| 1 | கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். | சங் 1:1-3 சங் 32:1 சங் 32:2 சங் 112:1 சங் 128:1 மத் 5:3-12 லூக் 11:28 யோவா 13:17 யாக் 1:25 வெளிப் 22:14 |
| 2 | அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். | சங் 119:22 சங் 119:146 சங் 25:10 சங் 105:45 உபா 6:17 1இரா 2:3 நீதி 23:26 எசே 36:27 யோவா 14:23 1யோவா 3:20 |
| 3 | அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். | 1யோவா 3:9 1யோவா 5:18 |
| 4 | உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர். | உபா 4:1 உபா 4:9 உபா 5:29-33 உபா 6:17 உபா 11:13 உபா 11:22 உபா 12:32 உபா 28:1-14 உபா 30:16 யோசு 1:7 எரே 7:23 மத் 28:20 யோவா 14:15 யோவா 14:21 பிலிப் 4:8 பிலிப் 4:9 1யோவா 5:3 |
| 5 | உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும். | சங் 119:32 சங் 119:36 சங் 119:44 சங் 119:45 சங் 119:131 சங் 119:159 சங் 119:173 சங் 51:10 எரே 31:33 ரோம 7:22-24 2தெச 3:5 எபிரெ 13:21 |
| 6 | நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை. | சங் 119:31 சங் 119:80 யோபு 22:26 தானி 12:2 தானி 12:3 1யோவா 2:28 1யோவா 3:20 1யோவா 3:21 |
| 7 | உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன். | சங் 119:171 சங் 9:1 சங் 86:12 சங் 86:13 1நாளா 29:13-17 |
| 8 | உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும். | சங் 119:16 சங் 119:106 சங் 119:115 யோசு 24:15 |
| 9 | வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே. | சங் 25:7 சங் 34:11 யோபு 1:5 யோபு 13:26 நீதி 1:4 நீதி 1:10 நீதி 4:1 நீதி 4:10-17 நீதி 5:7-23 நீதி 6:20-35 நீதி 7:7 பிரச 11:9 பிரச 11:10 பிரச 12:1 லூக் 15:13 2தீமோ 2:22 தீத் 2:4-6 |
| 10 | என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும். | சங் 119:2 சங் 119:34 சங் 119:58 சங் 119:69 சங் 78:37 1சாமு 7:3 2நாளா 15:15 எரே 3:10 ஓசி 10:2 செப் 1:5 செப் 1:6 மத் 6:24 கொலோ 3:22 1யோவா 2:15 |
| 11 | நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். | சங் 119:97 சங் 1:2 சங் 37:31 சங் 40:8 யோபு 22:22 நீதி 2:1 நீதி 2:10 நீதி 2:11 ஏசா 51:7 எரே 15:16 லூக் 2:19 லூக் 2:51 கொலோ 3:16 |
| 12 | கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும். | 1தீமோ 1:11 1தீமோ 6:15 |
| 13 | உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன். | சங் 119:46 சங் 119:172 சங் 34:11 சங் 37:30 சங் 40:9 சங் 40:10 சங் 71:15-18 சங் 118:17 மத் 10:27 மத் 12:34 அப் 4:20 |
| 14 | திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன். | சங் 119:47 சங் 119:72 சங் 119:77 சங் 119:111 சங் 119:127 சங் 119:162 சங் 19:9 சங் 19:10 சங் 112:1 யோபு 23:12 எரே 15:16 மத் 13:44 அப் 2:41-47 |
| 15 | உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன். | சங் 119:23 சங் 119:48 சங் 119:78 சங் 119:97 சங் 119:131 சங் 119:148 சங் 1:2 யாக் 1:25 |
| 16 | உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். | சங் 119:14 சங் 119:24 சங் 119:35 சங் 119:47 சங் 119:70 சங் 119:77 சங் 119:92 சங் 40:8 ரோம 7:22 எபிரெ 10:16 எபிரெ 10:17 |
| 17 | உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன். | சங் 119:65 சங் 119:124 சங் 119:132 சங் 13:6 சங் 116:7 யோவா 1:16 2கொரி 9:7-11 பிலிப் 4:19 |
| 18 | உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். | ஏசா 29:10-12 ஏசா 29:18-12 ஏசா 32:3 ஏசா 35:5 மத் 13:13 மத் 16:17 யோவா 9:39 அப் 26:18 2கொரி 3:14-18 2கொரி 4:4-6 எபே 1:17 எபே 1:18 வெளிப் 3:18 |
| 19 | பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும். | சங் 39:12 ஆதி 47:9 1நாளா 29:15 2கொரி 5:6 எபிரெ 11:13-16 1பேது 2:11 |
| 20 | உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்து போகிறது. | சங் 119:40 சங் 119:131 சங் 119:174 சங் 42:1 சங் 63:1 சங் 84:2 நீதி 13:12 உன்ன 5:8 வெளிப் 3:15 வெளிப் 3:16 |
