இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 104

                   
புத்தகங்களைக் காட்டு
1என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.சங் 104:35 சங் 103:1 சங் 103:2 சங் 103:22
2ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.தானி 7:9 மத் 17:2 1தீமோ 6:16 1யோவா 1:5
3தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார்.சங் 18:10 சங் 18:11 ஆமோ 9:6
4தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜூவாலைகளாகவும் செய்கிறார்.அப் 23:8 எபிரெ 1:7 எபிரெ 1:14
5பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.சங் 24:2 சங் 33:9 சங் 136:6 யோபு 26:7 யோபு 38:4-7
6அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது.ஆதி 1:2-10 ஆதி 7:19 2பேது 3:5
7அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று.ஆதி 8:1 நீதி 8:28 மாற் 4:39
8அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது.ஆதி 8:5
9அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.சங் 33:7 ஆதி 9:11-15 யோபு 26:10 யோபு 38:10 யோபு 38:11 ஏசா 54:9 எரே 5:22
10அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.சங் 107:35 உபா 8:7 ஏசா 35:7 ஏசா 41:18
11அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.சங் 145:16
12அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப்பறவைகள் சஞ்சரித்து, கிளைகள் மேலிருந்து பாடும்.சங் 104:16 சங் 104:17 சங் 50:11 சங் 84:3 சங் 148:10 மத் 6:26
13தம்முடைய மேல்வீடுகளிலிருந்து பர்வதங்களுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது.சங் 147:8 உபா 11:11 யோபு 38:25-28 யோபு 38:37-28 எரே 10:13 எரே 14:22 மத் 5:45 அப் 14:17
14பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.சங் 145:15 சங் 145:16 சங் 147:8 சங் 147:9 ஆதி 1:11 ஆதி 1:12 ஆதி 1:29 ஆதி 2:5 1இரா 18:5 எரே 14:5 எரே 14:6 யோவே 2:22
15மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார்.சங் 23:5 நியா 9:13 நீதி 31:6 பிரச 10:19 எரே 31:12 சகரி 9:15-17 மாற் 14:23 எபே 5:18
16கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும்.சங் 29:5 சங் 92:2 எண் 24:6 எசே 17:23
17அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருவிருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு.சங் 104:12 எரே 22:23 எசே 31:6 தானி 4:21 ஒபதி 1:4 மத் 13:32
18உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம்.1சாமு 24:2 யோபு 39:1
19சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும்.சங் 8:3 சங் 136:7-9 ஆதி 1:14-18 உபா 4:19 யோபு 31:26-28 யோபு 38:12 எரே 31:35
20நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும்; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும்.சங் 74:16 சங் 139:10-12 ஆதி 1:4 ஆதி 1:5 ஆதி 8:22 ஏசா 45:7 ஆமோ 1:13
21பாலசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித்தேடும்.சங் 34:10 யோபு 38:39 ஏசா 31:4 எசே 19:2-14 ஆமோ 3:4
22சூரியன் உதிக்கையில் அவைகள் ஒதுங்கி, தங்கள் தாபரங்களில் படுத்துக்கொள்ளும்.யோபு 24:13-17 நாகூ 3:17 யோவா 3:20
23அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்.ஆதி 3:19 நியா 19:16 பிரச 5:12 எபே 4:28 2தெச 3:8-12
24கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.சங் 8:3 சங் 40:5 சங் 107:31 நெகே 9:6 யோபு 5:9
25பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு.சங் 95:4 சங் 95:5 ஆதி 1:20-22 ஆதி 1:28-22 உபா 33:14-16 உபா 33:19-16
26அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு.சங் 107:23 ஆதி 49:13
27ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.சங் 36:6 சங் 136:25 சங் 145:15 சங் 145:16 சங் 147:9 யோபு 38:41 லூக் 12:24-28
28நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
29நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும்.சங் 30:7 யோபு 13:24 யோபு 34:29 ரோம 8:20-22
30நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர்.சங் 33:6 யோபு 26:13 யோபு 33:4 ஏசா 32:14 ஏசா 32:15 எசே 37:9 எபே 2:1 எபே 2:4 எபே 2:5 தீத் 3:5
31கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார்.சங் 102:16 ரோம 11:36 கலா 1:5 எபே 3:21 2தீமோ 4:18 எபிரெ 13:21 1பேது 5:11 2பேது 3:18 வெளிப் 5:12 வெளிப் 5:13
32அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்; அவர் பர்வதங்களைத் தொட, அவைகள் புகையும்.சங் 77:16 சங் 97:4 சங் 97:5 சங் 114:7 ஏசா 64:2 எரே 4:23-26 எரே 5:22 ஆமோ 8:8 நாகூ 1:5 நாகூ 1:6 ஆபகூ 3:5 ஆபகூ 3:6 ஆபகூ 3:10 வெளிப் 20:11
33நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.சங் 63:4 சங் 145:1 சங் 145:2 சங் 146:2
34நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்.சங் 1:2 சங் 63:5 சங் 63:6 சங் 77:12 சங் 119:15 சங் 119:16 சங் 119:111 சங் 119:127 சங் 119:128 சங் 119:167 சங் 139:17 சங் 139:18 நீதி 24:14
35பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற்போவார்கள். என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அல்லேலூயா.சங் 1:4 சங் 37:38 சங் 59:13 சங் 68:1 சங் 68:2 சங் 73:27 சங் 101:8 நியா 5:31 நீதி 2:22 வெளிப் 19:1 வெளிப் 19:2
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.