இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 108

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம் பண்ணுவேன்; என் மகிமையும் பாடும்.சங் 57:7-11
2வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன்.சங் 33:2 சங் 69:30 சங் 81:2 சங் 92:1-4 நியா 5:12
3கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்.சங் 22:22 சங் 22:27 சங் 96:10 சங் 117:1 சங் 138:4 சங் 138:5 செப் 3:14 செப் 3:20
4உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது.சங் 36:5 சங் 85:10 சங் 89:2 சங் 89:5 சங் 103:11 ஏசா 55:9 மீகா 7:18-20 எபே 2:4-7
5தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.சங் 8:1 சங் 21:13 சங் 57:5 சங் 57:11 சங் 148:13 1நாளா 29:10-13
6உமது பிரியர் விடுவிக்கப்படும்பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும்.சங் 60:5-12 உபா 33:12 2சாமு 12:25 மத் 3:17 மத் 17:5 ரோம 1:7 எபே 1:6 கொலோ 3:12
7தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.சங் 89:35 சங் 89:36 ஆமோ 4:2
8கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.யோசு 13:8-11 2சாமு 2:8 2சாமு 5:5
9மோவாப் என் பாதபாத்திரம்; ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன்; பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.சங் 60:8-10 2சாமு 8:1 2சாமு 8:2 யோவா 13:8 யோவா 13:14
10அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?சங் 20:6-8 சங் 60:1 ஏசா 63:1-6 எரே 49:7-16 ஒபதி 1:3 ஒபதி 1:4
11எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா?சங் 44:9 1சாமு 29:1-31
12இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.சங் 20:1-9
13தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.சங் 18:29-34 சங் 118:6-13 சங் 144:1 2நாளா 20:12 1கொரி 15:10 எபே 6:10-18
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.