| 21 | உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர். | சங் 119:78 சங் 138:6 யாத் 10:3 யாத் 18:11 யோபு 40:11 யோபு 40:12 ஏசா 2:11 ஏசா 2:12 ஏசா 10:12 எசே 28:2-10 தானி 4:37 தானி 5:22-24 மல்கி 4:1 லூக் 14:11 லூக் 18:14 யாக் 4:6 1பேது 5:5 |
| 22 | நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளைக் கைக்கொள்ளுகிறேன். | சங் 119:39 சங் 119:42 சங் 39:8 சங் 42:10 சங் 68:9-11 சங் 68:19-11 சங் 68:20-11 சங் 123:3 சங் 123:4 1சாமு 25:10 1சாமு 25:39 2சாமு 16:7 2சாமு 16:8 யோபு 16:20 யோபு 19:2 யோபு 19:3 எபிரெ 13:13 |
| 23 | பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது அடியேனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன். | சங் 2:1 சங் 2:2 1சாமு 20:31 1சாமு 22:7-13 லூக் 22:66 லூக் 23:1 லூக் 23:2 லூக் 23:10 லூக் 23:11 |
| 24 | உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது. | சங் 119:16 சங் 119:77 சங் 119:92 சங் 119:143 சங் 119:162 யோபு 27:10 எரே 6:10 |
| 25 | என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும். | சங் 22:15 சங் 44:25 ஏசா 65:25 மத் 16:23 ரோம 7:22-24 பிலிப் 3:19 கொலோ 3:2 |
| 26 | என் வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். | சங் 119:106 சங் 32:5 சங் 38:18 சங் 51:1-19 நீதி 28:13 |
| 27 | உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன். | சங் 71:17 சங் 78:4 சங் 105:2 சங் 111:4 சங் 145:5 சங் 145:6 யாத் 13:14 யாத் 13:15 யோசு 4:6 யோசு 4:7 அப் 2:11 வெளிப் 15:3 |
| 28 | சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்து போகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும். | சங் 22:14 சங் 107:26 யோசு 2:11 யோசு 2:24 |
| 29 | பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும். | சங் 119:37 சங் 119:104 சங் 119:128 சங் 119:163 சங் 141:3 சங் 141:4 நீதி 30:8 ஏசா 44:20 எரே 16:19 யோனா 2:8 எபே 4:22-25 1யோவா 1:8 1யோவா 2:4 வெளிப் 22:15 |
| 30 | மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன். | சங் 119:29 சங் 119:111 சங் 119:173 யோசு 24:15 நீதி 1:29 லூக் 10:42 யோவா 3:19-21 யோவா 8:45 1பேது 2:2 2யோவா 1:4 |
| 31 | உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும். | சங் 119:48 சங் 119:115 உபா 4:4 உபா 10:20 நீதி 23:23 யோவா 8:31 அப் 11:23 |
| 32 | நீர் என் இருதயத்தை விசாலமாக்கும்போது, நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன். | உன்ன 1:4 ஏசா 40:31 1கொரி 9:24-26 எபிரெ 12:1 |
| 33 | கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன். | சங் 119:12 சங் 119:26 சங் 119:27 ஏசா 54:13 யோவா 6:45 |
| 34 | எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன். | சங் 119:73 சங் 111:10 யோபு 28:28 நீதி 2:5 நீதி 2:6 யோவா 7:17 யாக் 1:5 யாக் 3:13-18 |
| 35 | உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன். | சங் 119:27 சங் 119:36 சங் 119:173 எசே 36:26 எசே 36:27 பிலிப் 2:13 எபிரெ 13:21 |
| 36 | என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும். | சங் 51:10 சங் 141:4 1இரா 8:58 எரே 32:39 எசே 11:19 எசே 11:20 |
| 37 | மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். | எண் 15:39 யோசு 7:21 2சாமு 11:2 யோபு 31:1 நீதி 4:25 நீதி 23:5 ஏசா 33:15 மத் 5:28 1யோவா 2:16 |
| 38 | உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும். | சங் 119:49 2சாமு 7:25-29 2கொரி 1:20 |
| 39 | நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள். | சங் 119:22 சங் 119:31 சங் 39:8 சங் 57:3 2சாமு 12:14 1தீமோ 3:7 1தீமோ 5:14 தீத் 2:8 |
| 40 | இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். | சங் 119:5 சங் 119:20 மத் 26:41 ரோம 7:24 2கொரி 7:1 கலா 5:17 பிலிப் 3:13 பிலிப் 3:14 |
| 41 | கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக. | சங் 119:58 சங் 119:76 சங் 119:77 சங் 119:132 சங் 69:16 சங் 106:4 சங் 106:5 லூக் 2:28-32 |
