| 1 | கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. | சங் 106:1 சங் 118:1 சங் 136:1-26 1நாளா 16:34 1நாளா 16:41 2நாளா 5:13 2நாளா 7:3 2நாளா 7:6 2நாளா 20:21 |
| 2 | கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு, | சங் 31:5 சங் 130:8 யாத் 15:16 உபா 15:15 ஏசா 35:9 ஏசா 43:1 ஏசா 44:22 லூக் 1:68 லூக் 24:21 கலா 3:13 தீத் 2:14 1பேது 1:18 1பேது 1:19 |
| 3 | கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்லக்கடவர்கள். | சங் 106:47 ஏசா 11:11-16 ஏசா 43:5 ஏசா 43:6 ஏசா 49:12 எரே 29:14 எரே 31:8 எரே 31:10 எசே 36:24 எசே 39:27 வெளிப் 5:9 |
| 4 | அவர்கள் தாபரிக்கும் ஊரைக்காணாமல், வனாந்தரத்திலே அவாந்தரவழியாய், | சங் 107:40 ஆதி 21:14-16 எண் 14:33 உபா 8:15 உபா 32:10 யோபு 12:24 எசே 34:6 எசே 34:12 எபிரெ 11:38 வெளிப் 12:6 |
| 5 | பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள். | நியா 15:18 நியா 15:19 1சாமு 30:11 1சாமு 30:12 ஏசா 44:12 எரே 14:18 புலம் 2:19 மாற் 8:2 மாற் 8:3 |
| 6 | தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார். | சங் 107:13 சங் 107:19 சங் 107:28 சங் 50:15 சங் 91:15 ஏசா 41:17 ஏசா 41:18 எரே 29:12-14 ஓசி 5:15 எபிரெ 4:15 எபிரெ 4:16 |
| 7 | தாபரிக்கும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார். | சங் 77:20 சங் 78:52 சங் 136:16 எஸ்றா 8:21-23 ஏசா 30:21 ஏசா 35:8-10 ஏசா 48:17 ஏசா 49:8-11 ஏசா 63:13 ஏசா 63:14 எரே 6:16 எரே 31:9 2பேது 2:15 2பேது 2:21 |
| 8 | தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று, | சங் 107:15 சங் 107:21 சங் 107:31 சங் 81:13-16 உபா 5:29 உபா 32:29 ஏசா 48:18 |
| 9 | அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. | சங் 34:10 சங் 132:15 சங் 146:7 ஏசா 55:1-3 எரே 31:14 எரே 31:25 மத் 5:6 லூக் 1:53 வெளிப் 7:16 வெளிப் 7:17 |
| 10 | தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள், | யோபு 3:5 ஏசா 9:2 மத் 4:16 மத் 22:13 லூக் 1:79 |
| 11 | அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள். | சங் 68:6 சங் 68:18 சங் 106:43 ஏசா 63:10 ஏசா 63:11 புலம் 3:39-42 புலம் 5:15-17 |
| 12 | அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; சகாயரில்லாமல் விழுந்து போனார்கள். | யாத் 2:23 யாத் 5:18 யாத் 5:19 நியா 10:16-18 நியா 16:21 நியா 16:30 நெகே 9:37 ஏசா 51:19 ஏசா 51:20 ஏசா 51:23 ஏசா 52:5 புலம் 5:5 புலம் 5:6 லூக் 15:14-17 |
| 13 | தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார். | சங் 107:6 சங் 107:19 சங் 107:28 சங் 18:6 சங் 116:3-6 யாத் 3:7 யாத் 3:8 நியா 4:3 நியா 6:6-10 நியா 10:10-18 2நாளா 33:12 2நாளா 33:13 2நாளா 33:18 2நாளா 33:19 எரே 31:18-20 |
| 14 | அந்தகாரத்திலும் மரணஇருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி, அவர்கள் கட்டுகளை அறுத்தார். | சங் 107:10 சங் 68:6 யோபு 3:5 யோபு 10:21 யோபு 10:22 யோபு 15:22 யோபு 15:30 யோபு 19:8 யோபு 33:30 யோபு 42:10-12 ஏசா 42:16 ஏசா 49:9 ஏசா 60:1-3 எபே 5:8 1பேது 2:9 |
| 15 | கர்த்தர் வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று, | சங் 107:8 சங் 107:21 சங் 107:31 சங் 116:17-19 |
| 16 | அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. | நியா 16:3 ஏசா 45:1 ஏசா 45:2 மீகா 2:13 |
| 17 | நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும் தங்கள் அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள். | சங் 14:1 சங் 92:6 நீதி 1:22 நீதி 7:7 நீதி 7:22 |
| 18 | அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள். | யோபு 33:19-22 |
| 19 | தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார். | சங் 107:6 சங் 107:13 சங் 107:28 சங் 30:8-12 சங் 34:4-6 சங் 78:34 சங் 78:35 சங் 116:4-8 எரே 33:3 |
| 20 | அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். | சங் 147:15 சங் 147:19 2இரா 20:4 2இரா 20:5 மத் 8:8 |
