோபு 9:3 யோபு 9:20 யோபு 10:14 யோபு 15:14 ஏசா 53:6 யோவா 8:7-9 ரோம 3:20-24
4உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.சங் 25:11 சங் 86:5 சங் 103:2 சங் 103:3 யாத் 34:5-7 ஏசா 1:18 ஏசா 55:7 எரே 31:34 தானி 9:9 மீகா 7:18-20 ரோம 8:1 2கொரி 5:19 எபே 1:7 கொலோ 1:14
5கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.சங் 27:14 சங் 33:20 சங் 40:1 சங் 62:1 சங் 62:5 ஆதி 49:18 ஏசா 8:17 ஏசா 26:8 ஏசா 30:18 லூக் 2:25 லூக் 2:38
6எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.சங் 63:6 சங் 119:147 அப் 27:29
7இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.சங் 40:3 சங் 71:5 சங் 115:9-13 சங் 131:1 சங் 131:3 செப் 3:12
8அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களின்றும் மீட்டுக்கொள்வார்.சங் 103:3 சங் 103:4 மத் 1:21 ரோம 6:14 தீத் 2:14 1யோவா 3:5-8
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.