| 1 | நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும். | சங் 28:1 சங் 35:22 சங் 35:23 சங் 83:1 ஏசா 42:14 |
| 2 | துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ளநாவினால் என்னோடே பேசுகிறார்கள். | சங் 31:13 சங் 31:18 சங் 64:3 சங் 64:4 சங் 140:3 2சாமு 15:3-8 2சாமு 17:1 நீதி 15:28 மத் 26:59-62 |
| 3 | பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள். | சங் 17:11 சங் 22:12 சங் 88:17 2சாமு 16:7 2சாமு 16:8 ஓசி 11:12 |
| 4 | என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். | சங் 35:7 சங் 35:12 சங் 38:20 2சாமு 13:39 யோவா 10:32 2கொரி 12:15 |
| 5 | நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள். | சங் 35:7-12 ஆதி 44:4 நீதி 17:13 |
| 6 | அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும், சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக. | மத் 27:4 |
| 7 | அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகக்கடவன்; அவன் ஜெபம் பாவமாகக்கடவது. | ரோம 3:19 கலா 3:10 |
| 8 | அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது; அவன் உத்தியோகத்தை வேறொருவன் பெறக்கடவன். | சங் 55:23 மத் 27:5 |
| 9 | அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள். | யாத் 22:24 எரே 18:21 புலம் 5:3 |
| 10 | அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள். | சங் 37:25 ஆதி 4:12-14 2சாமு 3:29 2இரா 5:27 யோபு 24:8-12 யோபு 30:3-9 ஏசா 16:2 |
| 11 | கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக; அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள். | யோபு 5:5 யோபு 18:9-19 யோபு 20:18 |
| 12 | அவனுக்கு ஒருவரும் இரக்கங்காண்பியாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவு செய்யாமலும்போவார்களாக. | ஏசா 27:11 லூக் 6:38 யாக் 2:13 |
| 13 | அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள்; இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக. | சங் 37:28 1சாமு 2:31-33 1சாமு 3:13 2இரா 10:10 2இரா 10:11 யோபு 18:19 ஏசா 14:20-22 எரே 22:30 |
| 14 | அவன் பிதாக்களின் அக்கிரமம் கர்த்தருக்கு முன்பாக நினைக்கப்படக்கடவது, அவன் தாயின் பாவம் நீங்காமலிருப்பதாக. | யாத் 20:5 லேவி 26:39 2சாமு 3:29 2சாமு 21:1 2சாமு 21:8 2சாமு 21:9 மத் 23:31-36 |
| 15 | அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கக்கடவது; அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாவதாக. | சங் 51:9 சங் 90:8 உபா 32:34 எரே 2:22 ஓசி 7:2 ஆமோ 8:7 |
| 16 | அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே. | 2சாமு 17:1 2சாமு 17:2 மத் 5:7 மத் 18:33-35 யாக் 2:13 |
| 17 | சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போகும். | சங் 52:4 சங் 52:5 சங் 59:12 சங் 59:13 நீதி 14:14 எசே 35:6 மத் 7:2 2தெச 2:10 2தெச 2:11 வெளிப் 16:6 |
| 18 | சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும். | சங் 73:6 யோபு 29:14 கொலோ 3:8 கொலோ 3:12 1பேது 5:5 |
| 19 | அது அவன் மூடிக்கொள்ளுகிற வஸ்திரமாகவும், நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாகவும் இருப்பதாக. | சங் 109:18 சங் 109:29 சங் 35:26 சங் 132:18 |
| 20 | இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும் பலன். | சங் 2:5 சங் 2:6 சங் 2:12 சங் 21:8-12 சங் 40:14 சங் 40:15 சங் 110:1 சங் 110:5 சங் 110:6 2சாமு 17:23 2சாமு 18:32 1இரா 2:44 லூக் 19:27 1தெச 2:15 1தெச 2:16 |
| 21 | ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும். | சங் 25:11 சங் 31:3 சங் 69:29 சங் 79:9 சங் 79:10 சங் 143:11 சங் 143:12 யோவா 17:1 பிலிப் 2:8-11 |
| 22 | நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது. | சங் 22:6 சங் 40:17 சங் 86:1 சங் 102:17-20 மத் 8:20 2கொரி 8:9 |
| 23 | சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன். | சங் 102:11 சங் 144:4 1நாளா 29:15 யோபு 14:2 பிரச 6:12 பிரச 8:13 யாக் 4:14 |
| 24 | உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது; என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது. | சங் 22:14 சங் 35:13 சங் 35:14 சங் 69:10 மத் 4:2 2கொரி 11:27 எபிரெ 12:12 |
| 25 | நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள். | சங் 31:11-13 சங் 35:15 சங் 35:16 சங் 69:9-12 சங் 69:19-12 சங் 69:20-12 ரோம 15:3 எபிரெ 12:2 எபிரெ 13:13 |
| 26 | என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி என்னை இரட்சியும். | சங் 40:12 சங் 119:86 எபிரெ 5:7 |
| 27 | இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக. | சங் 17:13 சங் 17:14 சங் 64:8 சங் 64:9 சங் 126:2 யாத் 8:19 எண் 16:28-30 1சாமு 17:46 1சாமு 17:47 1இரா 18:36 1இரா 18:37 யோபு 37:7 அப் 2:32-36 அப் 4:16 |
| 28 | அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக; உமது அடியானோ மகிழக்கடவன். | சங் 109:17 எண் 22:12 எண் 23:20 எண் 23:23 2சாமு 16:10-13 |
| 29 | என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக்கொள்ளக்கடவர்கள். | சங் 109:17-19 சங் 6:10 சங் 35:26 சங் 132:18 சங் 140:9 எரே 20:11 தானி 12:2 மீகா 7:10 |
| 30 | கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன். | சங் 7:17 சங் 9:1 சங் 22:22 சங் 22:25 சங் 71:22 சங் 71:23 சங் 108:1-3 |
| 31 | ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார். | சங் 16:8 சங் 73:23 சங் 110:5 சங் 121:5 |