| 21 | அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, | சங் 107:8 சங் 107:15 சங் 107:31 சங் 66:5 2நாளா 32:25 லூக் 17:18 |
| 22 | ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக. | சங் 50:14 சங் 116:12 சங் 116:17 லேவி 7:12 எபிரெ 13:15 1பேது 2:5 1பேது 2:9 |
| 23 | கப்பலேறி, கடல்யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே, | சங் 48:7 எசே 27:26 அப் 27:9-28 வெளிப் 18:17 |
| 24 | அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள். | சங் 95:5 சங் 104:24-27 யோபு 38:8-11 |
| 25 | அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும். | சங் 135:7 சங் 148:8 யோனா 1:4 |
| 26 | அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது. | சங் 22:14 சங் 119:28 2சாமு 17:10 ஏசா 13:7 நாகூ 2:10 |
| 27 | வெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது. | யோபு 12:25 ஏசா 19:14 ஏசா 29:9 |
| 28 | அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார். | சங் 107:6 சங் 107:13 சங் 107:19 யோனா 1:5 யோனா 1:6 யோனா 1:14 மத் 8:25 அப் 27:23-25 |
| 29 | கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. | சங் 65:7 சங் 89:9 யோனா 1:15 மத் 8:26 மாற் 4:39-41 லூக் 8:23-25 |
| 30 | அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார். | யோவா 6:21 |
| 31 | அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதியசயங்களினிமித்தமும் துதித்து, | சங் 107:8 சங் 107:15 சங் 107:21 சங் 103:2 சங் 105:1 ஓசி 2:8 யோனா 1:16 யோனா 2:9 மீகா 6:4 மீகா 6:5 ரோம 1:20 ரோம 1:21 2தீமோ 3:2 எபிரெ 13:15 |
| 32 | ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக. | சங் 18:46 சங் 46:10 சங் 99:5 சங் 99:9 யாத் 15:2 ஏசா 12:4 ஏசா 25:1 |
| 33 | அவர் ஆறுகளை அவாந்தரவெளியாகவும், நீரூற்றுகளை வறண்ட ஸ்தலமாகவும், | 1இரா 17:1-7 ஏசா 13:19-21 ஏசா 19:5-10 ஏசா 34:9 ஏசா 34:10 ஏசா 42:15 ஏசா 44:27 ஏசா 50:2 எசே 30:12 யோவே 1:20 நாகூ 1:4 செப் 2:9 செப் 2:13 |
| 34 | குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர் நிலமாகவும் மாற்றுகிறார். | ஆதி 13:10 ஆதி 13:13 ஆதி 19:25 உபா 29:23-28 ஏசா 32:13-15 |
| 35 | அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி, | சங் 114:8 எண் 21:16-18 2இரா 3:16-20 ஏசா 35:6 ஏசா 35:7 ஏசா 41:17-19 ஏசா 44:3-5 எசே 47:6-12 |
| 36 | பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி, | சங் 146:7 லூக் 1:53 |
| 37 | வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும். | ஏசா 37:30 எரே 29:5 எரே 31:5 எசே 28:26 ஆமோ 9:13-15 |
| 38 | அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகஜீவன்கள் குறையாதிருக்கப்பண்ணுகிறார். | சங் 128:1-6 ஆதி 1:28 ஆதி 9:1 ஆதி 12:2 ஆதி 17:16 ஆதி 17:20 யாத் 1:7 உபா 28:4 உபா 28:11 உபா 30:9 எரே 30:19 எசே 37:26 |
| 39 | பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள். | சங் 30:6 சங் 30:7 ஆதி 45:11 ரூத் 1:20 ரூத் 1:21 1சாமு 2:5-7 2இரா 4:8 2இரா 8:3 யோபு 1:10-17 |
| 40 | அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சிவரப்பண்ணி, வழியில்லாத அவாந்தர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து, | யோபு 12:21 யோபு 12:24 ஏசா 23:8 ஏசா 23:9 |
| 41 | எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார். | சங் 113:7 சங் 113:8 ரூத் 4:14-17 1சாமு 2:8 எஸ்தர் 8:15-17 யோபு 5:11 யோபு 8:7 யோபு 11:15-19 யோபு 42:10-12 எரே 52:31-34 யாக் 5:11 |
| 42 | உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும். | சங் 52:6 சங் 58:10 சங் 58:11 யோபு 22:19 ஏசா 66:10 ஏசா 66:11 ஏசா 66:14 |
| 43 | எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள். | சங் 28:5 சங் 64:9 ஏசா 5:12 எரே 9:12 தானி 10:12 ஓசி 14:9 |