| 42 | அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன். | சங் 3:2 சங் 42:10 சங் 71:10 சங் 71:11 சங் 109:25 மத் 27:40-43 மத் 27:63-43 |
| 43 | சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன். | சங் 119:13 சங் 50:16 சங் 51:14 சங் 51:15 சங் 71:17 சங் 71:18 ஏசா 59:21 எபே 1:13 யாக் 1:18 |
| 44 | நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன். | சங் 119:33 சங் 119:34 வெளிப் 7:15 வெளிப் 22:11 |
| 45 | நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன். | சங் 119:133 லூக் 4:18 யோவா 8:30-36 யாக் 1:25 யாக் 2:12 2பேது 2:19 |
| 46 | நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன். | சங் 138:1 தானி 3:16-18 தானி 4:1-3 தானி 4:25-27 மத் 10:18 மத் 10:19 அப் 26:1 அப் 26:2 அப் 26:24-29 |
| 47 | நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன். | சங் 119:16 சங் 119:24 சங் 112:1 யோவா 4:34 பிலிப் 2:5 1பேது 2:21 |
| 48 | நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன். | சங் 10:12 எசே 44:12 மீகா 5:9 |
| 49 | நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். | சங் 105:2 சங் 105:42 சங் 106:4 சங் 106:45 ஆதி 8:1 ஆதி 32:9 யோபு 7:7 ஏசா 62:6 |
| 50 | அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது. | சங் 27:13 சங் 28:7 சங் 42:8 சங் 42:11 சங் 94:19 எரே 15:16 ரோம 5:3-5 ரோம 15:4 எபிரெ 6:17-19 எபிரெ 12:11 எபிரெ 12:12 |
| 51 | அகந்தைக்காரர் என்னை மிகவும் பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை. | சங் 119:21 சங் 119:69 சங் 123:3 சங் 123:4 எரே 20:7 லூக் 16:14 லூக் 16:15 லூக் 23:35 |
| 52 | கர்த்தாவே, ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன். | சங் 77:5 சங் 77:11 சங் 77:12 சங் 105:5 சங் 143:5 யாத் 14:29 யாத் 14:30 எண் 16:3-35 உபா 1:35 உபா 1:36 உபா 4:3 உபா 4:4 2பேது 2:4-9 |
| 53 | உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்நிமித்தம் நடுக்கம் என்னைப் பிடித்தது. | சங் 119:136 சங் 119:158 எஸ்றா 9:3 எஸ்றா 9:14 எஸ்றா 10:6 எரே 13:17 தானி 4:19 ஆபகூ 3:16 லூக் 19:41 லூக் 19:42 ரோம 9:1-3 2கொரி 12:21 பிலிப் 3:18 |
| 54 | நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின. | சங் 89:1 சங் 10:1 ஆதி 47:9 எபிரெ 11:13-16 |
| 55 | கர்த்தாவே, இராக்காலத்தில் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன். | சங் 42:8 சங் 63:6 சங் 77:6 சங் 139:18 ஆதி 32:24-28 யோபு 35:9 யோபு 35:10 ஏசா 26:9 லூக் 6:12 அப் 16:25 |
| 56 | நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால், இது எனக்குக் கிடைத்தது. | சங் 119:165 சங் 18:18-22 1யோவா 3:19-24 |
| 57 | கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன். | சங் 16:5 சங் 73:26 சங் 142:5 எரே 10:16 புலம் 3:24 |
| 58 | முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும். | சங் 119:10 சங் 4:6 சங் 51:1-3 சங் 86:1-3 ஓசி 7:14 எபிரெ 10:22 |
| 59 | என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன். | புலம் 3:40 எசே 18:28 எசே 18:30 ஆகா 1:5 ஆகா 1:7 லூக் 15:17-20 2கொரி 13:5 |
| 60 | உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன். | சங் 95:7 சங் 95:8 எசே 10:6-8 நீதி 27:1 பிரச 9:10 கலா 1:16 |
| 61 | துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை. | சங் 119:95 சங் 3:1 1சாமு 30:3-5 யோபு 1:17 ஓசி 6:9 |
| 62 | உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், உம்மைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திருப்பேன். | சங் 119:147 சங் 119:164 சங் 42:8 மாற் 1:35 அப் 16:25 |
| 63 | உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன். | சங் 119:79 சங் 119:115 சங் 16:3 சங் 101:6 சங் 142:7 நீதி 13:20 மல்கி 3:16-18 2கொரி 6:14-17 1யோவா 1:3 1யோவா 3:14 |
| 64 | கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். | சங் 33:5 சங் 104:13 சங் 145:9 |
