1அல்லேலூயா, செம்மையானவர்களுடைய சங்கத்திலும் சபையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.சங் 106:1 சங் 106:48 2கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.சங் 92:5 சங் 104:24 சங் 139:14 யோபு 5:9 யோபு 9:10 யோபு 26:12-14 யோபு 38:1-41 யோபு 41:1-34 ஏசா 40:12 எரே 32:17-19 தானி 4:3 எபே 1:19 எபே 2:7-10 வெளிப் 15:3 3அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.சங் 19:1 சங் 145:4 சங் 145:5 சங் 145:10-12 சங் 145:17-12 யாத் 15:6 யாத் 15:7 யாத் 15:11 எபே 1:6-8 எபே 3:10 வெளிப் 5:12-14 4அவர் தம்முடைய அதிசயமான செய்கைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர்.சங் 78:4-8 யாத் 12:26 யாத் 12:27 யாத் 13:14 யாத் 13:15 உபா 4:9 உபா 31:19-30 யோசு 4:6 யோசு 4:7 யோசு 4:21-24 1கொரி 11:24-26 5தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.சங் 34:9 சங் 34:10 சங் 37:3 ஏசா 33:16 மத் 6:26-33 லூக் 12:30 6ஜாதிகளின் சுதந்தரத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுத்ததினால், தமது கிரியைகளின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.சங் 78:12-72 சங் 105:27-45 உபா 4:32-38 யோசு 3:14-17 யோசு 6:20 யோசு 10:13 யோசு 10:14 7அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.சங் 85:10 சங் 89:14 சங் 98:3 உபா 32:4 2தீமோ 2:13 வெளிப் 15:3 வெளிப் 15:4 8அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள்.மத் 5:18 ரோம 3:31 9அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது.சங் 130:7 சங் 130:8 யாத் 15:13 உபா 15:15 ஏசா 44:6 ஏசா 63:9 மத் 1:21 லூக் 1:68 எபே 1:7 எபே 1:14 தீத் 2:14 எபிரெ 9:12 1பேது 1:18-20 வெளிப் 5:9 10கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.யோபு 28:28 நீதி 1:7 நீதி 9:10 பிரச 12:13