1கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.சங் 120:1 சங் 121:1 சங் 122:1 சங் 123:1 சங் 124:1 2பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.புலம் 4:12 3நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு, ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது.சங் 103:9 சங் 103:14 நீதி 22:8 ஏசா 10:5 ஏசா 14:5 ஏசா 14:6 ஏசா 27:8 1கொரி 10:13 வெளிப் 2:10 4கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும்.சங் 41:1-3 சங் 51:18 சங் 73:1 ஏசா 58:10 ஏசா 58:11 எபிரெ 6:10 1யோவா 3:17-24 5தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.சங் 40:4 சங் 101:3 1நாளா 10:13 1நாளா 10:14 நீதி 14:14 எரே 2:19 செப் 1:6 எபிரெ 10:38