| 65 | கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர். | சங் 119:17 சங் 13:6 சங் 16:5 சங் 16:6 சங் 18:35 சங் 23:5 சங் 23:6 சங் 30:11 சங் 116:7 1நாளா 29:14 |
| 66 | உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன். | சங் 119:34 சங் 72:1 சங் 72:2 1இரா 3:9 1இரா 3:28 நீதி 2:1-9 நீதி 8:20 ஏசா 11:2-4 நியா 3:15 மத் 13:11 பிலிப் 1:9 யாக் 3:13-18 |
| 67 | நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். | சங் 119:176 சங் 73:5-28 உபா 32:15 2சாமு 10:19 2சாமு 11:2-27 2நாளா 33:9-13 நீதி 1:32 எரே 22:21 |
| 68 | தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். | சங் 86:5 சங் 106:1 சங் 107:1 சங் 145:7-9 யாத் 33:18 யாத் 33:19 யாத் 34:6 யாத் 34:7 ஏசா 63:7 மத் 5:45 மத் 19:17 மாற் 10:18 லூக் 18:19 |
| 69 | அகங்காரிகள் எனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன். | சங் 35:11 சங் 109:2 சங் 109:3 யோபு 13:4 எரே 43:2 எரே 43:3 மத் 5:11 மத் 5:12 மத் 26:59-68 அப் 24:5 அப் 24:13 |
| 70 | அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது; நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன். | சங் 17:10 சங் 73:7 ஏசா 6:10 அப் 28:27 |
| 71 | நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். | சங் 119:67 சங் 94:12 சங் 94:13 ஏசா 27:9 1கொரி 11:32 எபிரெ 12:10 எபிரெ 12:11 |
| 72 | அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். | சங் 119:14 சங் 119:111 சங் 119:127 சங் 119:162 சங் 19:10 நீதி 3:14 நீதி 3:15 நீதி 8:10 நீதி 8:11 நீதி 8:19 நீதி 16:16 மத் 13:44-46 |
| 73 | உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும். | சங் 100:3 சங் 111:10 சங் 138:8 சங் 139:14-16 யோபு 10:8-11 |
| 74 | நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள். | சங் 119:79 சங் 34:2-6 சங் 66:16 மல்கி 3:16 |
| 75 | கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன். | சங் 119:7 சங் 119:62 சங் 119:128 சங் 119:160 உபா 32:4 யோபு 34:23 எரே 12:1 |
| 76 | நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக. | சங் 86:5 சங் 106:4 சங் 106:5 2கொரி 1:3-5 |
| 77 | நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி. | சங் 119:41 சங் 51:1-3 புலம் 3:22 புலம் 3:23 தானி 9:18 |
| 78 | அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன். | சங் 119:21 சங் 119:51 சங் 119:85 சங் 35:26 |
| 79 | உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக. | சங் 119:63 சங் 119:74 சங் 7:7 சங் 142:7 |
| 80 | நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது. | சங் 25:21 சங் 32:2 உபா 26:16 2நாளா 12:14 2நாளா 15:17 2நாளா 25:2 2நாளா 31:20 2நாளா 31:21 நீதி 4:23 எசே 11:9 யோவா 1:47 2கொரி 1:12 |
| 81 | உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். | சங் 119:20 சங் 119:40 சங் 42:1 சங் 42:2 சங் 73:26 சங் 84:2 உன்ன 5:8 வெளிப் 3:15 வெளிப் 3:16 |
| 82 | எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது. | சங் 119:123 சங் 69:3 உபா 28:32 நீதி 13:12 ஏசா 38:11 |
| 83 | புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன். | சங் 22:15 சங் 102:3 சங் 102:4 யோபு 30:30 |
| 84 | உமது அடியேனுடைய நாட்கள் எம்மாத்திரம்? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்? | சங் 39:4 சங் 39:5 சங் 89:47 சங் 89:48 சங் 90:12 யோபு 7:6-8 |
| 85 | உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள். | சங் 119:78 சங் 7:15 சங் 35:7 சங் 36:11 நீதி 16:27 எரே 18:20 |
| 86 | உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது; அநியாயமாய் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்குச் சகாயம்பண்ணும். | சங் 119:128 சங் 119:138 சங் 119:142 சங் 119:151 சங் 19:9 ரோம 7:12 |
| 87 | அவர்கள் என்னைப் பூமியிலிராமல் நீக்கிவிடச் சற்றே தப்பிற்று; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை. | 1சாமு 20:3 1சாமு 23:26 1சாமு 23:27 2சாமு 17:16 மத் 10:28 |
