வேதாகமத்தை வாசி

Click to Subscribe

ஏசாயா 15

                   
புத்தகங்களைக் காட்டு
1மோவாபைப் பற்றிய திருவாக்கு: ஒரே இரவில் ஆர் நகரம் அழிக்கப்படுவதால் மோவாபும் அழிக்கப்படும். ஒரே இரவில் கீர் நகரம் அழிக்கப்படுவதால், மோவாபும் அழிக்கப்படும்.
2தீபோன் குடும்பத்தார் அழுது புலம்ப உயர்ந்த இடங்களுக்கு ஏறிச் செல்கின்றனர்: நெபோ, மேதாபா நகரங்களைக்குறித்து மோவாபு அலறி அழுகின்றது: அவர்கள் அனைவரின் தலைகளும் மழிக்கப்பட்டதாயிற்று. தாடிகள் அனைத்தும் சிரைக்கப்பட்டதாயிற்று.
3அதன் தெருக்களில் நடமாடுவோர் சணல் ஆடை உடுத்தி இருக்கின்றனர்: வீட்டு மாடிகளிலும் பொது இடங்களிலும் உள்ள யாவரும் ஓலமிட்டு அழுகின்றனர். விழிநீர் ததும்பிவழியத் தேம்பித் தேம்பி அழுகின்றனர்.
4எஸ்போன் மற்றும் எலயாலே ஊரினர் கூக்குரலிடுகின்றனர். யாகசு ஊர்வரை அவர்களின் குரல் கேட்கின்றது: படைக்கலம் தாங்கிய மோவாபிய வீரர்கள் கதறுகின்றார்கள், ஒவ்வொருவனும் மனக்கலக்கம் அடைகிறான்.
5மோவாபுக்காக என் நெஞ்சம் குமுறுகின்றது: அதன் அகதிகள் சோவாருக்கும் எக்லத்செலிசியாவுக்கும் ஓடுகின்றனர்: ஏனெனில் அவர்கள் லூகித்துக்கு ஏறிப்போகும் வழியில் அழுதுகொண்டு செல்கின்றனர்: ஒரோனயிம் சாலையில் அழிவின் அழுகுரலை எழுப்புகின்றனர்:
6நிம்ரியின் நீர்நிலைகள் தூர்ந்து போயின: புல் உலர்ந்தது: பூண்டுகள் கருகின: பசுமை என்பதே இல்லாமற் போயிற்று.
7ஆதலால் தாங்கள் மிகுதியாக ஈட்டியவற்றையும் சேமித்து வைத்தவற்றையும் தூக்கிக் கொண்டு அவர்கள் அராவிம் ஆற்றைக் கடக்கின்றனர்.
8மோவாபின் எல்லையெங்கும் கதறியழும் குரல் எட்டுகின்றது: அவர்களின் அவலக்குரல் எக்லயிம் நகர்வரை கேட்கின்றது: அவர்களின் புலம்பல் பெயேர் ஏலிம் நகரை எட்டுகின்றது.
9தீபோன் நீர்நிலைகள் இரத்தத்தால் நிரம்பி வழிகின்றன: ஆயினும் தீபோன் மேல் இன்னும் மிகுதியான துன்பத்தைக் கொண்டு வருவேன்: மோவாபியருள் தப்பிப் பிழைத்தோர்மேலும் நாட்டில் எஞ்சியிருப்போர்மேலும் சிங்கத்தை ஏவிவிடுவேன்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.