இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 105

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.சங் 136:1-3 1நாளா 16:7-22 1நாளா 25:3 1நாளா 29:13 1நாளா 29:20
2அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.சங் 47:6 சங் 47:7 சங் 96:1 சங் 96:2 சங் 98:1 சங் 98:5 நியா 5:3 ஏசா 12:5 ஏசா 12:6 ஏசா 42:10-12 எபே 5:19 வெளிப் 15:3 வெளிப் 15:4
3அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.சங் 34:2 ஏசா 45:25 எரே 9:23 எரே 9:24 1கொரி 1:29 1கொரி 1:31 கலா 6:14
4கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.ஆமோ 5:4-6 செப் 2:2 செப் 2:3
5அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!சங் 77:11 சங் 103:2 உபா 7:18 உபா 7:19 உபா 8:2 உபா 32:7 ஏசா 43:18 ஏசா 43:19 லூக் 22:19 1கொரி 11:24-26
6அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.யாத் 3:6 ஏசா 41:8 ஏசா 41:14 ஏசா 44:1 ஏசா 44:2 ரோம 9:4-29
7அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.சங் 95:7 சங் 100:3 ஆதி 17:7 யாத் 20:2 உபா 26:17 உபா 26:18 உபா 29:10-15 யோசு 24:15-24
8ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,சங் 105:42 சங் 111:5 சங் 111:9 1நாளா 16:15 நெகே 1:5 தானி 9:4 லூக் 1:72-74
9அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.ஆதி 17:2 ஆதி 22:16 ஆதி 22:17 ஆதி 26:3 ஆதி 28:13 ஆதி 35:11 நெகே 9:8 அப் 7:8 எபிரெ 6:17
10அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்தியஉடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:ஆதி 17:7 ஆதி 17:8 2சாமு 23:5 எபிரெ 13:20
11உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.ஆதி 12:7 ஆதி 13:15 ஆதி 15:18 ஆதி 26:3 ஆதி 26:4 ஆதி 28:13
12அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சொற்ப ஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள்.ஆதி 34:30 உபா 7:7 உபா 26:5 ஏசா 51:2 எசே 33:24-33
13அவர்கள் ஒரு ஜனத்தைவிட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தைவிட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.
14அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்து கொண்டு:ஆதி 12:14-17 ஆதி 20:1-7 ஆதி 26:14-33 ஆதி 31:24-29 ஆதி 35:5 யாத் 7:16 யாத் 7:17
15நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.ஆதி 26:11 சகரி 2:8
16அவர் தேசத்திலே பஞ்சத்தை வருவித்து, ஆகாரமென்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார்.ஆதி 41:25-32 ஆதி 41:54-32 ஆதி 42:5 ஆதி 42:6 2இரா 8:1 ஆமோ 3:6 ஆமோ 7:1-4 ஆகா 1:10 ஆகா 1:11 ஆகா 2:17 மத் 8:8 மத் 8:9 வெளிப் 6:8
17அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.ஆதி 45:5 ஆதி 45:7 ஆதி 45:8 ஆதி 50:20
18அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.ஆதி 39:20 ஆதி 40:15 அப் 16:24
19கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.சங் 44:4 ஆதி 41:11-16 ஆதி 41:25-16 நீதி 21:1 தானி 2:30 அப் 7:10
20ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்; ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான்.ஆதி 41:14
21தன் பிரபுக்களை அவன் மனதின்படி கட்டவும், தன் மூப்பர்களை ஞானிகளாக்கவும்,ஆதி 41:40-44 ஆதி 41:55-44 ஆதி 45:8 ஆதி 45:26
22அவனைத் தன் வீட்டுக்கு ஆண்டவனும், தன் ஆஸ்திக்கெல்லாம் அதிபதியுமாக்கினான்.ஆதி 41:33 ஆதி 41:38 ஏசா 19:11
23அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான்.ஆதி 45:9-11 ஆதி 46:2-7 யோசு 24:4 அப் 7:11-15
24அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்.ஆதி 13:16 ஆதி 46:3 யாத் 1:7 உபா 26:5 அப் 7:17 எபிரெ 11:12
25தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.ஆதி 15:13 யாத் 9:16 யாத் 10:1 உபா 2:30 ரோம 9:17-19
26தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.சங் 77:20 யாத் 3:10 யாத் 4:12-14 யாத் 6:11 யாத் 6:26 யாத் 6:27 யோசு 24:5 மீகா 6:4 அப் 7:34 அப் 7:35
27இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.சங் 78:43-51 சங் 135:8 சங் 135:9 யாத் 7:1-11 உபா 4:34 நெகே 9:10 நெகே 9:11 ஏசா 63:11 ஏசா 63:12 எரே 32:20 எரே 32:21
28அவர் இருளை அனுப்பி, அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை.யாத் 10:21-23 யோவே 2:2 யோவே 2:31 லூக் 23:44 லூக் 23:45 2பேது 2:4 2பேது 2:17
29அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மச்சங்களைச் சாகப்பண்ணினார்.சங் 78:44 யாத் 7:20 யாத் 7:21 ஏசா 50:2 எசே 29:4 எசே 29:5 வெளிப் 16:3
30அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.சங் 78:45 யாத் 8:3-14 வெளிப் 16:13 வெளிப் 16:14
31அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.சங் 78:45 யாத் 8:21-24 ஏசா 7:18
32அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜூவாலிக்கிற அக்கினியை வரப்பண்ணினார்.சங் 78:47 சங் 78:48 யாத் 9:18-28 வெளிப் 8:7 வெளிப் 11:19 வெளிப் 16:21
33அவர்களுடைய திராட்சச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.வெளிப் 9:4
34அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,சங் 78:46 யாத் 10:12-15 யோவே 1:4-7 யோவே 2:25 வெளிப் 9:3-10
35அவர்களுடைய தேசத்திலுள்ள சகல பூண்டுகளையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது.
36அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார்.சங் 78:51 சங் 135:8 சங் 136:10 யாத் 4:23 யாத் 11:4 யாத் 11:5 யாத் 12:12 யாத் 12:29 யாத் 12:30 எபிரெ 11:28
37அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை.ஆதி 15:14 யாத் 3:22 யாத் 12:35 யாத் 12:36 அப் 13:17
38எகிப்தியர் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள்.யாத் 10:7 யாத் 12:33
39அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் தந்தார்.சங் 78:14 யாத் 13:21 யாத் 13:22 யாத் 14:24 எண் 9:15-22 நெகே 9:12 நெகே 9:19 ஏசா 4:5 1கொரி 10:1 1கொரி 10:2
40கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.சங் 78:18 சங் 78:26-28 யாத் 16:12 யாத் 16:13 எண் 11:4-6 எண் 11:31-33
41கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று.சங் 78:15 சங் 78:16 சங் 78:20 சங் 114:8 யாத் 17:6 எண் 20:11 நெகே 9:15 ஏசா 48:21 1கொரி 10:4
42அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து,சங் 105:8-11 ஆதி 12:7 ஆதி 13:14-17 ஆதி 15:14 யாத் 2:24 லூக் 1:54 லூக் 1:55 லூக் 1:72 லூக் 1:73
43தம்முடைய ஜனத்தைக் களிப்போடும், தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படப்பண்ணி,சங் 78:52 சங் 78:53 சங் 106:8-12 யாத் 15:13 உபா 4:37 உபா 4:38 ஏசா 63:11-14 அப் 7:36 அப் 13:17
44தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,சங் 44:2 சங் 44:3 சங் 78:55 சங் 80:8 சங் 135:10-12 சங் 136:21 சங் 136:22 யோசு 11:23 யோசு 21:43 யோசு 23:4 யோசு 24:8 யோசு 24:13 நெகே 9:22-25
45அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய ஜனங்களுடைய பிரயாசத்தின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.உபா 4:40 உபா 5:33 உபா 6:1 உபா 6:2 உபா 6:21-25 எசே 36:24-28 எபே 2:8-10 தீத் 2:14
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.