| 1 | சர்வவல்லவருக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன? | சங் 31:15 பிரச 3:17 பிரச 8:6 பிரச 8:7 பிரச 9:11 பிரச 9:12 ஏசா 60:22 தானி 2:21 லூக் 21:22-24 அப் 1:7 அப் 17:26 1தெச 5:1 1தீமோ 4:1 1தீமோ 6:15 2பேது 2:3 2பேது 3:7 2பேது 3:8 |
| 2 | சிலர் எல்லைக்குறிப்புகளை ஒற்றி, மந்தைகளைப் பலாத்காரமாய்ச் சாய்த்துக்கொண்டுபோய் பட்சிக்கிறார்கள். | உபா 19:14 உபா 27:17 நீதி 22:28 நீதி 23:10 ஓசி 5:10 |
| 3 | தாய் தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய், விதவையின் மாட்டை ஈடாக எடுத்துக்கொள்ளுகிறார்கள். | யோபு 22:6-9 யோபு 31:16 யோபு 31:17 உபா 24:6 உபா 24:10-13 உபா 24:17-21 1சாமு 12:3 |
| 4 | தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் ஏகமாய் ஒளித்துக்கொள்ளத்தக்கதாக, எளிமையானவர்களை வழியை விட்டு விலக்குகிறார்கள். | யோபு 24:14 யோபு 31:16 சங் 109:16 நீதி 22:16 நீதி 30:14 ஏசா 10:2 எசே 18:12 எசே 18:18 எசே 22:29 ஆமோ 2:7 ஆமோ 8:4-6 மீகா 2:1 மீகா 2:2 |
| 5 | இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்; வனாந்தரவெளிதான் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆகாரம் கொடுக்கவேண்டும். | யோபு 39:5-7 எரே 2:24 ஓசி 8:9 |
| 6 | துன்மார்க்கருடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுப்பு அறுத்து, அவனுடைய திராட்சத்தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள். | உபா 28:33 உபா 28:51 நியா 6:3-6 மீகா 6:15 |
| 7 | குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால், வஸ்திரமில்லாமல் இராத்தங்கி, | யோபு 24:10 யோபு 22:6 யோபு 31:19 யோபு 31:20 யாத் 22:26 யாத் 22:27 உபா 24:11-13 ஏசா 58:7 அப் 9:31 |
| 8 | மலைகளிலிருந்துவரும் மழைகளிலே நனைந்து, ஒதுக்கிடமில்லாததினால் கன்மலையிலே அண்டிக்கொள்ளுகிறார்கள். | உன்ன 5:2 |
| 9 | அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப்பறித்து, தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகுவாங்குகிறார்கள். | 2இரா 4:1 நெகே 5:5 |
| 10 | அவனை வஸ்திரமில்லாமல் நடக்கவும், பட்டினியாய் அரிக்கட்டுகளைச் சுமக்கவும், | உபா 24:19 ஆமோ 2:7 ஆமோ 2:8 ஆமோ 5:11 ஆமோ 5:12 |
| 11 | தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும், தாகத்தவனமாய் ஆலையாட்டவும்பண்ணுகிறார்கள். | உபா 25:4 எரே 22:13 யாக் 5:4 |
| 12 | ஊரில் மனுஷர் தவிக்கிறார்கள், குற்றுயிராய்க்கிடக்கிறவர்களின் ஆத்துமா கூப்பிடுகிறது; என்றாலும், தேவன் அதைக் குற்றமாக அவர்கள்மேல் சுமத்துகிறதில்லை. | யாத் 1:13 யாத் 1:14 யாத் 2:23 யாத் 2:24 யாத் 22:27 நியா 10:16 சங் 12:5 பிரச 4:1 ஏசா 52:5 |
| 13 | அவர்கள் வெளிச்சத்துக்கு விரோதமாய் நடக்கிறவர்களின் கூட்டத்தார்; அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும், அவருடைய பாதைகளில் தரிக்காமலும் இருக்கிறார்கள். | லூக் 12:47 லூக் 12:48 யோவா 3:19 யோவா 3:20 யோவா 9:39-41 யோவா 15:22-24 ரோம 1:32 ரோம 2:17-24 யாக் 4:17 |
| 14 | கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து, சிறுமையும் எளிமையுமானவனைக் கொன்று, இராக்காலத்திலே திருடனைப்போல் திரிகிறான். | 2சாமு 11:14-17 சங் 10:8-10 மீகா 2:1 மீகா 2:2 எபே 5:7-11 |
| 15 | விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற வேளைக்குக் காத்திருந்து: என்னை ஒரு கண்ணும் காணமாட்டாதென்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான். | யாத் 20:14 2சாமு 11:4-13 2சாமு 12:12 சங் 50:18 நீதி 6:32-35 நீதி 7:9 நீதி 7:10 |
| 16 | அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இருட்டிலே கன்னமிடுகிறார்கள்; அவர்கள் வெளிச்சத்தை அறியார்கள். | யாத் 22:2 யாத் 22:3 எசே 12:5-7 எசே 12:12-7 மத் 24:43 |
| 17 | விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது; அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்தோடு பழகியிருக்கிறான். | யோபு 3:5 சங் 73:18 சங் 73:19 எரே 2:26 2கொரி 5:10 2கொரி 5:11 வெளிப் 6:16 வெளிப் 6:17 |
| 18 | நீரோட்டத்தைப்போல் தீவிரமாய்ப் போவான்; தேசத்தில் அவன் பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால், அவன் திராட்சத்தோட்டங்களின் வழியை இனிக்காண்பதில்லை. | சங் 58:7 சங் 73:18-20 ஏசா 23:10 |
| 19 | வறட்சியும் உஷ்ணமும் உறைந்த மழையைப் பட்சிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளைப் பட்சிக்கும். | யோபு 6:15-17 |
| 20 | அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்; புழு திருப்திகரமாய் அவனைத் தின்னும்; அவன் அப்புறம் நினைக்கப்படுவதில்லை; அக்கிரமமானது பட்டமரத்தைப்போல முறிந்துவிழும். | யோபு 17:14 யோபு 19:26 |
| 21 | பிள்ளைபெறாத மலடியின் ஆஸ்தியைப் பட்சித்துவிட்டு, விதவைக்கு நன்மை செய்யாதேபோகிறான். | 1சாமு 1:6 1சாமு 1:7 |
| 22 | தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பாரிசமாக்குகிறான்; அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் பிராணனைப்பற்றி நிச்சயமில்லை. | எஸ்தர் 3:8-10 தானி 6:4-9 யோவா 19:12-16 வெளிப் 16:13 வெளிப் 16:14 வெளிப் 17:2 |
| 23 | தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், அதின்மேல் உறுதியாய் நம்பிக்கை வைக்கிறான்; ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது. | சங் 73:3-12 எரே 12:1-3 |
| 24 | அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து, காணாமற்போய், தாழ்த்தப்பட்டு, மற்ற எல்லாரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள். | யோபு 20:5 சங் 37:10 சங் 37:35 சங் 37:36 சங் 73:19 சங் 92:7 யாக் 1:11 யாக் 5:1-3 |
| 25 | அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, என் வார்த்தைகளை வியர்த்தமாக்கத்தக்கவன் யார் என்றான். | யோபு 9:24 யோபு 11:2 யோபு 11:3 யோபு 15:2 |