| 88 | உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன். | சங் 119:25 சங் 119:40 சங் 119:159 |
| 89 | கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது. | சங் 119:152 சங் 119:160 சங் 89:2 மத் 5:18 மத் 24:34 மத் 24:35 1பேது 1:25 2பேது 3:13 |
| 90 | உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. | உபா 7:9 மீகா 7:20 |
| 91 | உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள்வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும். | சங் 148:5 சங் 148:6 ஆதி 8:22 ஏசா 48:13 எரே 33:25 |
| 92 | உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். | சங் 119:24 சங் 119:77 சங் 119:143 ரோம 15:4 |
| 93 | நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர். | சங் 119:16 சங் 119:50 யோவா 6:63 1பேது 1:23 |
| 94 | நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன். | சங் 86:2 யோசு 10:4-6 ஏசா 41:8-10 ஏசா 44:2 ஏசா 44:5 ஏசா 64:8-10 செப் 3:17 அப் 27:23 அப் 27:24 |
| 95 | துன்மார்க்கர் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். | சங் 119:61 சங் 119:69 சங் 119:85-87 சங் 10:8-10 சங் 27:2 சங் 37:32 சங் 38:12 1சாமு 23:20-23 2சாமு 17:1-4 மத் 26:3-5 அப் 12:11 அப் 23:21 அப் 25:3 |
| 96 | சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம். | சங் 39:5 சங் 39:6 1சாமு 9:2 1சாமு 17:8 1சாமு 17:49-51 1சாமு 31:4 1சாமு 31:5 2சாமு 14:25 2சாமு 16:23 2சாமு 17:23 2சாமு 18:14 2சாமு 18:17 பிரச 1:2 பிரச 1:3 பிரச 2:11 பிரச 7:20 பிரச 12:8 மத் 5:18 மத் 24:35 |
| 97 | உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுவதும் அது என் தியானம். | சங் 119:48 சங் 119:113 சங் 119:127 சங் 119:159 சங் 119:165 சங் 119:167 சங் 1:2 உபா 6:6-9 உபா 17:19 யோசு 1:8 நீதி 2:10 நீதி 18:1 |
| 98 | நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. | சங் 119:104 உபா 4:6 உபா 4:8 1சாமு 18:5 1சாமு 18:14 1சாமு 18:30 நீதி 2:6 கொலோ 3:16 |
| 99 | உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன். | உபா 4:6-8 2சாமு 15:24-26 1நாளா 15:11-13 2நாளா 29:15-36 2நாளா 30:22 எரே 2:8 எரே 8:8 எரே 8:9 மத் 11:25 மத் 13:11 மத் 15:6-9 மத் 15:14-9 மத் 23:24-36 எபிரெ 5:12 |
| 100 | உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன். | 1இரா 12:6-15 யோபு 12:12 யோபு 15:9 யோபு 15:10 யோபு 32:4 யோபு 32:10 |
| 101 | உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன். | சங் 119:59 சங் 119:60 சங் 119:104 சங் 119:126 சங் 18:23 நீதி 1:15 ஏசா 53:6 ஏசா 55:7 எரே 2:36 தீத் 2:11 தீத் 2:12 1பேது 2:1 1பேது 2:2 1பேது 3:10 1பேது 3:11 |
| 102 | நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன். | சங் 18:21 நீதி 5:7 எரே 32:40 |
| 103 | உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும். | சங் 19:10 சங் 63:5 யோபு 23:12 நீதி 3:17 நீதி 8:11 நீதி 24:13 நீதி 24:14 உன்ன 1:2-4 உன்ன 5:1 |
| 104 | உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன். | சங் 119:98 சங் 119:100 |
| 105 | உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. | சங் 19:8 சங் 43:3 நீதி 6:23 எபே 5:13 2பேது 1:19 |
| 106 | உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன். | சங் 56:12 சங் 66:13 சங் 66:14 2நாளா 15:13 2நாளா 15:14 நெகே 10:29 பிரச 5:4 பிரச 5:5 மத் 5:33 2கொரி 8:5 |
| 107 | நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும். | சங் 6:1 சங் 22:14-18 சங் 34:19 |
| 108 | கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும். | எண் 29:39 ஓசி 14:2 எபிரெ 13:15 |
| 109 | என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன். | நியா 12:3 1சாமு 19:5 1சாமு 20:3 யோபு 13:14 ரோம 8:36 1கொரி 15:31 2கொரி 11:23 |
| 110 | துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறேன். | சங் 119:85 சங் 10:8-18 சங் 124:6 சங் 124:7 சங் 140:5 சங் 141:9 நீதி 1:11 நீதி 1:12 எரே 18:22 |
