1கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.சங் 120:1 சங் 121:1 சங் 122:1 சங் 123:1 சங் 124:1 சங் 125:1 சங் 126:1 சங் 127:1 2உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.ஆதி 3:19 உபா 28:4 உபா 28:11 உபா 28:39 உபா 28:51 நியா 6:3-6 பிரச 5:18 பிரச 5:19 ஏசா 62:8 ஏசா 65:13 ஏசா 65:21-23 3உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.ஆதி 49:22 நீதி 5:15-18 எசே 19:10 4இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.5கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.சங் 20:2 சங் 118:26 சங் 134:3 ஏசா 2:3 எபே 1:3 6நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.ஆதி 50:23 யோபு 42:16