இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 115

                   
புத்தகங்களைக் காட்டு
1எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்.சங் 74:22 சங் 79:9 சங் 79:10 யோசு 7:9 ஏசா 48:11 எசே 20:14 எசே 36:32 தானி 9:19 எபே 1:6 வெளிப் 4:10 வெளிப் 4:11
2அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்?சங் 42:3 சங் 42:10 சங் 79:10 யாத் 32:12 எண் 14:15 எண் 14:16 உபா 32:26 உபா 32:27 2இரா 19:10-19 யோவே 2:17
3நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.சங் 2:4 சங் 68:4 சங் 123:1 1நாளா 16:25 மத் 6:9
4அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.சங் 97:7 சங் 135:15-17 உபா 4:28 ஏசா 40:19 ஏசா 40:20 ஏசா 42:17 ஏசா 46:1 ஏசா 46:2 ஏசா 46:6 ஏசா 46:7 எரே 10:3-5 ஓசி 8:6 ஆபகூ 2:18-20 அப் 19:26 அப் 19:35 1கொரி 10:19 1கொரி 10:20
5அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
6அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
7அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
8அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.சங் 135:18 ஏசா 44:9-20 எரே 10:8 யோனா 2:8 ஆபகூ 2:18 ஆபகூ 2:19
9இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.சங் 118:2-4 சங் 135:19 சங் 135:20 யாத் 19:5
10ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.யாத் 28:1 எண் 16:5 எண் 16:40 எண் 18:7
11கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.சங் 33:18 சங் 118:4 சங் 147:11 நீதி 14:26 நீதி 30:5 அப் 10:35 வெளிப் 19:5
12கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.சங் 25:7 சங் 136:23 ஆதி 8:1 யாத் 2:24 யாத் 2:25 ஏசா 44:21 ஏசா 49:14-16 அப் 10:4
13கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்.சங் 29:11 சங் 112:1 சங் 128:1 சங் 128:4 சங் 128:5 மல்கி 3:16 மல்கி 3:17 மல்கி 4:2 லூக் 1:50 அப் 13:26 கொலோ 3:11
14கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.ஆதி 13:16 2சாமு 24:3 ஏசா 2:2 ஏசா 2:3 ஏசா 27:6 ஏசா 19:20 ஏசா 19:21 ஏசா 56:8 ஏசா 60:4-22 எரே 30:19 எரே 33:22 ஓசி 1:10 சகரி 8:20-23 சகரி 10:8 வெளிப் 7:4 வெளிப் 7:9
15வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.சங் 3:8 ஆதி 14:19 ஆதி 32:26-29 எபே 1:3 எபே 1:4 1பேது 3:9
16வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.சங் 89:11 சங் 144:5 சங் 148:4 ஏசா 66:1 புலம் 3:66 யோவா 14:2
17மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.சங் 6:5 சங் 30:9 சங் 88:10-12 ஏசா 38:18 ஏசா 38:19
18நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா.சங் 113:2 சங் 118:17-19 சங் 145:2 சங் 145:21 தானி 2:20 வெளிப் 5:13
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.