இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 118

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 118:29 சங் 103:17 சங் 106:1 சங் 107:1 சங் 136:1 1நாளா 16:8 1நாளா 16:34 எரே 33:11
2அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக.சங் 115:9-11 சங் 135:19 சங் 135:20 சங் 145:10 சங் 147:19 சங் 147:20 கலா 6:16 எபிரெ 13:15 1பேது 2:9 1பேது 2:10
3அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.சங் 134:1-3 1பேது 2:5 வெளிப் 1:6 வெளிப் 4:7-11 வெளிப் 5:8-10
4அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.சங் 22:23 வெளிப் 19:5
5நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.சங் 18:6 சங் 40:1-3 சங் 77:2 சங் 107:13 சங் 107:19 சங் 116:3 சங் 116:4 சங் 120:1 சங் 130:1 சங் 130:2 ஆதி 32:7 ஆதி 32:9-11 1சாமு 30:6-8 மாற் 14:31-36
6கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?சங் 27:1-3 சங் 46:1 சங் 46:11 சங் 56:4 சங் 56:9 சங் 56:11 சங் 146:5 ஏசா 51:12 எரே 20:11 மீகா 7:8-10 ரோம 8:31 எபிரெ 13:6
7எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.சங் 54:4 சங் 55:18 1நாளா 12:18
8மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.சங் 40:4 சங் 62:8 சங் 62:9 எரே 17:5-7 மீகா 7:5-7
9பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.சங் 146:3-5 ஏசா 30:2 ஏசா 30:3 ஏசா 30:15-17 ஏசா 31:1 ஏசா 31:8 ஏசா 36:6 ஏசா 36:7 எசே 29:7
10எல்லா ஜாதியாரும் என்னை வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.2சாமு 5:1-25 2சாமு 8:1-18 2சாமு 10:1-19 சகரி 12:3 சகரி 14:1-3 வெளிப் 19:19-21 வெளிப் 20:8 வெளிப் 20:9
11என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.சங் 22:12-16 சங் 88:17 1சாமு 23:26 1நாளா 19:10
12தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.உபா 1:44
13நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவி செய்தார்.சங் 18:17 சங் 18:18 சங் 56:1-3 1சாமு 20:3 1சாமு 25:29 2சாமு 17:1-3 மீகா 7:8 மத் 4:1-11 எபிரெ 2:14
14கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.சங் 18:2 யாத் 15:2-6 ஏசா 12:2 ஏசா 45:17 ஏசா 45:22-25 மத் 1:21-23
15நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.சங் 30:11 சங் 30:12 சங் 32:11 சங் 33:1 சங் 119:54 சங் 119:111 உபா 12:12 ஏசா 51:11 ஏசா 65:13 அப் 2:46 அப் 2:47 அப் 16:34 வெளிப் 18:20 வெளிப் 19:1-5
16கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.யாத் 15:6 அப் 2:32-36
17நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.சங் 6:5 ஏசா 38:16-20 ஆபகூ 1:12 யோவா 11:4 ரோம 14:7-9
18கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.சங் 66:10-12 சங் 94:12 சங் 94:13 2சாமு 12:10 2சாமு 13:1-39 2சாமு 16:1-23 யோபு 5:17 யோபு 5:18 யோபு 33:16-30 நீதி 3:11 நீதி 3:12 யோனா 2:6 1கொரி 11:32 2கொரி 1:9-11 2கொரி 6:9 எபிரெ 12:10 எபிரெ 12:11
19நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்.ஏசா 26:2 வெளிப் 22:14
20கர்த்தரின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள்.சங் 24:3 சங் 24:4 சங் 24:7 சங் 24:9 ஏசா 26:2 ஏசா 35:8-10 வெளிப் 21:24-27 வெளிப் 22:14 வெளிப் 22:15
21நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்.சங் 22:23 சங் 22:24 சங் 69:33 சங் 69:34 சங் 116:1
22வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.மத் 21:42 மாற் 12:10 மாற் 12:11 லூக் 20:17 அப் 4:11 எபே 2:20-22 1பேது 2:4-8
23அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.அப் 2:32-36 அப் 3:14 அப் 3:15 அப் 5:31 அப் 5:32 எபே 1:19-22
24இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.சகரி 3:9 மத் 28:1-8 யோவா 20:19 யோவா 20:20 அப் 20:7 வெளிப் 1:10
25கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்.சங் 20:9 சங் 22:21 சங் 69:1 சங் 69:13
26கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.சகரி 4:7 மத் 21:9 மத் 23:39 மாற் 11:9 மாற் 11:10 லூக் 19:38 யோவா 12:13
27கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.1இரா 18:21 1இரா 18:39
28நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.சங் 145:1 சங் 146:2 யாத் 15:2 ஏசா 12:2 ஏசா 25:1 ஏசா 25:9
29கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 118:1 சங் 103:17 எஸ்றா 3:11 ஏசா 63:7
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.