| 111 | உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி. | சங் 119:14 சங் 119:127 சங் 119:162 சங் 16:5 உபா 33:4 ஏசா 54:17 அப் 26:18 கொலோ 1:12 எபிரெ 9:15 1பேது 1:4 |
| 112 | முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன். | சங் 119:36 சங் 141:4 யோசு 24:23 1இரா 8:58 2நாளா 19:3 பிலிப் 2:13 |
| 113 | வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன். | சங் 94:11 ஏசா 55:7 எரே 4:14 மாற் 7:21 2கொரி 10:5 |
| 114 | என் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். | சங் 32:7 சங் 91:1 சங் 91:2 ஏசா 32:2 |
| 115 | பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன். | சங் 6:8 சங் 26:5 சங் 26:9 சங் 139:19 மத் 7:23 மத் 25:41 1கொரி 15:33 |
| 116 | நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும். | சங் 37:17 சங் 37:24 சங் 41:12 சங் 63:8 சங் 94:18 ஏசா 41:10 ஏசா 42:1 |
| 117 | என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின்பேரில் நோக்கமாயிருப்பேன். | சங் 17:5 சங் 71:6 சங் 73:23 சங் 139:10 ஏசா 41:13 யோவா 10:28 யோவா 10:29 ரோம 14:4 1பேது 1:5 யூதா 1:24 |
| 118 | உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துப் போடுகிறீர்; அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே. | ஏசா 25:10 ஏசா 63:3 மல்கி 4:3 லூக் 21:24 வெளிப் 14:20 |
| 119 | பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன். | 1சாமு 15:23 எரே 6:30 எசே 22:18-22 மல்கி 3:2 மல்கி 3:3 மத் 3:12 மத் 7:23 மத் 13:40-42 மத் 13:49-42 மத் 13:50-42 |
| 120 | உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். | சங் 119:53 லேவி 10:1-3 1சாமு 6:20 2சாமு 6:8 2சாமு 6:9 1நாளா 24:16 1நாளா 24:17 1நாளா 24:30 2நாளா 34:21 2நாளா 34:27 ஏசா 66:2 தானி 10:8-11 ஆபகூ 3:16 பிலிப் 2:12 எபிரெ 12:21 எபிரெ 12:28 எபிரெ 12:29 வெளிப் 1:17 வெளிப் 1:18 |
| 121 | நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும். | சங் 7:3-5 சங் 18:20-24 சங் 75:2 1சாமு 24:11-15 1சாமு 25:28 2சாமு 8:15 அப் 21:16 அப் 25:10 அப் 25:11 2கொரி 1:12 |
| 122 | உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; அகங்காரிகள் என்னையொடுக்கவொட்டாதேயும். | ஆதி 43:9 நீதி 22:26 நீதி 22:27 ஏசா 38:14 பிலேமோ 1:18 பிலேமோ 1:19 எபிரெ 7:22 |
| 123 | உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது. | சங் 119:81 சங் 119:82 சங் 69:3 சங் 130:6 சங் 143:7 புலம் 4:17 |
| 124 | உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். | சங் 119:41 சங் 119:76 சங் 119:77 சங் 119:132 சங் 51:1 சங் 69:13 சங் 69:16 சங் 79:8 சங் 103:10 சங் 130:3 சங் 130:4 சங் 130:7 தானி 9:18 லூக் 18:13 2தீமோ 1:16-18 |
| 125 | நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும். | சங் 119:94 சங் 86:16 சங் 116:16 ரோம 6:22 |
| 126 | நீதியைச்செய்யக் கர்த்தருக்கு வேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிராணத்தை மீறினார்கள். | சங் 9:19 சங் 102:13 ஆதி 22:10 ஆதி 22:11 ஆதி 22:14 உபா 32:36 ஏசா 42:14 |
| 127 | ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன். | சங் 119:72 சங் 19:10 நீதி 3:13-18 நீதி 8:11 நீதி 16:16 மத் 13:45 மத் 13:46 எபே 3:8 |
| 128 | எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன். | சங் 119:6 சங் 19:7 சங் 19:8 உபா 4:8 யோபு 33:27 நீதி 30:5 ரோம 7:12 ரோம 7:14 ரோம 7:16 ரோம 7:22 |
| 129 | உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும். | சங் 119:18 சங் 139:6 ஏசா 9:6 ஏசா 25:1 வெளிப் 19:10 |
| 130 | உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். | சங் 119:105 நீதி 6:23 ஏசா 8:20 லூக் 1:77-79 அப் 26:18 2கொரி 4:4 2கொரி 4:6 எபே 5:13 எபே 5:14 2பேது 1:19 |
| 131 | உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன். | சங் 119:20 சங் 42:1 ஏசா 26:8 ஏசா 26:9 1பேது 2:2 |
