1எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.சங் 120:1 2வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.சங் 46:1 சங் 124:8 சங் 146:5 சங் 146:6 ஏசா 40:28 ஏசா 40:29 ஏசா 41:13 எரே 20:11 ஓசி 13:9 எபிரெ 13:6 3உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.சங் 91:12 1சாமு 2:9 நீதி 2:8 நீதி 3:23 நீதி 3:26 1பேது 1:5 4இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.சங் 27:1 சங் 32:7 சங் 32:8 சங் 127:1 ஏசா 27:3 5கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.யாத் 13:21 ஏசா 4:5 ஏசா 4:6 ஏசா 25:4 ஏசா 32:2 மத் 23:37 6பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.சங் 91:5-10 ஏசா 49:10 வெளிப் 7:16 7கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.சங் 91:9 சங் 91:10 யோபு 5:19-27 நீதி 12:21 மத் 6:13 ரோம 8:28 ரோம 8:35-39 2தீமோ 4:18 8கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.உபா 28:6 உபா 28:19 2சாமு 5:2 எஸ்றா 8:21 எஸ்றா 8:31 நீதி 2:8 நீதி 3:6 யாக் 4:13-16