வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 137

                   
புத்தகங்களைக் காட்டு
1பாபிலோனின் நதிகளின் அருகே நாங்கள் அமர்ந்து சீயோனை நினைத்தவாறே அழுதோம்.
2அருகேயிருந்த அலரிச்செடிகளில் எங்கள் கின்னரங்களைத் தொங்கவிட்டோம்.
3பாபிலோனின் எங்களைப் பிடித்தவர்கள் எங்களைப் பாடச் சொன்னார்கள். அவர்கள் எங்களிடம் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடச் சொன்னார்கள். சீயோனைக் குறித்துப் பாடல்களைப் பாடச் சொன்னார்கள்.
4ஆனால் வெளிநாட்டில் நாங்கள் கர்த்தருடைய பாடல்களைப் பாட முடியவில்லை!
5எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால், நான் என்றும் பாடலை பாடமாட்டேன் என்று நம்புகிறேன்.
6எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால், நான் என்றும் பாடேன். நான் உன்னை ஒருபோதும் மறக்கமாட்டேனென வாக்களிக்கிறேன்.
7ஆண்டவரே ஏதோமியர்களை நினையும். எருசலேம் வீழ்ந்த நாளில் அவர்கள், “அதைத் தரைமட்டமாக இடித்து அழித்துவிடுங்கள்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
8பாபிலோனே நீ அழிக்கப்படுவாய்! நீ பெற வேண்டிய தண்டனையை அளிக்கும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். எங்களை நீ துன்புறுத் தியதைப்போல் உன்னையும் துன்புறுத்துகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
9உனது குழந்தைகளை இழுத்துச்சென்று, அவர் களைப் பாறையில் மோதி அழிக்கிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.