| 132 | உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும். | சங் 119:124 சங் 25:18 யாத் 4:31 1சாமு 1:11 2சாமு 16:12 ஏசா 63:7-9 |
| 133 | உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும். | சங் 119:116 சங் 17:5 சங் 32:8 சங் 121:3 1சாமு 2:9 |
| 134 | மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன். | சங் 119:122 சங் 56:1 சங் 56:2 சங் 56:13 சங் 105:43-45 எசே 11:17-20 எசே 36:24-27 லூக் 1:74 லூக் 1:75 அப் 9:31 |
| 135 | உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். | சங் 4:6 சங் 80:1 சங் 80:3 சங் 80:7 சங் 80:19 எண் 6:25 எண் 6:26 யோபு 33:26 வெளிப் 22:4 வெளிப் 22:5 |
| 136 | உம்முடைய வேதத்தை மனுஷர் காத்துநடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. | சங் 119:53 சங் 119:158 1சாமு 15:11 எரே 9:1 எரே 9:18 எரே 13:17 எரே 14:17 எசே 9:4 லூக் 19:41 ரோம 9:2 ரோம 9:3 |
| 137 | கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள். | சங் 99:4 சங் 103:6 சங் 145:17 உபா 32:4 எஸ்றா 9:15 நெகே 9:33 எரே 12:1 தானி 9:7 தானி 9:14 ரோம 2:5 ரோம 3:5 ரோம 3:6 ரோம 9:14 வெளிப் 15:3 வெளிப் 15:4 வெளிப் 16:7 வெளிப் 19:2 |
| 138 | நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள். | சங் 119:86 சங் 119:144 சங் 19:7-9 உபா 4:8 உபா 4:45 |
| 139 | என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என் பக்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது. | சங் 69:9 1இரா 19:10 1இரா 19:14 யோவா 2:17 |
| 140 | உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன். | சங் 119:128 சங் 12:6 சங் 18:30 சங் 19:8 நீதி 30:5 ரோம 7:12 ரோம 7:16 ரோம 7:22 1பேது 2:2 2பேது 1:21 |
| 141 | நான் சிறியவனும் அசட்டைபண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன். | சங் 22:6 சங் 40:17 நீதி 15:16 நீதி 16:8 நீதி 19:1 ஏசா 53:3 லூக் 6:20 லூக் 9:58 2கொரி 8:9 யாக் 2:5 |
| 142 | உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம். | சங் 119:144 சங் 36:6 ஏசா 51:6 ஏசா 51:8 தானி 9:24 2தெச 1:6-10 |
| 143 | இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி. | சங் 119:107 சங் 18:4 சங் 18:5 சங் 88:3-18 சங் 116:3 சங் 130:1 மாற் 14:33 மாற் 14:34 |
| 144 | உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன். | சங் 119:138 சங் 119:152 மத் 5:18 1பேது 1:23-25 |
| 145 | முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன். | சங் 119:10 சங் 61:1 சங் 61:2 சங் 62:8 சங் 86:4 சங் 102:1 சங் 142:1 சங் 142:2 1சாமு 1:10 1சாமு 1:15 எரே 29:13 |
| 146 | உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன். | சங் 119:134 நியா 10:15 நியா 10:16 மத் 1:21 தீத் 2:14 தீத் 3:4-8 |
| 147 | அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். | சங் 5:3 சங் 21:3 சங் 42:8 சங் 88:13 சங் 130:6 ஏசா 26:9 மாற் 1:35 |
| 148 | உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும். | சங் 119:62 சங் 63:1 சங் 63:6 சங் 139:17 சங் 139:18 புலம் 2:19 லூக் 6:12 |
| 149 | உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பியும். | சங் 5:2 சங் 5:3 சங் 55:2 சங் 64:1 |
| 150 | தீவினையைப் பின்பற்றுகிறவர்கள் சமீபிக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்துக்குத் தூரமாயிருக்கிறார்கள். | சங் 22:11-13 சங் 22:16-13 சங் 27:2 1சாமு 23:16 2சாமு 17:16 மத் 26:46 மத் 26:47 |
| 151 | கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை. | சங் 46:1 சங் 75:1 சங் 139:2 சங் 145:18 உபா 4:7 மத் 1:23 |
| 152 | நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தீர் என்பதை, அவைகளால் நான் நெடுநாளாய் அறிந்திருக்கிறேன். | சங் 119:144 சங் 119:160 சங் 89:34-37 சங் 111:7 சங் 111:8 பிரச 3:14 லூக் 21:33 |
| 153 | என் உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறவேன். | சங் 119:159 சங் 9:13 சங் 13:3 சங் 13:4 சங் 25:19 யாத் 3:7 யாத் 3:8 நெகே 9:32 புலம் 2:20 புலம் 5:1 |
