| 1 | கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன். | சங் 18:1-6 சங் 119:132 மாற் 12:33 யோவா 21:17 1யோவா 4:19 1யோவா 5:2 1யோவா 5:3 |
| 2 | அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன். | சங் 55:16 சங் 55:17 சங் 86:6 சங் 86:7 சங் 88:1 சங் 145:18 சங் 145:19 யோபு 27:10 லூக் 18:1 பிலிப் 4:6 கொலோ 4:2 |
| 3 | மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன். | சங் 18:4-6 சங் 88:6 சங் 88:7 யோனா 2:2 யோனா 2:3 மாற் 14:33-36 லூக் 22:44 எபிரெ 5:7 |
| 4 | அப்பொழுது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன். | சங் 22:1-3 சங் 30:7 சங் 30:8 சங் 34:6 சங் 50:15 சங் 118:5 சங் 130:1 சங் 130:2 2நாளா 33:12 2நாளா 33:13 ஏசா 37:15-20 ஏசா 38:1-3 யோவா 2:2 |
| 5 | கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனவுருக்கமானவர். | சங் 86:5 சங் 86:15 சங் 103:8 சங் 112:4 சங் 115:1 சங் 145:8 யாத் 34:6 யாத் 34:7 நெகே 9:17 நெகே 9:31 தானி 9:9 ரோம 5:20 ரோம 5:21 எபே 1:6-8 எபே 2:4 1தீமோ 1:14 தீத் 3:4-7 |
| 6 | கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்; நான் மெலிந்துபோனேன், அவர் என்னை இரட்சித்தார். | சங் 19:7 சங் 25:21 ஏசா 35:8 மத் 11:25 ரோம 16:19 2கொரி 1:12 2கொரி 11:3 கொலோ 3:22 |
| 7 | என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு. | சங் 95:11 எரே 6:16 எரே 30:10 மத் 11:28 மத் 11:29 எபிரெ 4:8-10 |
| 8 | என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர். | சங் 56:13 சங் 86:13 |
| 9 | நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன். | சங் 61:7 ஆதி 17:1 1இரா 2:4 1இரா 8:25 1இரா 9:4 லூக் 1:6 லூக் 1:75 |
| 10 | விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகுதியும் வருத்தப்பட்டேன். | 2கொரி 4:13 எபிரெ 11:1 |
| 11 | எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன். | சங் 31:22 1சாமு 27:1 |
| 12 | கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். | சங் 51:12-14 சங் 103:2 ஏசா 6:5-8 ரோம 12:1 1கொரி 6:20 2கொரி 5:14 2கொரி 5:15 |
| 13 | இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன். | சங் 116:17 லூக் 22:17 லூக் 22:18 லூக் 22:20 1கொரி 10:16 1கொரி 10:21 1கொரி 11:25-27 |
| 14 | நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன். | சங் 116:18 சங் 22:25 சங் 56:12 சங் 66:13-15 யோனா 1:16 யோனா 2:9 நாகூ 1:15 மத் 5:33 |
| 15 | கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது. | சங் 37:32 சங் 37:33 சங் 72:14 1சாமு 25:29 யோபு 5:26 லூக் 16:22 வெளிப் 1:18 வெளிப் 14:3 |
| 16 | கர்த்தாவே, நான் உமது அடியேன்; நான் உமது அடியாளின் புத்திரனும், உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன்; என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர். | சங் 86:16 சங் 119:125 சங் 143:12 யோவா 12:26 அப் 27:23 யாக் 1:1 |
| 17 | நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன். | சங் 50:14 சங் 107:22 லேவி 7:12 எபிரெ 13:15 |
| 18 | நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும், | சங் 116:14 சங் 22:25 சங் 76:11 பிரச 5:5 |
| 19 | கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா. | சங் 96:8 சங் 100:4 சங் 118:19 சங் 118:20 சங் 122:3 சங் 122:4 சங் 135:2 2நாளா 6:6 |