இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 103

                   
புத்தகங்களைக் காட்டு
1என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.சங் 103:22 சங் 104:1 சங் 146:1 சங் 146:2 லூக் 1:46 லூக் 1:47
2என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.சங் 105:5 சங் 106:7 சங் 106:21 சங் 116:12 உபா 8:2-4 உபா 8:10-14 உபா 32:6 உபா 32:18 2நாளா 32:25 ஏசா 63:1 ஏசா 63:7 எரே 2:31 எரே 2:32 லூக் 17:15-18 எபே 2:11-13
3அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,சங் 32:1-5 சங் 51:1-3 சங் 130:8 2சாமு 12:13 ஏசா 43:25 மத் 9:2-6 மாற் 2:5 மாற் 2:10 மாற் 2:11 லூக் 7:47 லூக் 7:48 எபே 1:7
4உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,சங் 34:22 சங் 56:13 சங் 71:23 ஆதி 48:16 யோபு 33:19-30 வெளிப் 5:9
5நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது.சங் 23:5 சங் 63:5 சங் 65:4 சங் 104:28 சங் 107:9 சங் 115:15 சங் 115:16 1தீமோ 6:17
6ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.சங் 9:9 சங் 10:14-18 சங் 12:5 சங் 72:4 சங் 72:12 சங் 109:31 சங் 146:7 உபா 24:14 உபா 24:15 யோபு 27:13-23 நீதி 14:31 நீதி 22:22 நீதி 22:23 நீதி 23:10 ஏசா 14:4-32 ஏசா 14:17-19 ஏசா 58:6 ஏசா 58:7 எரே 7:6-15 எசே 22:7 எசே 22:12-14 மீகா 2:1-3 மீகா 3:2-4 யாக் 2:6 யாக் 5:1-6
7அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார்.சங் 77:20 சங் 105:26-45 யாத் 19:8 யாத் 19:20 யாத் 20:21 யாத் 24:2-4 எண் 12:7 உபா 34:10 நெகே 9:14 ஏசா 63:11 ஏசா 63:12 யோவா 5:45-47 அப் 7:35-60
8கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.சங் 86:5 சங் 86:15 சங் 130:7 சங் 145:8 யாத் 34:6 யாத் 34:7 எண் 14:18 உபா 5:10 நெகே 9:17 ஏசா 55:7 எரே 32:18 ரோம 5:20 ரோம 5:21 எபே 1:7 எபே 1:8
9அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.சங் 30:5 ஏசா 57:16 எரே 3:5 மீகா 7:18 மீகா 7:19
10அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.சங் 130:3 எஸ்றா 9:13 நெகே 9:31 யோபு 11:6 புலம் 3:22 தானி 9:18 தானி 9:19 ஆபகூ 3:2
11பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.சங் 36:5 சங் 57:10 சங் 89:2 யோபு 22:12 நீதி 25:3 ஏசா 55:9 எபே 2:4-7 எபே 3:18 எபே 3:19
12மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்.சங் 50:1 சங் 113:3 ஏசா 45:6
13தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.எண் 11:12 உபா 3:5 நீதி 3:12 ஏசா 63:15 ஏசா 63:16 எரே 31:9 எரே 31:20 மத் 6:9 மத் 6:32 லூக் 11:11 லூக் 11:12 லூக் 15:21 லூக் 15:22 யோவா 20:17 எபிரெ 12:5-11
14நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.சங் 78:38 சங் 78:39 சங் 89:47
15மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான்.சங் 90:5 சங் 90:6 ஏசா 40:6-8 ஏசா 51:12 யாக் 1:10 யாக் 1:11 1பேது 1:24
16காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது.யோபு 27:20 யோபு 27:21 ஏசா 40:7
17கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.சங் 89:1 சங் 89:2 சங் 100:5 சங் 118:1 சங் 136:1-26 எரே 31:3 ரோம 8:28-30 எபே 1:4-8 எபே 2:4-7 2தெச 2:13 2தெச 2:14 2தீமோ 1:9
18அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.சங் 25:10 சங் 132:12 ஆதி 17:9 ஆதி 17:10 யாத் 19:5 யாத் 24:8 உபா 7:9 2நாளா 34:31 எபிரெ 8:6-13
19கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.சங் 2:4 சங் 9:7 சங் 11:4 சங் 115:3 ஏசா 66:1 எபிரெ 8:1
20கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.சங் 148:2 லூக் 2:13 லூக் 2:14 வெளிப் 19:5 வெளிப் 19:6
21கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.சங் 33:6 ஆதி 32:2 யோசு 5:14 1இரா 22:19 2நாளா 18:18 லூக் 2:13
22கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி.சங் 145:10 சங் 148:3-12 சங் 150:6 ஏசா 42:10-12 ஏசா 43:20 ஏசா 44:23 ஏசா 49:13 வெளிப் 5:12-14
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.