| 154 | எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும். | சங் 35:1 சங் 43:1 1சாமு 24:15 யோபு 5:8 நீதி 22:23 எரே 11:20 எரே 50:34 எரே 51:36 மீகா 7:9 1யோவா 2:1 |
| 155 | இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள். | சங் 18:27 யோபு 5:4 ஏசா 46:12 ஏசா 57:19 எபே 2:17 எபே 2:18 |
| 156 | கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும். | சங் 51:1 சங் 86:5 சங் 86:13 சங் 86:15 1நாளா 21:13 ஏசா 55:7 ஏசா 63:7 |
| 157 | என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டுவிலகேன். | சங் 3:1 சங் 3:2 சங் 22:12 சங் 22:16 சங் 25:19 சங் 56:2 சங் 118:10-12 மத் 24:9 மத் 26:47 அப் 4:27 |
| 158 | உமது வசனத்தைக் காத்துக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது. | சங் 119:53 சங் 119:136 எசே 9:4 மாற் 3:5 |
| 159 | இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும். | சங் 119:97 சங் 119:153 2இரா 20:3 நெகே 5:19 நெகே 13:22 |
| 160 | உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். | சங் 119:86 சங் 119:138 நீதி 30:5 2தீமோ 3:16 |
| 161 | பிரபுக்கள் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என் இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது. | சங் 119:23 சங் 119:157 1சாமு 21:15 1சாமு 24:9-15 1சாமு 26:18 யோவா 15:25 |
| 162 | மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின் பேரில் மகிழுகிறேன். | சங் 119:72 சங் 119:111 எரே 15:16 |
| 163 | பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன். | சங் 119:29 சங் 119:113 சங் 119:128 சங் 101:7 நீதி 6:16-19 நீதி 30:8 ஆமோ 5:15 ரோம 12:9 எபே 4:25 வெளிப் 22:15 |
| 164 | உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன். | சங் 119:62 சங் 55:17 |
| 165 | உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை. | நீதி 3:1 நீதி 3:2 நீதி 3:17 ஏசா 32:17 ஏசா 57:21 யோவா 14:27 கலா 5:22 கலா 5:23 கலா 6:15 கலா 6:16 பிலிப் 4:7 |
| 166 | கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன். | சங் 119:81 சங் 119:174 சங் 130:5-7 ஆதி 49:18 |
| 167 | என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன். | சங் 119:6-8 சங் 119:97-8 சங் 119:111-8 சங் 119:159-8 யோவா 14:21-24 யோவா 15:9 யோவா 15:10 எபிரெ 10:16 |
| 168 | உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என் வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது. | சங் 44:20 சங் 44:21 சங் 98:8 சங் 139:3 யோபு 34:21 நீதி 5:21 எரே 23:24 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
| 169 | கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும். | சங் 119:145 சங் 18:6 2நாளா 30:27 |
| 170 | என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும். | சங் 119:41 சங் 89:20-25 ஆதி 32:9-12 2சாமு 7:25 |
| 171 | உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும். | சங் 119:7 சங் 50:23 சங் 71:17 சங் 71:23 சங் 71:24 |
| 172 | உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும். | சங் 119:13 சங் 119:46 சங் 37:30 சங் 40:9 சங் 40:10 சங் 78:4 உபா 6:7 மத் 12:34 மத் 12:35 எபே 4:29 கொலோ 4:6 |
| 173 | நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக. | சங் 119:94 சங் 119:117 ஏசா 41:10-14 மாற் 9:24 2கொரி 12:9 எபே 6:10-20 பிலிப் 4:13 |
| 174 | கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி. | சங் 119:81 சங் 119:166 ஆதி 49:18 2சாமு 23:5 நீதி 13:12 உன்ன 5:8 ரோம 7:22-25 ரோம 8:23-25 பிலிப் 1:23 |
| 175 | என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக. | சங் 9:13 சங் 9:14 சங் 30:9 சங் 51:14 சங் 51:15 சங் 118:18 சங் 118:19 ஏசா 38:19 |
| 176 | காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக; உமது கற்பனைகளை நான் மறவேன். | ஏசா 53:6 எசே 34:6 எசே 34:16 மத் 10:6 மத் 15:24 மத் 18:12 மத் 18:13 லூக் 15:4-7 யோவா 10:16 1பேது 2:25 |