இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 112

                   
புத்தகங்களைக் காட்டு
1அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.சங் 111:1 சங் 147:1 சங் 148:11-14 சங் 150:1
2அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.சங் 25:13 சங் 37:26 சங் 102:28 ஆதி 17:7 ஆதி 22:17 ஆதி 22:18 நீதி 20:7 எரே 32:39 அப் 2:39
3ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.நீதி 3:16 நீதி 15:6 ஏசா 33:6 மத் 6:33 2கொரி 6:10 பிலிப் 4:18 பிலிப் 4:19 1தீமோ 6:6-8
4செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன்.சங் 37:6 சங் 97:11 யோபு 11:17 ஏசா 50:10 ஏசா 58:10 மீகா 7:8 மீகா 7:9 மல்கி 4:2 யோவா 12:46
5இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.நீதி 2:20 நீதி 12:2 லூக் 23:50 அப் 11:24 ரோம 5:7
6அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.சங் 15:5 சங் 62:2 சங் 62:6 சங் 125:1 2பேது 1:5-11
7துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.சங் 27:1-3 சங் 34:4 சங் 56:3 சங் 56:4 நீதி 1:33 நீதி 3:25 நீதி 3:26 லூக் 21:9 லூக் 21:19
8அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.சங் 27:14 சங் 31:24 எபிரெ 13:9
9வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.2கொரி 9:9
10துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.எஸ்தர் 6:11 எஸ்தர் 6:12 ஏசா 65:13 ஏசா 65:14 லூக் 13:28 லூக் 16:23
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.